Search
  • Follow NativePlanet
Share
» »கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

இந்த வார கோடை விடுமுறை, ரம்ஜான் விடுமுறையுடன் சேர்ந்து வரும் நிலையில் இந்த வார இறுதி விடுமுறையில் சின்னதாக சுற்றுலா சென்று வர திட்டமிடுவோர் வால்பாறைக்குச் சென்றுவருவது சிறந்த தேர்வாக இருக்கும்.

கோடை வெயில் என்றாலும் கூட தனது சீதோஷன நிலையில் சிறிதும் மாற்றமின்றி ஜிலுஜிலு என்ற காலநிலையைக் கொண்டது இந்த வால்பாறை. இதில், தற்போது கொட்டும் மழை வேறு. எங்க பார்த்தாலும் அருவிகள் தான். ஆழியாரில் இருந்து தொடங்கும் மலைப் பாதை முழுக்க வழிநெடுகிலும் மலையைப் பிழந்துகொண்டு கொட்டம் அருவிகளை காண முடியும். தேயிலைக் காட்டு வழியாக வரும் மழை நீரோடியிலும் கூட தேநீர் மனமனக்கும். இந்த வார கோடை விடுமுறை, ரம்ஜான் விடுமுறையுடன் சேர்ந்து வரும் நிலையில் இந்த வார இறுதி விடுமுறையில் சின்னதாக சுற்றுலா சென்று வர திட்டமிடுவோர் வால்பாறைக்குச் சென்றுவருவது சிறந்த தேர்வாக இருக்கும். சரி, வால்பாறையில் எங்கவெல்லாம் பாஸ் சுத்தி பார்க்குறது ?. அங்கதான் ஒரு படகு சவாரி இல்ல, பெரிய பார்க் இல்லன்னு விசயம் தெரியாம இருக்குறவங்க, இந்த இடத்துக்கெல்லாம் போய் பாருங்க. செயற்கை சாயலின்றி ஒட்டுமொத்த இயற்கையும் ரசிச்சு திகைச்சுபோய் திரும்பலாம்.

வால்பாறை

வால்பாறை

வால்பாறை சிறு மலைமுகடுகளால் ஆன அழகிய மலைத்தொடர். அணைகளும் மலைமுகடுகளும் மேகத்தவழ்வுகளும், ஓடைகளும் என அப்பகுதியின் காட்சி இன்பத்தை நேரில் கண்டுதான் உணர முடியும். அந்த அளவிற்கு ரம்மியமான காட்சி முனை வால்பாறை. வால்பாறை தரும் பச்சை பசேல் பயண அனுபவம் என்பது வயதையும், மனதையும் இளமையாக்கும். இப்படி இங்கு ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், மனதை மயக்கும், பார்க்க தவறக்கூடாத இடங்கள் எது என பார்க்கலாம்.

Jaseem Hamza

பாலாஜி கோவில்

பாலாஜி கோவில்


வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் பாலாஜி கோவிலை அடைந்து விடலாம். பாலாஜி கோவிலைச் சுற்றிலும் பூத்துக் குலுங்கும் பூக்கள், சரிந்து விழும் மலையில் விரித்த தேயிலைத் தோட்டங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள சிறுவர் பூங்கா உங்களது குழந்தைகளை மேலும் உற்சாகமடையச் செயும்.

அக்காமலை

அக்காமலை


பாலாஜி கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அக்காமலை. பச்சை பட்டாடை உடுத்தியது போன்ற அழகிய புல்வெளி இதன் அடையலாம். "டார்லிங் 2" மலைக்காட்சி முழுக்க இங்கதான் எடுத்தாங்க. அக்காமலை வனப் பகுதியைச் சுற்றிப்பார்க்க வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

Jaseem Hamza

வெள்ளமலை குகை

வெள்ளமலை குகை


கருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது வெள்ளமலைக் குகை. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டதாகும். அதனருகேயே கால்வாயும் உள்ளது. மழைக் காலங்களில் கட்டுக்கடங்காமல் ஓடும் இந்த கால்வாய் கொஞ்சம் ஆபத்தும், நிறைய வியக்கவைக்கும் காட்சிகளையும் வாரிவழங்கும்.

Challiyan

தலநார் சோலைக் காடு

தலநார் சோலைக் காடு


வால்பாறையில் உள்ள தலநார் என்ற இடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் சிற்றருவிகளும், இயற்கை காட்சிகளும், சோலைகளும், தவழும் மேகமூட்டமும், தொடர்பனியும் நிறைந்த பகுதியாக இது காட்சி அளிக்கிறது.

Subramonip

லோயார் நீராறு

லோயார் நீராறு


வால்பாறையில் இருந்து சுமுர் 10 கிலோ மீட்டர் தொலைவில் லோயர் நீராறு அணை உள்ளது. இயற்கை கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த லோயர் நீராறு அணை, தற்போது அதிகப்படியான மழையின் காரணமாக நிறைந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த லோயர் நீராறு அணை நூற்றுக்கணக்கான நிலங்களையும் செழிக்கவைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கும் ஆதாரமாக உள்ளது.

