Search
  • Follow NativePlanet
Share
» »ஹஜிபுர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஜிபுர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஜிபுர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஜிபுர் பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும், மேலும் இந்த நகரம் அதன் அபரிமிதமான வாழை வளத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பீகாரில் உள்ள மிகவும் முற்போக்கான நகரங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. ஹஜிபுர், சுற்றுலா பயணிகளின் வரைபடத்தில் மிக முக்கியமான இடமாக மாறிவிட்டது. இங்கு இந்திய ரயில்வேயின் அதி நவீன இரயில் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த நகரத்தின் தெற்கில் கங்கை ஆறும், மேற்கே நாராயணி மற்றும் கன்டாக் ஆறும் பாய்ந்து ஒடுவது, அழகு மிக்க இந்த நகரத்தின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. இந்த நகரம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் லிட்சிஸ் மற்றும் வாழை பழங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது.

வங்காள அரசர் ஹாஜி இலியாஸ் ஷா என்பவரால் ஹஜிபுர் நகரம் உருவாக்கப்பட்டது. பண்டைய காலங்களில் இந்த நகரம் உக்கசல என அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

ஹஜிபுர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

A. J. T. Johnsingh

ஹஜிபுர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

ஹஜிபுர் உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை தன்னுள் ஈர்க்கிறது. இங்குள்ள மிகப் பிரம்மாண்டமான கோவில்கள், சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. அவற்றுள் ராம்செளஹர மந்திர், கோன் ஹாரா காட், நேபாளி மந்திர், மகாத்மா காந்தி சேது, ஹிலாபஜாரில் இருக்கும் மகா பிரபுஜி பைதக்ஜி, ஸோனெபுர் சந்தை மற்றும், வைஷாலி மஹாஉத்சவம் போன்றவை மிகப் பிரபலமானவை.

ஹஜிபுரை எவ்வாறு அடைவது?

ஹஜிபுரை மூன்று விதமான போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி எளிதாக அடையமுடியும் என்றாலும், இந்த நகரத்தை அடைய நான்கு விதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஹஜிபுரில், கிழக்கு மத்திய ரயில்வேயின் மண்டல தலைமையகம் உள்ளதால், இது மிகச் சிறந்த ரயில் இணைப்பை பெற்றிருக்கின்றது. இந்த நகரத்திற்கு மிக அருகில் பாட்னா விமான நிலையம் உள்ளது. அது ஹஜிபுருடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வைரக்கல்லாக, ஹஜிபுருக்கு மற்றொரு போக்குவரத்து வசதி உள்ளது. இந்த நகரம் ஹஜிபுர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

ஹஜிபுர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Abhishek Singh

ஹஜிபுருக்கு சுற்றுலா செல்ல சிறந்த நேரம்

ஹஜிபுர் ஆறுகளால் சூழப்பட்டு இருப்பதால், இந்த இடம் ஒரு மிதமான வானிலையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. ஹஜிபுருக்கு சுற்றுலா செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமே மிகவும் சிறந்ததாகும். ஹஜிபுரில் விடுமுறையை கழிக்க விரும்பும் பயணிகள், இங்குள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த இடங்களை பார்த்து ஹஜிபுர் சுற்றுலாவை அனுபவித்து மகிழலாம். குளிர்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்தில் இங்கு சுற்றுலா வருவது மிகவும் சிறந்தது. ஏனெனில் அப்பொழுது இங்கு இனிமையான காலநிலை நிலவுகின்றது. ஆண்டின் பிற மாதங்களில் அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப் பொழிவு நிலவுவதால், சுற்றுலா பயணிகள் ஆண்டின் பிற மாதங்களில் இங்கு சுற்றுலா வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    Read more about: hajipur
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X