Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகாவின் ஊட்டி என்றழைக்கப்படும் அற்புத சுற்றுலாத்தலம் எது தெரியுமா?

கர்நாடகாவின் ஊட்டி என்றழைக்கப்படும் அற்புத சுற்றுலாத்தலம் எது தெரியுமா?

By Super Admin

மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

தமிழ்நாட்டில் இருக்கும் ஏறத்தாழ எல்லா மலை வாசஸ்தலங்களுக்கும் சென்றாகிவிட்டது இனி புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா உங்களுக்கு?. வட இந்தியாவில் நாம் பார்த்திராத சுற்றுலாத்தலங்கள் அதிகம் உண்டு என்றாலும் கிடைக்கும் சில நாட்கள் விடுமுறை அந்த இடங்களுக்கு சென்றுவரவே சரியாக இருக்கும். சுற்றிப்பார்க்க நேரமே இருக்காது.

சரி, எங்கே போவது?. இந்த கேள்விக்கான பதில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து 330கி.மீ தொலைவில் இருக்கும் குதுரேமுக் என்ற இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடம் தான்.

குதுரேமுக்:

குதுரேமுக்:

கர்னாடக மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டத்தில்குதுரேமுக் அமைந்துள்ளது. மேற்குக்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இங்கே இருக்கும் சிகரத்தின் உச்சிப்பகுதி குதிரையின் முகம் போலவே இருப்பதால்தான் இந்த இடத்திற்கு 'குதுரேமுக்' என்ற பெயர் வந்திருக்கிறது.

குதுரேமுக்:

குதுரேமுக்:

இயற்கை வனப்பு மிகுந்த பகுதியான குதுரேமுக்கில் இருக்கும் குதுரேமுக் தேசிய பூங்கா தான் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய தேசியப்பூங்காவாகும்.

குதுரேமுக்கில் வருடத்திற்கு 700செ.மீ மழைப்பொழிவு இருப்பதால் எப்போதுமே பசுமையாக காட்சியளிக்கிறது.

solarisgirl

குதுரேமுக்:

குதுரேமுக்:

மேற்குத்தொடர்ச்சி மலையில் மலபார் பகுதிக்கு அடுத்தபடியாக சிங்கவால் குரங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாக குதுரேமுக் தேசிய பூங்கா திகழ்கிறது.

இவற்றை பாதுக்காக்கும் பொருட்டு தான் 1987ஆம் ஆண்டு குதுரேமுக் வனப்பகுதி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

solarisgirl

குதுரேமுக்:

குதுரேமுக்:

குதுரேமுக்கில் இருக்கும் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால் இங்கிருக்கும் சிகரத்தில் மரங்களே இல்லை என்பது தான்.

இந்த சிகரத்தில் இருக்கும் அதிகளவிலான குறைந்த தர மேக்னிடைட் மண் இருப்பதே மரங்கள் வளராததற்கு காரணம் ஆகும்.

Rahul Ravindra

குதுரேமுக் - சுற்றுலா அம்சங்கள்:

குதுரேமுக் - சுற்றுலா அம்சங்கள்:

தமிழகத்தில் இருக்கும் ஊட்டி கொடைக்கானலை போல விதவிதமான சுற்றுலாத்தலங்கள் இல்லை. என்றாலும் மனிதனால் அதிகம் மாசுபடாத மலையேற்றப்பாதைகள் குதுரேமுக்கில் உண்டு.

கிட்டத்தட்ட 13 மலையேற்றப்பாதைகள் குதுரேமுக்கில் இருக்கின்றன.

solarisgirl

அபூர்வ சக்திகள் கொண்ட 10 மர்மகோயில்கள் இந்தியாவுல தானுங்க!

மலையேற்றப்பாதைகள்:

மலையேற்றப்பாதைகள்:

குதுரேமுக்கில் இருக்கும் ஐந்து முக்கிய மலையேற்றப்பாதைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

1.சம்சே-குதுரேமுக்-சம்சே இந்த பாதையில் மலையேற்றம் செய்ய 4 பகல் 3 இரவுகள் ஆகும். மொத்த தொலைவு 40கி.மீ.

2. நவூர்-ஹெவலா-குதுரேமுக்-நவூர் 60கி.மீ தொலைவுடைய இந்த பாதையில் மலையேற்றத்தை முடிக்க 5 பகல் 4 இரவுகள் ஆகும்.

Jayashree B

மலையேற்றப்பாதைகள்:

மலையேற்றப்பாதைகள்:

3. நவூர்-குதுரேமுக்-சம்சே 50 கி.மீ தொலைவுடைய இந்த பாதையில் ட்ரெக்கிங் செய்து முடிக்க 5 பகல் 4 இரவுகள் ஆகும்.

4. ஹொரநாடு-ஸ்ரிநேக்ரி 30 கி.மீ தொலைவுடைய இந்த பாதையில் மலையேற்றம் செய்ய மூன்று பகல் இரண்டு இரவுகள் ஆகும்.

5. குதுரேமுக்கில் இருக்கும் கேம்ப்பில் தங்கி குதுரேமுக் சிகரம் வரை குறைந்த தூரம் ட்ரெக்கிங் போய் வரலாம்.

solarisgirl

கல்லணையின் பின் மறைந்துள்ள மர்மங்கள் தெரியுமா?

முன் அனுமதி:

முன் அனுமதி:

குதுரேமுக் சிகரத்திற்கு செல்ல காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. அதற்கு பிறகு இங்கே நாம் சுற்றிக்கொண்டிருந்தால் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம்.

solarisgirl

ஹனுமன குண்டி அருவி:

ஹனுமன குண்டி அருவி:

குதுரேமுக்கில் இருந்து 18கி.மீ தொலைவில் உள்ளதுஹனுமன குண்டி அருவி. இங்கே கிட்டத்தட்ட நூறு அடி உயரத்தில் இருந்து நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த அருவியை அடைய சில கி.மீ தூரம் ட்ரெக்கிங் செய்ய வேண்டும். இந்த அருவியில் குளிப்பது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் விஷயமாக இருக்கும்.

solarisgirl

குதுரேமுக்கில் எங்கே தங்குவது?

குதுரேமுக்கில் எங்கே தங்குவது?

குதுரேமுக்கில் தங்குவதற்கு அரசு விடுதிகள் உண்டு மற்றும் சில தனியார் ஹோட்டல்கள் இருக்கின்றன. அதைப்பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

netlancer2006

சைக்கிளிங்:

சைக்கிளிங்:

வார இறுதி நாட்களில் பெங்களூரில் வேலை செய்யும் பலரும் குதுரேமுக் வந்து இயற்கையை ரசித்தபடியே சைக்கிளிங் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

வாய்ப்புக்கிடைத்தால் நீங்களும் நிச்சயம் குதுரேமுக் வந்து சுற்றிப்பாருங்கள்.

Abhijit Shylanath

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X