Search
  • Follow NativePlanet
Share
» »இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானோடு இந்தியாவை சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள் !!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானோடு இந்தியாவை சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள் !!

By Naveen

இதயத்துக்கும் இறைவனுக்கும் இசை கொண்டு பாலம் அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் 48வது பிறந்த நாள் இன்று. 90களுக்கு பிறகான தலைமுறைகளின் இசைப்பிதாமகன் என்றே ரஹ்மானை சொல்லலாம். இளையராஜா என்ற சிங்கம் தனியொரு இசை ராஜ்ஜியம் நடத்திவந்த காலத்தில் தனக்கென தனியொரு பாணியோடு, காதுகளுக்கு புத்துணர்வூட்டும் இசையோடு மக்களின் மனதை மெல்லக் கவர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

வெறும் இசைக் கோர்வையாளர், டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லையென்றால் இவர் ஒன்றும் இல்லை என்றெல்லாம் என்றெல்லாம் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு இதயத்தை வருடம் தன் இசையால் பதில் சொன்னவர்.

தமிழில் இருந்து பாலிவுட் படங்களுக்கு இசையமைக்க தொடங்கிய பிறகான ரஹ்மானின் வளர்ச்சி அசாத்தியமானது. ரங்கீலா, உயிரே என சில படங்களிலேயே இந்தியா முழுமைக்குமான இசையமைப்பாளர் ஆனார். அதன் பின் அவர் இசையமைத்த 'தாய் மண்ணே வணக்கம்' ரஹ்மானை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

உலகே உற்று நோக்கிய ஆஸ்கர் மேடையில் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று சிரம் தாழ்ந்த ரஹ்மானோடு அவரின் பாடல்கள்கள் வழியே இந்தியாவை சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

ரோஜா - காஷ்மீர் :

ரோஜா - காஷ்மீர் :

"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" இந்த பாடல் செவிகளின் ஊடாக பாயும் போதே காஷ்மீரின் பனிப்பொழிவை உணர முடியும். இந்தியாவின் மிக அற்புதமான சுற்றுலாத்தலமாக திகழ்ந்த காஷ்மீர் தீவிரவாதத்தின் மையமாக மாறியிருப்பதை கணவனை இழந்த பெண்ணின் பார்வையில் காட்சிப்படுதியிருப்பார் மணிரத்னம்.

கஷ்மீர்:

கஷ்மீர்:

ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும் இன்றும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் காஷ்மீருக்கு செல்கின்றனர். அதற்கு காரணம் அங்கிருக்கும் உன்னதமான இயற்கை அழகும், குளிர் காலத்தில் நடத்தப்படும் சாகச விளையாட்டுகளும் தான்.

ஸ்ரீநகர் தால் ஏரி, குல்மார்க் சிகரங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள், லடாக் மற்றும் லெஹ்,சொன்மார்க் போன்றவை காஷ்மீரில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

காஷ்மீர்:

காஷ்மீர்:

காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான பயண தகவல்கள் மற்றும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

நெஞ்சினிலே நெஞ்சினிலே- கேரளா:

நெஞ்சினிலே நெஞ்சினிலே- கேரளா:

இசையிலும், வரிகளிலும், காட்சிகளிலும் காமம் தவழ்ந்த பாடல் என்றால் 'உயிரே' படத்தில் வரும் 'நெஞ்சினிலே நெஞ்சினிலே' பாடல் தான். இப்பாடல் முழுக்கவும் கடவுளின் சொந்த தேசமென்று அழைக்கப்படும் கேரளத்தில் படமாக்கப்பட்டது.

தேக்கடி முல்லைப் பெரியார் ஏரி, அதிரப்பள்ளி அருவி, ஆலப்புழா படகு வீடுகள் என கேரளத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகள் அனைத்தையும் இப்பாடலில் காணலாம்.

நெஞ்சினிலே நெஞ்சினிலே- கேரளா:

நெஞ்சினிலே நெஞ்சினிலே- கேரளா:

குடும்பத்தினரின் தொல்லைகளில் இருந்து தப்பித்து சில நாட்கள் அன்பு மனையியுடன் எங்காவது செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ஆலப்புழா படகு வீடுகளை தேர்ந்தெடுக்கலாம்.

