Search
  • Follow NativePlanet
Share
» »பயங்காட்டும் மலையேற்றம், வசீகரிக்கும் சர்வஜனபீடம்... தேடிப் போலாமா ?

பயங்காட்டும் மலையேற்றம், வசீகரிக்கும் சர்வஜனபீடம்... தேடிப் போலாமா ?

மலையேற்றத்தால் ஏற்பட்ட சோர்வையு நீக்கி வசீகரிக்கும் தன்மை கொண்டுள்ளது கொடசத்ரி மலைப் பிரதேசம். அப்படி அங்கே என்னதான் உள்ளது ?

நம்மில் பெரும்பாலானோருக்கு பசுமைச் சூழல் நிறைந்த அடர் வனக் காட்டில், மலை முகட்டில் ஏறிச் செல்லும் சாகச விளையாட்டு பிடித்தமான ஒன்றே. ஒருசிலர் அதை மட்டுமே பொழுது போக்காகவும் கொண்டிருப்பர். ஆனால், பயிற்சி பெற்றவர்களையே திண்டாடவைக்கும் ஓர் மலையேற்றப் பகுதி உள்ளது என்றால் அது கர்நாடகாவில் உள்ள கொடசத்ரியே. மலையின் மேலே உள்ள சர்வஜனபீடம் மலையேற்றத்தால் ஏற்பட்ட சோர்வையும் நீக்கி வசீகரிக்கும் தன்மை கொண்டுள்ளது. அப்படி அங்கே என்னதான் உள்ளது ?

கொடசத்ரி

கொடசத்ரி


கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொடசத்ரி மலைப்பிரதேசம். நாட்டிலேயே புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு தான். அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கொடசத்ரி மலைச்சிகரத்தை உள்ளடக்கிய இந்த தலம் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் மூகாம்பிகா தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது.

Anoop K

காட்டு வழி மலையேற்றம்

காட்டு வழி மலையேற்றம்


சுற்றுப் புறத்தில் உயர்ந்த மரங்கள் ஏதுமில்லாததால் விடாது வீசும் காற்றின் வலிமை நேரடியாக மலையேறுபவர்களை தாக்கும். அதனை மீறி மலையுச்சியை சென்றடைந்தால் அங்கே காத்திருக்கிறது ஓர் பரவசமட்டும் அம்சம். அதுதான் மூகாம்பிகை அம்மன் கோவில். கோவிலைச் சுற்றிலும் உள்ள காடுகளில் பல உயிரினங்களை காண முடியும் என்பது தனிச்சிறப்பு.

alexrudd

சர்வஜனபீடம்

சர்வஜனபீடம்


சர்வஜனபீடம் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த கொடசத்ரிக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான காலம் ஏற்றதாக இருக்கும். கடினமான இந்த மலைப்பாதைகளில் பிரசித்தமான ஜீப்புகளின் மூலமே பயணிக்க முடியும். இதற்காகவே கொல்லூரில் ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கின்றன.

Vijayakumarblathur

ஹிட்லுமனே நீர்வீழ்ச்சி

ஹிட்லுமனே நீர்வீழ்ச்சி


கொடசத்ரிக்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள் தவறாமல் சென்றுவர வேண்டிய இடம் ஹிட்லுமனே நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி நிட்டூரூ எனும் இடத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கால்நடையாக பயணித்தால் மலைப்பாறைகள் நடுவே உள்ள பாதையின் மூலமாக இந்த அருவிக்கு செல்லலாம். ஜீப்பில் செள்வதாக இருந்தால் நிட்டூரிலிருந்து செல்லும் பாதை வழியாக பயணிக்க வேண்டும்.

Shrikanth n

நகரா கோட்டை

நகரா கோட்டை


கொடசத்ரி வரும் பயணிகளை வெகுவாக ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது நகரா கோட்டை. கொடசத்ரி மலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோட்டை அமைந்துள்ளது. கேலடி ராஜவம்சத்துக்கு சொந்தமான இந்த கோட்டை 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கே ஒரு வறண்ட கிணறையும், ஆபத்து காலங்களில் ராஜ குடும்பத்தினர் தப்பிக்க உருவாக்கப்பட்டிருந்த ஒரு குகைப்பாதையையும் பார்க்க முடிகிறது.

Aravind Nagaraj

மலையேற்றம்

மலையேற்றம்


சாகச பயணிகளுக்காகவே அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த மலையேற்றமாகும். அற்புதமான பருவநிலை மற்றும் பசுமையான இயற்கைச்சூழலைக் கொண்டுள்ள குளிர்காலம் மலையேற்றத்துக்கு உகந்த காலமாகும். சிகரத்தின் உச்சியிலிருந்து மலையேறிகள் அருமையான சூரிய அஸ்தமன காட்சியையும் அரபிக்கடலின் அழகையும் தரிசித்து மகிழலாம்.

Ashwin Kumar

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கொடசத்ரிக்கு அருகே குண்டபுரா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகாமையில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் வசதிகள் உள்ளன. கொடசத்ரிக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

alexrudd

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X