Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் ஐந்து மிக வினோதமான சுற்றுலாத்தலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் இருக்கும் ஐந்து மிக வினோதமான சுற்றுலாத்தலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

பரந்துவிரிந்த இந்திய நாட்டில் விசித்திரங்களுக்கும், விநோதங்களுக்கும் எப்போதுமே பஞ்சம் கிடையாது. இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் ஏராளமான ஆன்மீக ஸ்தலங்கள், இயற்கை கணிடங்கள், பழமையான நகரங்கள், மனிதனால் கட்டப்பட்ட கட்டிடங்கள் போன்றவற்றின் பின்னணியில் பல விசித்திரங்கள் ஒளிந்திருக்கின்றன. இவை எப்படி தோன்றின?, இவ்விடங்களின் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? என்பது போன்ற விடைகாண முடியாத கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியாவிலிருக்கும் விசித்திரங்களும், விநோதங்களும் நிரம்பிய எல்லா இடங்களையும் சென்று பார்ப்பது இயலாத காரியமென்பதால் இந்தியாவில் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய ஐந்து மிக விசித்திரமான இடங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

காந்த மலை - லடாக் :

காந்த மலை - லடாக் :

இந்தியாவில் நீண்ட தூர வாகன ஓட்டிகளின் சொர்கமாக திகழும் லடாக்கில் இருக்கும் ஓர் இயற்கை அதிசயம் தான் 'Magnetic Hills' என்றழைக்கப்படும் காந்த மலை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 14,000அடி உயரத்தில் லெஹ்-கார்கில்- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் காந்த மலை அமைந்திருக்கிறது.

இயற்கை விதிகளுக்கு முரணான செயல் ஒன்று நடக்கும் இந்த காந்த மலைக்கு ஒவ்வொரு வருடமும் உலகம் முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான மோட்டார் வாகன ஓட்டிகள் காந்த மலைக்கு வருகை தருகின்றனர்.

காந்த மலை - லடாக் :

காந்த மலை - லடாக் :

பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படையான சக்திகளில் காந்த சக்தியும் ஒன்று. இந்த காந்த சக்தி பூமியின் ஒருசில இடங்களில் அதிக வீரியத்துடன் வெளிப்படுகிறது. அப்படி அதிக காந்த சக்தி வெளிப்படும் இடங்களில் ஒன்று தான் இந்த காந்த மலை ஆகும்.

அதிக காந்த சக்தி வெளியாவதன் காரணமாக இங்க பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்லும் போது acceleration இல்லாமல் அவை தானாகவே மணிக்கு 20கி.மீ வேகத்தில் நகர்கின்றன.

காந்த மலை - லடாக் :

காந்த மலை - லடாக் :

இந்திய திபெத் எல்லையில் அமைந்திருக்கும் இந்த இடத்தின் மேல் பறக்கும் ராணுவ விமானங்கள் கூட அதிக காந்த சக்தியின் ஈர்ப்பில் இருந்து தப்பிக்க மிக வேகமாக பறக்கின்றன.

அதிக காந்த சக்தியின் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மட்டுமில்லாமல் கார்களும் கூட மேடான சாலையில் தானாக மேல் நோக்கி செல்வதை நாம் பார்க்கலாம்.

காந்த மலை - லடாக் :

காந்த மலை - லடாக் :

காந்த மலை மட்டுமில்லாது லடாக்கில் இருக்கும் எல்லா சாலைகளுமே அற்புதமான பயண அனுபவத்தை நமக்கு தருபவை ஆகும்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் இருந்து லடாக் வரையிலான சாலைப்பயணம் நிச்சயம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய பயணங்களில் ஒன்றாகும்.

காந்த மலை - லடாக் :

காந்த மலை - லடாக் :

இமய மலையின் உன்னதமான இயற்கை அழகை முழுமையாக ரசிக்க விரும்புகிறவர்கள் லடாக்கிற்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

லடாக்கில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்களும், அங்கே உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்வது பற்றிய விவரங்களும் தமிழ் பயண வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி :

இந்தியாவில் இருக்கும் மிகவும் விசித்திரமான இடங்களில் ஒன்று தான் இமய மலைத்தொடரில் இருக்கும்ரூபகுண்ட் ஏரி ஆகும்.உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியில் இன்றுவரை யாராலும் விளக்க முடியாத ஒரு மர்மம் இருக்கிறது.