Jaseem Hamza

சித்தி விநாயகர் கோவில்

சித்தி விநாயகர் கோவில்


வால்பாறையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நல்லமுடி எஸ்டேட் செல்லும் சாலையில் உள்ள பிரசிதியும் பெற்ற ஆன்மீகத் தலமாகும். இந்த கோவில் முழுவதும் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளை விநாயகர் திருக்கோவில் என்றும் பெயர். கோவிலை சுற்றிலும் அழகிய ரோஜா செடிகளால் பூங்கா அமைத்துள்ளனர். இந்த விநாயகர் ரோஜா மலர் பூங்காவுக்கு நடுவில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Technofreak

நல்லமுடி பள்ளத்தாக்கு

நல்லமுடி பள்ளத்தாக்கு


நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு சென்றுள்ளீர்கர் என்றால் நிச்சயம் காட்டு யானைகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் ஆபத்தும் அதிகம் தான். ஆனால், எந்த நேரமும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளை தகுந்த பாதுகாப்புடன் பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு அதுத்துச் செல்வர். மலைவாழ் மக்களான முதுவர் இனத்தவர் இங்கு அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இங்கு நீர்வீழ்ச்சியும், புல்வெளியும், எழில்கொஞ்சும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் கண்களுக்கு விருந்தளிக்கும்.

Thangaraj Kumaravel

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி


சின்னக்கல்லார் அணை வெள்ளமலை குகையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயிலும் இந்த அணைப் பகுதியில் இருந்துதான் துவங்குகிறது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஓர் நீர்வீழ்ச்சியும் உள்ளது. மர தொங்கு பாலம் வழியாக தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்ற இது தவறவிடக் கூடாத வால்பாறை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Dilli2040

கீழ்நீராறு அணை

கீழ்நீராறு அணை


சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது கீழ்நீராறு அணை. வால்பாறை- முடீஸ் முக்கியச் சாலையில் இருந்து கீழ்நீராறு அணைக்குச் செல்லும் வழி துவங்கும் இடத்திலேயே உள்ளது கூழாங்கல் ஆறு. கீழ்நீராறு அணையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த ஆற்றுப் பகுதி இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இப்பகுதியில் குழிக்க தடை செய்யப்பட்டிருந்தாலும் வால்பாறை பாலத்தில் இருந்து இந்த நீரோடையைக் காணும் காட்சியே ரம்மியமானதுதான்.

Jaseem Hamza

வில்லோனி பள்ளத்தாக்கு

வில்லோனி பள்ளத்தாக்கு


வால்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது வில்லோனி பள்ளத்தாக்கு. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப் பாதையையும் கூட காணலாம். ஆனால், அதற்குள் செல்ல அனுமதி இல்லை.

Jaseem Hamza

மானாம்பள்ளி

மானாம்பள்ளி


வில்லோனியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீரை கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.

Ashwin Kumar

சோலையார் அணை

சோலையார் அணை


மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வளைந்து நெழிந்த மலை முகடுப் பாதையில் பயணித்தால் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோலையார் அணை. நாட்டிலேயே உயரமான அணை இதுவென்றாலும், நாள்தோறும் இங்கிருந்து கேரளாவுக்கு அதிகளவில் நீர் விநியோகிக்கப்படுகிறது.

Jaseem Hamza

அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவி


சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சுமார் 50 கிலோ மீட்டர் காட்டு வழியாக பயணித்தால் புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவியான அதிரப்பள்ளி அருவியை அடைந்துவிடலாம். அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. பாதுகாப்புடன் செல்வது சிறந்தது.

Dilshad Roshan

பூஞ்சோலை

பூஞ்சோலை


வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்ட்டேட்டைக் கடந்து நல்லமுடி செல்லும் வழியில் உள்ளது நல்லமுடி பூஜ்சோலை. இயற்கை எழில் சூழ்ந்த இடம் என்றால் அது இந்த பூஞ்சோலை தான். வருடத்தில் எந்த நாள் சென்று பார்த்தாலும் இங்கே பல வெளி மாவட்டங்களில் இருந்து இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம், எந்த நேரமும் இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளும், மனதை கொஞ்சம் மறக்கடிக்கச் செய்யும் இயற்கைக் காட்சிகளுமே. பூஞ்சோலை காட்சி முனையில் இருந்து பார்த்தால் நேர் எதிரே மலையைப் பிளந்து கொண்டு பல நூறு அடிக்கு மேலிருந்து கொட்டும் அருவியைக் காண முடியும். எளிதில் சென்றடைய முடியாத அந்த சோலைவன மலைக் காட்டிற்குள் இன்றும் மின்சாம் உள்ளிட்ட வசதிகளின்றி மலைவாழ் மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jaseem Hamza

ஹை பாரஸ்ட்

ஹை பாரஸ்ட்


நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த காட்சி முனைப்பகுதி. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை இங்கு காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றையும் காண முடியும்.

ManojKRacherla

புதுத்தோட்டம்

புதுத்தோட்டம்


வால்பாறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொள்ளாச்சி சாலையில் உள்ளது புதுத் தோட்டம். சாலை ஓரங்களிலேயே கட்டுடல் கொண்ட காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்களைக் காணும் வாய்ப்புகள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் அவற்றிற்கு இடையூறு இன்றி ரசித்து வருவது முக்கியம்.

Vaibhavcho

கவர்க்கல்

கவர்க்கல்

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான மலைப் பகுதியே இந்த கவர்க்கல். வால்பாறையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக மேகமூட்டத்துடன் பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டபடியே இச்சாலையில் பயணிப்பது சிறந்தது. மேலும், யானைகள் கடக்கும் பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் ஓட்டிச் செல்வது அவசியம்.

Sivavkm

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X