Search
  • Follow NativePlanet
Share
» »ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

மனிதன் யோசிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவனுக்கு இருக்கும் தீராத ஏக்கங்களில் ஒன்று வானத்தில் பறவையை போல சிறகடித்து ஆனந்தமாக பறக்க முடியாதா என்பதே. கால மாற்றத்தில் அறிவியல் ரீதியான முன்னேற்றங்கள் விமானம் போன்ற பறக்கும் சாத்தியங்களை உருவாக்கிய போதும் அந்த ஏக்கம் திருப்தி பெறவில்லை.

ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

Photo: Flickr

விமானத்தில் போவதும் கூட ஏதோ ஒரு பெட்டிக்குள் அமர்து கொண்டு மிதப்பது போல தான் இருந்தது. பறவை போல சிறகடித்து பறக்க வேண்டும். என்ன செய்யலாம் ?. விமான பயணம் போல ரொம்பவும் அலுப்பூட்டுவதாக இல்லாமல் சாகசம் நிறைந்ததாக, சந்தோசம் தருவதாக இருக்க வேண்டும். அப்படி யோசித்த மனிதன் கண்டுபிடித்த ஒன்று தான் பரா கிளைடிங் எனப்படும் சாகச விளையாட்டாகும்.

வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த இந்த விளையாட்டு சமீப காலமாக இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. உயரமான அதே சமயம் காற்றோட்டம் அதிகம் உள்ள இடத்தில் மட்டுமே இந்த விளையாட்டு சாத்தியப்படும்.

ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

Photo: Flickr

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காம்ஷேத் என்ற இடம் இந்த விளையாட்டுக்கு உகந்த இடமாக பிரபலமாகி வருகிறது. புனே நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற மலைவாசச்தலங்கலான கண்டாலா மற்றும் லோனவ்லாவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது. குக்கிராமமான இந்த காம்ஷேத் எப்போதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

Photo: FLickr

இங்கு அக்டோபர் மாதத்தில் இருந்து மே மாதம் வரை இங்கு அதிக காற்றோட்டம் இருப்பதால் அந்த கால கட்டத்தில் இந்த விளையாட்டில் ஆர்வமுடைய பலரும் இங்கு வந்து பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சாகத்தில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு பயிற்சியளிக்கும் பள்ளிகளும் இங்கே நிறைய இருக்கின்றன.

ரெக்கை கட்டி பறக்கலாம் வாங்க...

Photo: Flickr

பார கிளைடிங் மட்டும் இல்லாமல் ட்ரெக்கிங் போகவும் இது நல்லதொரு இடமே. அதோடு இங்கே வடிவாளி என்றொரு அழகான எரியும், ஆதி மனிதர்கள் வாழ்ந்த குகைகள் போன்ற இடங்களும் இங்கே உண்டு. காம்ஷேத் நகரை எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Read more about: adventure pune kamshet maharashtra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X