Search
  • Follow NativePlanet
Share
» »2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி ?

2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி ?

ஒருசில கோவில்களிலேயே காணப்படும் பிரம்மாவிற்கு என பெரிய அளவிலான கோவில் ஒன்றும் உள்ளது, இதில் வியப்பு என்னவென்றால் இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாய் நிற்பதே.

படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார். கோவில் இல்லாக் கடவுளாக இருக்கும்படி சபித்தார். ஆனாலும் ஒரு சிலப் பகுதிகளில் பிரம்மாவுக்கு சிவன் கோவில்களில் சிறிய அளவில் சன்னிதிகள் உண்டு. குறிப்பாக, தென்னகத்தில் இவறுக்கென சிறிய அளவிலான கோவில்கள் சில காணப்படுகின்றன. இப்படி ஒருசில கோவில்களிலேயே காணப்படும் பிரம்மாவிற்கு என பெரிய அளவிலான கோவில் ஒன்றும் உள்ளது, இதில் வியப்பு என்னவென்றால் இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாய் நிற்பதே. சரி வாருங்கள் அக்கோவில் எங்கே உள்ளது? என்னவெல்லாம் சிறப்பு என பார்க்கலாம்.

வடஇந்தியா

வடஇந்தியா


வடஇந்திய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன. இதில், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளையும், கோவில்களையும் கொண்ட மாநிலம் என்றால் அது ராஜஸ்தான் தான். ராஜஸ்தானின் சுற்றுலாத் தலங்களிலேயே தற்போது பிரசிதிபெற்றிருப்பது புஷகர் நகரம். இங்கேதான் பிரம்மாவிற்கான பழம்பெரும் கோவில் உள்ளது.

Ekabhishek

புஷ்கர்

புஷ்கர்


ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே உள்ள ஊர்தான் புஷ்கர். புஷ்கர கோவிலின் மூலவரே பிரம்மா தான். இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் பெரியளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரியும் உண்டு. இது சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என பக்தர்களால் போற்றப்படுகிறது.

Ekabhishek

புஷ்கர் ஏரி

புஷ்கர் ஏரி


பிரம்மா, யாகம் செய்வதற்காக இடம் தேடி அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தார். அப்போது அவருடைய கையில் இருந்த மலர் தரையில் விழுந்து ஏற்பட்ட அழுத்தத்தால் மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் தோன்றியதுதான் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்களை உருவாக்கியது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். புனிதமாகக் கருதப்படும் புஷகர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.

Ekabhishek

பிரம்ம யாகம்

பிரம்ம யாகம்


புஷ்கர் பகுதியில் நான்முகன் உலக நன்மைக்காக ஒரு யாகம் செய்ய திட்டமிட்டார். அதற்கு முன்னதாக யாகத்தை கொடியவர்களிடமிருந்து காக்க வடக்கே நீலகிரியையும், தெற்கே ரத்னகிரியையும், கிழக்கே சூர்யகிரியையும், மேற்கே சோன்சூர் என மலைகளை அரணாக அமைத்து யாகத்தையும் செய்து முடித்தார்.

Pablo Nicolás Taibi Cicaré

பிரம்மா- காயத்ரி, கோபத்தில் சரஸ்வதி

பிரம்மா- காயத்ரி, கோபத்தில் சரஸ்வதி


யாகத்தில் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி தேவி ஆஹூதி தரவேண்டிய நேரம் நெருங்கியமு. சரஸ்வதி தேவியோ அவ்விடத்தில் இல்லை. அவரின்றி இந்த கடுமையான யாகம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த காயத்ரியை திருமணம் செய்து தனது யாகத்தை நிறைவு செய்தார் பிரம்மா. இதனிடையே அங்கு வந்த சரஸ்வதியோ கடுங்கோபத்தில் பிரம்மாவிற்கு இவ்வுலகில் வேறெங்குமே வழிபாடு இருக்கக் கூடாது என சபித்தார். மேலும் திருமணமான ஆண்கள் இத்தலம் வந்து வழிபட்டால் தோஷங்ம கொள்வார்கள் என்றும் சபித்தார். ஆனால், பிரம்மாவுக்கு புஷ்கரைத் தவிர வேறெங்கும் வழிபாடு இருக்காது என்றும், புஷ்கருக்கு வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது என்றும் சரஸ்வதியின் சாபத்தைச் சற்றே மாற்றியமைத்தார் காயத்ரிதேவி. இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி அந்த இடத்தைவிட்டு வெளியேறி ரத்னகிரி மலையில் சாவித்ரி ஜர்னா என்னும் நீரூற்றாக உருவெடுத்தால்.

Tamba52

புஷ்கர் தல அமைப்பு

புஷ்கர் தல அமைப்பு


புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோவில் சிறப்பு நிறத்தில், கோபுர‌ங்களுடன் fட்சியளிக்கிறது. நுழைவுவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. மூலவர் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோவில் உள்ளது.

Vberger

சரஸ்வதி கோவில்

சரஸ்வதி கோவில்


பிரம்மாவின் முதல் மனைவி சரஸ்வதி தேவிக்கு என பிரம்ம கோவிலின் பின்புறம் உள்ள மலையில் ஒரு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் இருந்து ஏரியையும், சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது ரம்மியமான, மனதைக் கொள்ளை கொள்ளும் அழகாகும்.

Ekabhishek

மான்மகால்

மான்மகால்


புஷ்கர் ஏரிக்கரையில் ஆமெர் மன்னர் முதலாவது ராஜா மான்சிங் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை தான் இந்த மான்மகால். முன்னொரு காலத்தில் சுற்றுலாத் தலமாக இருந்த இக்கட்டிடம் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு பயணிகள் தங்கும் இடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

Poco a poco

திருவிழா

திருவிழா


புஷ்கர் பிரம்மா கோவிலில் கார்த்திகை தீபவிழா பிரசிதிபெற்றது. புஷ்கர் கார்த்திக் பூர்ணிமா மேளா என்னும் இந்த விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரமுகர்கள், பக்தர்கள் வருவது வழக்கம். திருவிழாக் காலத்தில் ராஜஸ்தானின் அடையாளங்களில் ஒன்றான ஒட்டகச் சந்தை மிகப் பெரிய அளவில் நடைபெறும். வெளிநாட்டினர் கூட இதில் ஆர்வத்துடன் பங்கேற்பர்.

Dew

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ராஜஸ்தானில் இருந்து தெகனா - பெருந்தா சாலை வழியாக சுமார் 79 கிலோ மீட்டர் பயணித்தால் புஷ்கர் பிரம்மா கோவிலை அடையலாம். லம்போலய் சாலை வழியாக பயணித்தால் 114 கிலோ மிட்டர் பயணிக்க வேண்டும். மாநிலத்தில் பிரசித்தாமன ஆன்மீகத் தலம் என்பதால் எப்பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்கு வர பேருந்து வசதிகளும், தனியார் போக்குவரத்து வசதிகளும் உள்ளது. இதனருகே ஜெய்பூர் விமான நிலையம் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், அஜ்மேர் ரயில் நிலையம் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X