Search
  • Follow NativePlanet
Share
» »கலவித் தலமான "கஜுராஹோ"... மறைக்கப்பட்ட மர்மம் என்ன தெரியுமா ?

கலவித் தலமான "கஜுராஹோ"... மறைக்கப்பட்ட மர்மம் என்ன தெரியுமா ?

விந்திய மலைத்தொடர்களை பின்னணியாகக் கொண்டுள்ள கஜுராஹோ பல வரலாற்று சிறப்புமிக்க கலைநயத்தைக் கொண்டிருந்தாலும், பலரது மத்தியில் கலவிக்கே உரித்தான கலைக் கலஞ்சியமாக கருதப்படுகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்டில் அமைந்துள்ளது கஜுராஹோ. விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமப் பகுதியான இது உலக பாரம்பரிய தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. எங்கு காணிணும் பிரம்பிக்க வைக்கும் கோட்டை போன்ற கோவில்கள் இன்றளவும் பல மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது. அப்படி இந்த கஜுராஹோவில் என்னதான் இருக்கு என தெரிஞ்சுக்கலாம் வாங்க...

பாறைச்சிற்பங்கள்

பாறைச்சிற்பங்கள்


உலக நாடுகளே கண்டு வியக்கும் கஜுராஹோவின் அடையாளம் இங்கு அமைந்துள்ள கோவில்களில் நிரம்பியிருக்கும் நுணுக்கமான சிற்பங்கள் தான். இவை மனிதக் கைகளால் தான் வடிக்கப்பட்டதா என இன்றளவும் அரிய முடியவில்லை. அத்தனை வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் உலகில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவத்துடன் மனித நாகரிகத்தின் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணங்களாக காட்சியளிக்கின்றன.

Deepa Chandran2014

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


கஜூராஹோவில் மொத்தம் 85க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் தற்போது 25க்கு உட்பட்ட கோவில்கள் மட்டுதே முழுமையாக மிஞ்சியிருக்கின்றன. வார்த்தைகளுக்குள் அடங்காத சிற்பக்கலை நுணுக்கங்கள் நிரம்பி வழியும் இந்த அற்புத வரலாற்று தலம் உலகாளவிய கவனத்தை பெற்றுள்ளது.

Dennis Jarvis

வியப்படைந்த யுனெஸ்கோ..!

வியப்படைந்த யுனெஸ்கோ..!


கஜூராஹோ கோவில்களில் காணப்படும் சிற்பக்கலை அம்சங்களும் சித்தரிப்புகளும் நம் முன்னோர்களின் வாழ்வியல் உன்னதங்கள் மற்றும் நாகரிகத்தை குறிப்பதாக உள்ளது. இதனை கவுரவிக்கும் வகையிலேயே 1986-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது இந்த கஜுராஹோ கோவில் தலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது.

Deepa Chandran2014

பாலுணர்வு சிற்பங்கள்

பாலுணர்வு சிற்பங்கள்


இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் பாலுணர்வு சார்ந்த அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால், இவை அனைத்தும் முக்கியமான இந்துக் கடவுளர்களுக்காக எழுப்பப்பட்ட கோவில்களின் ஒரு அலங்கார படைப்பு அம்சங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கோவில்களின் உருவாக்கமும் வடிவமைப்பும் அதி உன்னத பொறியியல் நுணுக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளன.

Deepa Chandran2014

கலவித் தலமான கஜுராஹோ

கலவித் தலமான கஜுராஹோ


கஜுராஹோ என்றாலே காமக்கலை சிற்பங்கள் எனும் தவறான கருத்து அல்லது புரிதல் சில புகைப்படங்கள் மூலமாக பரவி வந்திருக்கிறது. ஆனால், இவை முழுக்க முழுக்க இந்துக் கடவுல்களுக்காக, அக்காலத்து நடைமுறையை கொண்டு செதுக்கப்பட்டவை என்ற புரிதல் நம்மவர்களிடையே மறைக்கப்பட்டுள்ளது.

Deepa Chandran2014

கஜூராஹோ கோவில்கள்

கஜூராஹோ கோவில்கள்


கஜூராஹோ தலத்திலுள்ள கோவில்கள் மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி கோவில்கள் என்று அவை அழைக்கப்படுகின்றன.

Parth Gogate

கம்பீரக் கோவில்கள்

கம்பீரக் கோவில்கள்


மேற்குத்தொகுதி கோவில்களில் முழுக்க முழுக்க இந்து தெய்வங்களுக்கான கோவில்கள் நிரம்பியுள்ளன. இவை கஜூராஹோ தலத்தின் மஹோன்னத கலைத்திறனுக்கு மிக சிறந்த உதாரணங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் கண்டரிய மஹாதேவா கோவில் மிகப்பெரிய கம்பீரமான கோவிலாகும். கஜூராஹோ கிழக்குத்தொகுதி கோவில்களில் விந்து கோவில்களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன.

Aminesh.aryan

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


பொதுவாக கஜூராஹோ கோவில்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காதல் காமக்கலை காட்சிகள் ஒரு முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு அம்சமாக விளங்குகின்றன. சௌஸத் யோகினி கோவில், ஜவரி கோவில், தேவி ஜகதாம்பா கோவில், கண்டரிய மஹாதேவா கோயில், லஷ்மணா கோவில் உள்ளிட்டவை இங்கு காணப்படுகிறது.

CR Pushpa

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை விமான நிலையத்தில் இருந்து கஜூராஹோவிற்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. அந்தமான் எக்ஸ்பிரஸ், டேராடூன் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - புதிதில்லி ரயில் உள்ளிட்ட ரயில் சேவைகளும சென்னையில் இருந்து செல்ல உள்ளது.

ObsidenRing

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X