Search
  • Follow NativePlanet
Share
» »ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஃபதேஹாபாத். ஆரியர்கள் இந்தியா வந்தபோது சரஸ்வதி மற்றும் திரிஷத்வதி நதிக்கரைகளில் தஞ்சமடைந்து பின் தங்கள் முகாம்களை ஹிசார், ஃபதேஹாபாத் வரையில் நீட்டித்துக் கொண்டார்கள். புராணங்களிலும் குறிப்பிடப்படும் இவ்வூர் நந்தா சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. ஃபதேஹாபாத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகா தூண்களின் மூலம் இது மவுரிய சாம்ராஜ்யத்தின் பகுதி என்றும் கூறப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகள் இந்தியாவின் பழங்கால நாகரீகங்களையும், கலாச்சாரங்களையும் எடுத்துரைப்பதாக உள்ளன. தற்போதைய ஃபதேஹாபாத் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பவரால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதற்கு தன் மகன் பெயரான ஃபதே கானில் இருந்து இப்பெயரைச் சூட்டினார்.

ஃபதேஹாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

michael clarke stuff

ஃபதேஹாபாத் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஃபதேஹாபாதில் இருக்கும் அசோக மன்னரால் கட்டப்பட்ட லட் எனப்படும் கல் தூண், ஆரம்பத்தில் ஹன்சி அல்லது அக்ரோஹாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அமைந்துள்ளது, அசோகரின் கீர்தி ஸ்தாம்ப் எனப்படும் அத்தூணின் கீழ்ப்பாகம் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பவரால் ஃபதேஹாபாத் கொண்டுவரப்பட்ட இன்னொரு தூண் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஹுமாயூன் பாதுஷாவால் 1526ல் துவங்கி 1536ல் கட்டிமுடிக்கப்பட்ட கட்டப்பட்ட ஹுமாயூன் மசூதி இங்கு உள்ளது. மன்னர் இங்கு தன் தொழுகைகளை நிகழ்த்தியதால் இம்மசூதி இங்கு கட்டப்பட்டது. குனால் பகுதியில், சரஸ்வதி நதியின் கரையில் உள்ள மணம் மேடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய இடமாக இது கருதப்படுகிறது. பனாவாலி என்றும் வனாவாலி என்றும் அழைக்கப்படும் தொல்பொருள் மணல் மேடு ஃபதேஹாபாதில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ளது. 10மீட்டர் உயரமுள்ள இம்மணல் மேடு ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் கிமு2800-2300 மற்றும் கிமு2300-1800 வரையிலான ஏராளமான அரிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
ஃபதேஹாபாத் செல்ல சிறந்த பருவம்

செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மிதமான வானிலை நிலவுவதால் அங்கு செல்ல அம்மாதங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஃபதேஹாபாத்தின் போக்குவரத்து வசதி

சாலை மற்றும் ரயில் மூலம் ஃபதேஹாபாத் மற்ற ஊர்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.

    Read more about: fatehabad
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X