Djds4rce

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி :

குளிர் காலம் முழுக்க உறைந்திருக்கும் இந்த ஏரிக்கு கோடைகாலத்தில் சென்றால் ஏரியினுள்ளே குவியல் குவியலாக எலும்புக்கூடுகளை பார்க்கலாம். 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயே சிப்பாய் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏரியில் எங்கிருந்து இந்த எலும்புக்கூடுகள் வந்தன என்பதை பற்றி பல்வேறு கதைகள் உலாவருகின்றன.

Schwiki

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி பற்றி சொல்லப்படும் ஒரு கதையின்படி கனுஜ் மாகாணத்தின் அரசர் ராஜ ஜாஸ்தாவலும், ராணி பலம்பா மற்றும் அவர்களது பணியாட்கள் நந்தாதேவி கோயிலுக்கு வழிபாடு நடத்த செல்கையில் பனிப்புயலில் அகப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் தான் இன்றும் அழியாமல் இருக்கின்றன என சொல்லப்படுகிறது.

இந்த இடத்தை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் இங்கிருக்கும் எலும்புக்கூடுகள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி :

இரண்டு மீட்டர் ஆழம் உள்ள இந்த ஏரியில் எலும்புக்கூடுகளை மிக தெளிவாக நாம் பார்க்க முடியும். இந்த எலும்புக்கூடுகளுடன் தோல் செருப்புகள், மர சாமான்கள் மற்றும் இரும்பினால் ஆன ஈட்டிகள் போன்றவற்றையும் நாம் காண முடியும்.

இங்கிருக்கும் மர்மத்தையும் தாண்டிரூபகுண்ட் ஒரு அற்புதமான டிரெக்கிங் ஸ்தலமாக திகழ்கிறது. உறைய வைக்கும் குளிர் நிலவும் குளிர் காலத்திலும், காணுமிடமெல்லாம் பசுமை சூழ்ந்திருக்கும் கோடை காலத்திலும் இங்கே மலையேற்றத்தில் ஈடுபடலாம்.

Utsav Verma

ரூபகுண்ட் ஏரி :

ரூபகுண்ட் ஏரி :

மாசற்ற இயற்கை அழகை கொண்டிருக்கும்ரூபகுண்டின் ஒரு அழகிய புகைப்படம்.

Utsav Verma

குட்டி தாஜ்மஹால் :

குட்டி தாஜ்மஹால் :

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.

கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. அப்படிப்பட்ட தாஜ் மஹாலை போன்றே அரிதானதொரு கட்டிடம் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஔரெங்காபாத் நகரில் அமைந்திருக்கிறது.

குட்டி தாஜ்மஹால் :

குட்டி தாஜ்மஹால் :

ராணி மும்தாஜின் மகனும், ஷாஹ் ஜஹானுக்கு பிறகு முகலாய சக்கரவர்த்தியாக முடிசூடிய பேரரசர் ஔரங்கசீப் அவர்களால் தனது முதல் மனைவி தில்ராஸ் பானு பேகமின் நினைவாக 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டிருக்கிறது இந்த குட்டி தாஜ்மஹால்.

குட்டி தாஜ்மஹால் :

குட்டி தாஜ்மஹால் :

ஷாஹ் ஜகானுக்காக தாஜ் மஹாலை வடிவமைத்த தலைமை சிற்பியான உஸ்தாத் அஹமத் லஹுரி என்பவரின் மகனான அத்ஹா - உல்லாஹ் என்பவரே ஷாஹ் - ஜஹானின் மகனான ஔரங்கசீபுக்காக இந்த குட்டி தாஜ் மஹாலை வடிவமைத்திருக்கிறார்.

இந்த கட்டிட வளாகத்தினுள்ளே ஒரு மசூதி ஒன்றும் அமைந்திருக்கிறது.

குட்டி தாஜ்மஹால் :

குட்டி தாஜ்மஹால் :

ஏழைகளின் தாஜ் மஹால் என்றும் அழைக்கப்படும் இந்த பிபி கி மொகுபராவினுள்ளே மன்னர் ஒவ்ரங்கசீபின் மனைவியின் சமாதி இருக்கிறது.இந்த கட்டிடத்தை கட்ட அந்தக்காலத்திலேயே 7 லட்சம் ருபாய் செலவு செய்திருக்கின்றனர்.

