Search
  • Follow NativePlanet
Share
» »உங்க பெஸ்ட் பிரண்டுடன் நீங்க கண்டிப்பாக போக வேண்டிய 5 இடங்கள்

உங்க பெஸ்ட் பிரண்டுடன் நீங்க கண்டிப்பாக போக வேண்டிய 5 இடங்கள்

அற்புதமான இடத்திற்கு பயணம் செல்வது எப்போதுமே குதுகலம் தரும் ஒரு விஷயம். அதுவும் நம்முடைய சிறந்த நண்பர்களுடன் என்றால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். கடற்கரைகளில் பார்டி கொண்டாடுவதோ அல்லது சீறிப்பாயும் நதியில் சாகச படகு சவாரியில் ஈடுபடுவதோ எதுவாக இருந்தாலும் நண்பர்களுடன் செய்யும் போது வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்கமுடியாத அனுபவங்களாக அவை இருக்கும்.

வாருங்கள், நம்முடைய சிறந்த நண்பர்களுடன் நாம் கண்டிப்பாக செல்லவேண்டிய 5 இடங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

இந்தியாவில் நண்பர்களுடன் சென்று கொண்டாட சூப்பரான இடமென்றால் சந்தேகமே இல்லாமல் அது கோவா தான். இந்தியாவின் பார்டிகளின் தலைநகரம்' என்று செல்லமாக அழைக்கப்படும் கோவாவின் அழகான கடற்கரைகளில் நள்ளிரவிலும் பார்டியில் ஈடுபடலாம்.

Photo:Arden

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

கோவாவில் ஏராளமான கடற்கரைகள் இருந்தாலும் பார்டி கொண்டாட்டத்திற்கு பிரபலமான இடம் நார்த் கோவாவில் இருக்கும் அஞ்சுனா பீச் ஆகும். இரவு 10:00 மணிக்கு மேல் 'ட்ரான்ஸ்' இசை அதிர, வண்ண விளக்குகள் மாயாஜாலம் செய்ய விடிய விடிய இங்கே கூத்தடிக்கலாம்.

Photo:

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் புத்தாண்டுக்கு முந்தைய வாரம் 'சன் பர்ன்' பீச் பார்டி நடக்கிறது. வகடோர் கடற்கரையில் நடக்கும் இந்த பார்டி தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய இசைத் திருவிழாவாக குறிப்பிடப்படுகிறது.

photo:

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பார்டி திருவிழாவிற்கு உலகத்தின் தலைசிறந்த டீஜேக்கள் வருகின்றனர். மூன்று நாட்களும் விடியவிடிய பார்டி செய்திட விரும்புகிறவர்கள் வரும் புத்தாண்டை சன் பர்ன் பார்டியுடன் சேர்த்து கொண்டடிடுங்கள். கோவாவை பற்றிய இன்னும் அதிக விவரங்களை பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரையில் பாராசெய்லிங் என்னும் சாகச விளையாட்டிலும் ஈடுபடலாம்.

Photo: Flickr

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரைகள் :

கோவா கடற்கரையில் மாலை நேரத்தில் அற்புதமான சூரிய அஸ்தமனம்.

Photo:Eustaquio Santimano

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

சீறிப்பாயும் கங்கை ஆற்றில் மிதவை படகில் அமர்ந்தபடி சாகச படகு பயணம் செல்வதென்பது சாகசங்களின் உச்சம் எனலாம். மிகவும் ஆபத்து மிகுந்த இந்த சாகசமும் நண்பர்களுடன் சேர்ந்தது செய்யும் போது கொண்டாட்டமானதாக மாறிவிடுகிறது. 27 கி.மீ தொலைவுள்ள இந்த சாகச படகு பயணம் நண்பர்களுடன் சாகசங்களில் ஈடுபட விரும்புகிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

Photo: Flickr

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே அறியப்பட்டு வாய்ந்த ரிஷிகேஷில் சமீப காலமாக ராப்டிங் எனப்படும் சாகச படகு சவாரியும், பங்கீ ஜம்பிங் எனப்படும் காலில் கயிறு கட்டிக்கொண்டு உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. நண்பர்களுடன் சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் உடனே ரிஷிகேஷ் கிளம்புங்கள்.

