Search
  • Follow NativePlanet
Share
» »ஆக்ராவிற்கு சுற்றுலா போய்ட்டு கண்டிப்பா இத தவறவிட்டுடாதிங்க..!!

ஆக்ராவிற்கு சுற்றுலா போய்ட்டு கண்டிப்பா இத தவறவிட்டுடாதிங்க..!!

ஆக்ராவிற்கு சுற்றுலா போய்ட்டு கண்டிப்பா இத தவறவிட்டுடாதிங்க..!!

By Sabarish

ஆக்ராவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலரும் அங்குள்ள தாஜ்மகாலை மட்டுமே குறிப்பிட்டு காணச்செல்வது வழக்கம். ஆனால், உலகப்புகழ்பெற்ற தாஜ்மகாலைத் தவிர இன்னும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் ஆக்ராவைச் சுற்றுயுள்ள நகரில் காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு சுற்றுலாத் தலத்தைதான் இக்கட்டுரையின் வாயிலாக காணப்போகிறோம்.

ராஜஸ்தான் அருகே, வரலாற்று ஆய்வுகளுக்கு உட்பட்டு வரும் இடங்களில் ஒன்றுதான் பரத்பூர். இங்கு மறைந்துள்ள கற்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும், இயற்கை கொஞ்சும் தேசியப் பூங்காவும் இப்பகுதி முழுவதும் நிறைந்தே காணப்படுகிறது.

பொதுவாக இப்பகுதி சுற்றுலா பயணிகளின் மத்தியில் பிரபலமானவை என்றாலும் வரலாற்று ஆய்வாலர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் விருப்பமான பகுதியாக உள்ளது. பரத்பூரின் ஒரு பக்கத்தில் நீங்கள் தேசிய பூங்காவில் வண்ணமயமான பறவைகளின் அழகுமிக்க காட்சிகளை ரசிக்கலாம். பரத்பூர் வரலாற்றின் அஸ்திவாரமான கோட்டையின் வழியாகச் சென்று, அதன் புராணக் கதைகளை மறுபரிசீலனை செய்யலாம்.

இத்தகைய சிறப்புகள் மிக்க பாரத்பூருக்கு பயணம் மேற்கொள்ள நீங்கள் விரும்பினால் அதை எப்படி திட்டமிடுவது ? வரலாற்று நகரம் பாரத்பூரில் பார்க்க பிரதான இடங்கள் பின்வருமாறு:-

பரத்பூர் கோட்டை

பரத்பூர் கோட்டை

ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகவும் நேர்த்தியான கட்டிட கலைநயமிக்க கோட்டை பரத்பூர் கோட்டை. சுராஜ் மால் மன்னரால் கட்டப்பட்ட இது ரோஹாகர் கோட்டை என்னும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. பாதுகாப்புமிக்க கடினமான சுவர்கள் மற்றும் ஆழமான கரையுடன் உள்ள இந்த அரண்மனை அதன் புகழ்பெற்ற கடந்தகால கதையை இப்போது காணம்போதும் கூறுகிறது.

முகலாயர்களின் தாக்குதல் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொண்டு இன்று வலிமை குந்ததாக இக்கோட்டை காட்சியளிப்பதால் இரும்புக் கோட்டை என்றும் அறிஞர்களால் புகழ்பாடப்படுகிறது. எதிரிகளின் படையெடுப்புகளால் கூட அசைக்க முடியாமல் தனது அழகை சிறிதும் இழக்காத பரத்பூர் கோட்டை வளாகத்தின் உள்ளே கம்ரா மஹால் தற்போது அரசு தொல்பொருள் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கே பயணிப்போர், கிஷோரி மஹால், ஜவஹர் புர்ஜ், கோத்தி காஸ், பதே புர்ஜ் மற்றும் மோட்டி மஹால் போன்ற நினைவுச் சின்னங்களை தவறாமல் காண வேண்டும்.

Anupom sarmah

பரத்பூர் அரண்மனை

பரத்பூர் அரண்மனை

ராஜ்புட் மற்றும் முகாலய கட்டிடக் கலைகளின் கலவையில் கட்டப்பட்டுள்ள பரத்பூர் கோட்டையில் சமாதானமாக அமைந்திருக்கும் இந்த பரத்பூர் அரண்மனை வரலாற்று நகரத்தின் மிக அழகான பகுதியாகும். தோட்டங்கள் மற்றும் அமைதியான சூழலில் சூழப்பட்டிருக்கும் பரத்பூர் அரண்மனையின் ஒவ்வொரு பாவனையும் அதன் மகிழ்ச்சிகரமான காட்சிகளும், எதிரொளிப்பு அரங்குகளும் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

Anupom sarmah

கேவலாதேவ் தேசிய பூங்கா

கேவலாதேவ் தேசிய பூங்கா

இராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்கா முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியிலேயே புகழ்பெற்ற பறவைகள் சரணாலயமாகவும் இந்தப் பூங்கா விளங்குகின்றது.

