Search
  • Follow NativePlanet
Share
» »மகாபாரதம் நடந்த புண்ணிய பூமி - குருக்ஷேத்திரம்

மகாபாரதம் நடந்த புண்ணிய பூமி - குருக்ஷேத்திரம்

இந்தியாவின் இரண்டு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது குருக்ஷேத்திரத்தில் 18 நாட்கள் நடைபெற்ற யுத்தமாகும். இது நடந்த இடமாக சொல்லப்படும் குருக்ஷேத்திரம் இன்றைய ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. சிறப்புவாய்ந்த ஆன்மீக சுற்றுலாத்தளமாக விளங்கும் இங்கே நாம் செல்ல என்னவெல்லாம் இடங்கள் இருக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஜோதிஷர் :

புகைப்படம்: Ravinder M A

இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையின் பிறப்பிடமாக இந்த இடம் கருதப்படுகிறது. இங்கே இருக்கும் ஒரு அரசமரத்தின் கீழ் தான் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் கீதையை போதித்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் குருஷ்ஹ்ஷேத்திரப்போர் நடந்த காலத்தில் இருந்து இருப்பதாக சொல்லப்படும் குளம் ஒன்றும் உள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் மகாபாரத்தக்கதைகளை மையப்படுத்தி நாடக நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. தவிர தினமும் இங்கு கண்ணைக்கவரும் ஒலி-ஒளி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இங்கு வரும் பக்த்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக தாங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் நிறையவே உள்ளன.

இந்த இடம் குருஷ்ஷேத்திரா - பெஹோவா சாலையில் தநேசரில் இருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

ஷ்தநேஷ்வர் மகாதேவ் கோயில் :

புகைப்படம்: Natesh Ramasamy

குருக்ஷேத்திரத்துக்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இந்த ஷ்தநேஷ்வர் மகாதேவ் கோயில். இந்தக்கோயிலில் தான் பாண்டர்வகளும், பகவான் கிருஷ்ணரும் மகாபாரத யுத்தத்தில் வெற்றிபெற சிவபெருமானை வணங்கியதாக கோயிலின் தல புராணம் கூறுகிறது.

இந்தக்கோயிலை ஒட்டியே கோயில் குளமும் உள்ளது. அதோடு இந்தியாவில் உள்ள ஐம்பத்தியொரு ஷக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இது குருக்ஷேக்திர மாவட்டம் தநேசரில் அமைந்திருக்கிறது.

கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்:

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண்மணியான கல்பனா சாவ்லாவின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் இந்த கோளரங்கத்தில் தினமும் விண்வெளி சம்மந்தமான காணொளிகள், மற்றும் ஆவணப்படங்கள் தினமும் அதிநவீன வசதிகள் உடைய இந்த கோளரங்கத்தில் திரையிடப்படுகின்றன.

கல்பனா சாவ்லா பெற்ற விருதுகள் மற்றும் அறிய புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் இருந்து திரும்புகையில் விபத்தில் பலியான இந்த வீர மங்கையின் நினைவாக இங்கே ஒருமுறை நிச்சயம் சென்று வரலாம்.

பிர்லா மந்திர்:

மகாபாரதம் நடந்த புண்ணிய பூமி - குருக்ஷேத்திரம்

புகைப்படம்: .aditya.

1952ஆம் ஆண்டு பிர்லா குடும்பத்தை சேர்ந்த ஜுகல் பிர்லாவால் கட்டப்பட்ட இந்தக்கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஆனது. இங்கு தநேசரில் உள்ளது போன்றே கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கிதையை போதிப்பது போன்ற பளிங்குக்கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த்தக்கட்டிடத்தின் பின்புறத்தில் மிகப்பெரிய தோட்டமும் அமைந்துள்ளது. இவ்விடம் குருக்ஷேத்திரத்தை சுற்றுலாதளமாக மாற்றுவதற்கான முதல் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாகும். ராமர், ஹனுமான், சிவன், கிருஷ்ணர் போன்றோரை தரிசித்தபடியே தோட்டத்தில் காலாற உலாவருவது பேரின்பமாக அமையும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X