Photo: Flickr

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி :

உயரமான இடத்தில் இருந்துகாலில் கயிறு கட்டிக்கொண்டுகுதிக்கும்விளையாட்டான பங்கீ ஜம்பிங்.

Photo:Jeremy Keith

இந்திய - பாகிஸ்தான் எல்லை, வாகா :

இந்திய - பாகிஸ்தான் எல்லை, வாகா :

வேறெங்குமே கிடைக்கப்பெறாத புதுமையான, உணர்ச்சிமயமான அனுபவத்தை பெற விரும்புகிறவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய ஓரிடம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லை தான். இங்கே தினமும் மாலை கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது கிட்டத்தட்ட 25,000 மக்கள் எல்லையின் இருபுறமும் கோஷம் எழுப்புவது உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

Photo:Callaway d1nonly1

இந்திய - பாகிஸ்தான் எல்லை, வாகா :

இந்திய - பாகிஸ்தான் எல்லை, வாகா :

இந்த இடத்திற்குள் எந்த விதமான உணவுப் பொருட்களோ, பைகளையோ, செல் பேசிகளையோ கொண்டு செல்ல அனுமதியில்லை. பஞ்சாப் தலைநகரான அம்ரித்சரில் இருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்திற்கும் இந்த இடத்திற்கு நண்பர்களுடன் நிச்சியம் சென்று வாருங்கள்.

Photo:Kamran Ali

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

சாகசம், பார்டி, கொண்டாட்டம் எல்லாம் தாண்டி நண்பர்களுடன் அமைதியாக, இயற்கையின் பேரழகை ரசித்தபடி சில நாட்களை புத்துணர்வுடன் செலவிட விரும்புகிறவர்கள் செல்ல வேண்டிய சொர்க்க பூமி தான் அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருக்கும் ஹெவ்லொக் தீவு ஆகும். இவ்வளவு அழகான இடங்கள் கூட இந்தியாவில் இருக்கின்றனவா என்று நம்மை மெய்மறக்கச் செய்யும் இடமாகும் இந்த ஹெவ்லொக் தீவு.

Photo:Sankara Subramanian

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த தீவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது ராதா நகர் கடற்கரையாகும். ஆசியாவிலேயே மிக சுத்தமான கடற்கரை என்று பெருமை இந்த கடற்கரைக்கே சொந்தமானதாகும். வானமே பூமிக்கு வந்துவிட்டது போன்ற மாய தோற்றத்தை உண்டாக்கும் நீலக்கடல், மாசுபடாத வெள்ளை மணல் கடற்கரை, அதிலே யானை மீது சவாரி செய்தபடி ஆனந்தமாக கொண்டாடலாம்.

photo:senorhorst Jahnsen

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த ஹெவ்லொக் தீவு பற்றிய மேலதிக தகவல்களை தமிழின் முதன்மை பயண வழிகாட்டியான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Dr. K. Vedhagiri

மனாலி - லடாக், உன்னத சாலைப் பயணம் :

மனாலி - லடாக், உன்னத சாலைப் பயணம் :

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லெஹ் வரையிலான 475 கி.மீ தூர சாலைப்பயணம் இந்தியாவின் மிகச்சிறந்த சாலைப் பயணமாகும். கல்லூரி நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ளலாம்.

Photo:Indianwanderlust

மனாலி - லடாக், உன்னத சாலைப் பயணம் :

மனாலி - லடாக், உன்னத சாலைப் பயணம் :

வழியெங்கும் இமய மலையின் அற்புதமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான பனி இல்லாத நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலை திறந்திருக்கிறது. மணாலியில் இருந்து லஹால், ஸ்பிதி, சன்ச்கர் பள்ளத்தாக்குகள் வழியாக லெஹ்வை அடைகிறது இந்த தேசிய நெடுஞ்சாலை 3.

நண்பர்களுடன் இங்கே குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு சென்று மகிழுங்கள். திரும்பி வருகையில் வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத நினைவுகளை கொண்டுவாருங்கள்.

Photo:Atishayphotography

Read more about: goa ladak rishikesh punjab havelock
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X