வண்ணமயமான பறவைகள் மற்றும் தாவரங்களால் நிறைந்த இந்த இயற்கை அழகைப் புறக்கணிக்க யாராலும் முடியாத ஒன்றாகும். சிறிய பூங்காவாக இது காட்சியளித்தாலும், அண்டை மாநிலம் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் புலம் பெயர்ந்து வரும் பறவைகள் இங்கு பிரபலமானவை. இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கேவலாதேவ் தேசிய பூங்கா 1985-ஆம் ஆண்டு யுனெசுகோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Anupom sarmah

பரத்பூர் அரண்மனை- கேவலாதேவ் தேசிய பூங்கா

பரத்பூர் அரண்மனை- கேவலாதேவ் தேசிய பூங்கா

பரத்பூர் அரண்மனையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது இந்த கேவலாதேவ் தேசிய பூங்கா. அப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாக இது விளங்குவதால் அரண்மனையின் வளாகத்தில் இருந்து பூங்காவிற்கு வர தனியார் வாடகை வாகனங்களும் அல்லது பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நடைபயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் என்றால் கோட்டையின் லோஹியா கேட்டின் வழியாக வெளியேறி ஸ்வரன் ஜெயந்தி நகர் வழியாக மிக எளிதாகவும் இந்த பூங்காவை அடையலாம்.

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

பரத்பூர் கோட்டையின் வளாகத்தில் உள்ள இந்த அரசு அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பால்வாந்த் மகாராஜாவால் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு கச்சஹ்ரி கலன் என்ற பெயரில் நிர்வாக அலுவலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்தப் பகுதி 1944-ஆண்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. இந்த காட்சியகத்தில் முந்தைய ஆட்சியாளர்களின் ஓவியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள அழகிய தோட்டம் இந்த இடத்திற்கு மேலும் அழகு மற்றும் கவர்ச்சியினை சேர்க்கிறது. இதன் காரணமாகவே பரத்பூர் பயணிகள் அதிகம் இந்த இடத்தினை தேர்வு செய்கின்றனர்.

Saurabh Mishra

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது


ஆக்ராவில் இருந்து பரத்பூர் செல்ல திட்டமிட்டால் பிச்புரி, கைரோளி, ஃபதேபூர் சிக்ரி வழியாக செல்வது சிறந்தது. காரணம், இந்த 60 கிலோ மீட்டர் பயணத்தில் இன்னும் ஏராளமான காணவேண்டிய இடங்கள் உள்ளன.

 ஃபதேபூர் சிக்ரி மசூதி

ஃபதேபூர் சிக்ரி மசூதி

ஆக்ரா என்றவுடன் அனைவரது மனதிலும் முதலில் வந்து செல்வது தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டையே, ஆனால், அதே ஆக்ராவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் முகலாயக் கட்டிடக் கலைக்கு ஆதாரமான சின்னமொன்றும் உள்ளது.

ஆக்ராவை ஆட்சிசெய்த அக்பர் தனது வெற்றிகளின் அடையாளமாக 1569 ஆம் ஆண்டு ஃபதேபூர் சிக்ரியை நிர்மாணித்தார். இதன் பிரமிப்பூட்டும் நுழைவாயில் மனதில் ஒருவித நிசப்தத்தை ஏற்படுத்துகின்றன. தொர்ந்து, அந்த நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்கு கட்டப்பட்டுள்ள மசூதி முகலாயர்களின் கட்டிடக்கலையை சுமந்து நிற்கின்றன.
Diego Delso

பரத்பூர் செல்ல சிறந்த நேரம்

பரத்பூர் செல்ல சிறந்த நேரம்

பரத்பூர் பகுதி சற்று வெட்பம் நிறைந்த பெரும்பகுதி வறண்ட காலநிலையை கொண்டுள்ளது. எனவே, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பரத்பூர் நகருக்குச் சுற்றுலா செல்வது ஏற்றது. இந்த காலகட்டத்தில் வெட்பத்தின் தாக்கம், தட்பவெட்ப நிலை சற்று உகந்ததாக இருக்கும். கோடை காலம், பருவமழை, வெப்பம் மற்றும் கடுமையான சூழலைக் கொண்ட காலத்தில் பரத்பூருக்கு செல்லாது தவிர்ப்பது நல்லது.

Anupom sarmah

Read more about: agra travel delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X