Search
  • Follow NativePlanet
Share
» »கஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

By Staff

கஜுராகோ சிற்பங்கள் காமத்தின் அழகியலுக்கும், கட்டுமானக் கலைக்கும் உலகப்புகழ் பெற்றது.

யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களில் ஒன்று இந்த கஜுராகோ கோவில்கள்.

Khajuraho1

இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்று.

கஜுராகோ சந்டெல்லா அரசவையின் கலாச்சார தலைநகரம். கஜுராகோவைச் சுற்றி அரணாக, 8 நுழைவு/வெளியேறும் கதவுகள் இருந்தன. இந்த ஒவ்வொரு கதவும் இரண்டு பேரிச்சை மரங்கள் இடையில் இருந்தன. ஹிந்தியில் கஜுரா என்றால் பேரிச்சை. அதனால்தான் கஜுராகோ என்று அழைக்கப்படுகிறது.

சந்டெல்லா அரசவை காலத்தில் - 950 - 1050'ஆம் வருடத்தில், கஜுராகோ கோவில்கள் கட்டப்பட்டன. பொலிவான இளஞ்சிவப்பு, மஞ்சள் மணகற்களைக் கொண்டு கட்டப்பட்டது கஜுராகோ கோவில்கள்.

ஒரு காலத்தில் 85க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன, இயற்கை சீற்றத்தால் அதில பல சிதிலமடைந்து இப்போது 22 கோவில்கள் மட்டுமே இருக்கின்றன.

Khajuraho2

கஜுராகோ என்றாலே காமத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் என்று தவறுதலான கண்ணோட்டம் பலரிடம் இருக்கிறது. உண்மையில் 10% அளவே இது போல் சிற்பங்கள் இருக்கின்றன மீது ஏனைய சிற்பங்கள் - அந்தக் கால வாழ்க்கை முறையை பிரதிபலிப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குயவர்கள் மண் பாண்டங்கள் செய்வது, விவசாயிகள் உழுவது, இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை வாசிப்பது போன்று நிறைய சிற்பங்கள் இருக்கின்றன.

இந்திய தொல்லியல் துறை, கஜுராகோ சிற்பங்களை சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்காலத்து இந்திய சிற்பங்கள் என்று சான்றிதழ் அளித்திருக்கிறது.

கஜுராகோ கோவில்கள் - மேற்கு, கிழக்கு, தெற்கு என்று மூன்று விதமாக பிரிந்திருக்கின்றன.

Khajuraho3

20'ஆம் நூற்றாண்டில்தான் கஜுராகோ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டன‌.

கோவிலின் உள்ளே இருக்கும் அறைகள் கிழக்கு-மேற்கு திசையில் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு அறைக்கும் நுழைவாயில், கருவறை இருக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X