குட்டி தாஜ்மஹால் :

குட்டி தாஜ்மஹால் :

ஔரங்கசீப் தன் தந்தையான ஷாஹ் ஜஹானை அவரது கடைசி காலத்தில் சிறை வைத்திருந்தாலும் அவர் கட்டியது போன்றே தானும் இப்படி ஒரு கட்டிடத்தை கட்டியிருப்பது மிகப்பெரிய வரலாற்று முரண்களில் ஒன்று.

மலானா :

மலானா :

கி.மு 326 ஆம் ஆண்டு பாதி உலகத்தை கைப்பற்றிய பின்னர் தனது கனவு தேசமான இந்தியாவை படையெடுத்து வந்த அலெக்சாண்டரின் படையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேல் இருந்திருகின்றனர். அவர்களில் ஒரு படையணி மட்டும் அவர்களின் சொந்த நாடான கிரேக்கத்திற்கு திரும்பி செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி விட்டார்களாம்.

அவர்களின் சந்ததிகள் என்று தங்களை அழைக்கும் ஒரு சிறு பழங்குடியின மக்கள் இன்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் வெளி உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட மலானா என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மலானா :

மலானா :

வெளி ஆட்கள் மலானவிற்கு வர ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் அதனால் தீண்டதாகதவர்கள் என இங்கு வாழும் மக்கள் கருதுவதால் இந்த கிராமத்தில் உள்ள எந்த பொருளையோ, சுவற்றையோ வெளியாட்கள் தொட அனுமதி இல்லை.

மலானா :

மலானா :

மேலும் அப்படி தவறி செய்தால் அதற்க்கு தண்டனையாக ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்தி ஆடு ஒன்றை பலி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட பாதை தவிர வேறெதிலும் வெளியாட்கள் நடக்க கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இங்கே உண்டு. அதனால் இங்கே செல்பவர்கள் மிக கவனமாக இருப்பது அவசியம்.

மலானா :

மலானா :

வெளி உலகத்துடன் தொடர்பற்ற இந்த கிராமம் சந்தரகனி மற்றும் டியோடிப்பா ஆகிய மலைகளுக்கு நடுவே மலான நதிக்கரையில் அமைந்திருக்கிருக்கும் இங்கு தான் உலகின் முதல் குடியரசு ஆட்சி முறை கடைபிடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

மலானா :

மலானா :

மொழி, உருவ அமைப்பு, பண்பாடு என சகல விதத்திலும் மலானா கிராமம் இதற்க்கு அருகில் இருக்கும் மற்ற பழங்குடி கிராமத்தினரிடம் இருந்து மாறுபட்டே இருக்கிறது. இந்த கிராமத்தில் கனாஷி என்னும் மொழி பேசப்படுகிறது. அருமையான இயற்க்கை சூழலுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த கிராமத்திற்கு கொஞ்சம் துணிவும், விசித்திரங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமும் இருந்தால் நிச்சயம் ஒரு முறை சென்று வாருங்கள்.

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து முடித்தாகிவிட்டது என்று நினைப்பவரா நீங்கள்?. அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தாகிவிட்டது.

நம்ம தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் கொலுக்குமலை என்ற இடம் இன்னும் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலமாகவே இருந்து வருகிறது. தூய்மையான இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த கொலுக்குமலை ஒரு சொர்க்கம்.

Motographer

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் சிறு மலைக்கிராமமான கொலுக்குமலை தான் உலகிலேயே 'டீ' பயிரிடப்படும் மிக உயரமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Motographer

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

மூணாரில் இருந்து சூரிய நெல்லி என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து வாடகை கார் மூலம் கொலுக்குமலையை அடையலாம்.சூரிய நெல்லயில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.

monsieur paradis

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலையில் நாம் கண்டிப்பாக தவற விடக்கூடாத விஷயங்களில் முக்கியமானது இங்கு நிகழும் சூரிய உதயமாகும். அதிகாலையில் பனிவிலகாத பசுந்தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் கைக்குழந்தையின் உள்ளங்கை போன்ற இளஞ்சிவப்பு நிறத்தை சூரியன் பரப்பும் காட்சி வார்த்தைகளில் அடங்காதது.

monsieur paradis

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Ramya Bhuthalingam

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X