அலைகள் எழாத ஓடையில் படகு வீட்டில் மிதந்தபடி எங்கும் நிறைந்திருக்கும் பசுமையை ரசித்தபடியே தனிமையில் களவி கொண்டாடலாம். ஆலப்புழாவை பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

தையா தையா - ஊட்டி:

தையா தையா - ஊட்டி:

இந்தியாவையே ஆட்டம் போட வைத்த ரஹ்மானின் அட்டகாசமான பாடலில் ஒன்று 'உயிரே' படத்தில் வரும் 'தையா தையா' பாடல் ஆகும்.

சினிமா வரலாற்றில் எடுக்கப்பட்ட அட்டகாசமான ரயில் பாடல் காட்சியாக புகழப்படும் இந்த பாடல் உலகப் பிரசித்திபெற்ற ஊட்டி மலை ரயிலில் படமாக்கப்பட்டது.

தையா தையா - ஊட்டி:

தையா தையா - ஊட்டி:

உண்மையில் இந்த பாடல் வெளியானதன் பிறகு தான் ஊட்டி மலை ரயிலைப் பற்றி இந்தியாவில் இருக்கும் பலருக்கு தெரியவந்தது என்று சொல்லலாம்.

வார விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலமாக ஊட்டியை சொல்லலாம். தேனிலவு செல்லவும், குடும்பத்தினருடன் கோடை விடுமுறையை கொண்டாடவும் ஊட்டி மிக அற்புதமான இடமாகும்.

ஊட்டி மலை ரயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

லகான் - குஜராத்:

லகான் - குஜராத்:

இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி ஒன்றுமே அறிந்திராத கிராம மக்கள் ஒரு அணியை உருவாக்கி ஆங்கிலேயே கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளும் கதை தான் 'லகான்'.

முழுக்க முழுக்க குஜராத்திய பின்னணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படதிற்கு தன் இசையால் உயிரூட்டியிருப்பார் ரஹ்மான். இப்படம் ஆஸ்கர் வரை எட்ட இசையும் ஒரு முக்கிய பங்குவகித்தது.

லகான் - குஜராத்:

லகான் - குஜராத்:

தொழில் நகரமாக அறியப்படும் குஜராத்தில் சில தனித்துவமான நிச்சயமாக செல்ல வேண்டிய இடங்களும் இருக்கின்றன. ரன் ஆப் கட்ச் என்னும் உப்புப் பாலைவனம், இந்திய சிங்கங்கள் வாழும் கிர் தேசிய பூங்கா, சோமநாதர் ஆலயம், சபர்மதி ஆஷ்ரமம் போன்றவை குஜராத்தின் குரிப்பிடப்பிடத்தகுந்த இடங்கள் ஆகும்.

லகான் - குஜராத்:

லகான் - குஜராத்:

குஜராத் சுற்றுலா - ஒரு முன்னோட்டம்!

தாஜ் மஹால்:

தாஜ் மஹால்:

ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்கள் அனைத்தையும் ஒரே பாடலில் நமக்கு சுற்றிக் காட்டியிருப்பார் இயக்குனர் ஷங்கர். அந்த ஏழு இடங்களில் மிக அழகான பகுதியென்றால் தாஜ்மஹால் தான்.

காதல் எத்தனை கம்பீரமானது என்பதை உணர உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலுக்கு வாழ்கையில் ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

காற்றே என் வாசல் வந்தாய் - ஜெய்சால்மர்:

காற்றே என் வாசல் வந்தாய் - ஜெய்சால்மர்:

ரஹ்மான் இசையமைத்ததில் சிறந்த படங்களில் ஒன்றான 'ரிதம்' படத்தில் வரும் 'காற்றே என் வாசல் வந்தாய்' அற்புதமான மெல்லிசைப் பாடல்களில் ஒன்று.

இப்பாடல் இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்று புகழப்படும் ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சால்மரில் இருக்கும் படாபாக் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது.

ஜெய்சால்மர் சுற்றுலா!!

'ஸ்லம் டாக் மில்லியனர்' :

'ஸ்லம் டாக் மில்லியனர்' :

ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்த படம் மும்பையின் ஆன்மாவை உரித்துக்காட்டியஸ்லம் டாக் மில்லியனர் தான். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவியில் படமாக்கப்பட்டது.

தனியாக தெரியாமல் காட்சிகளோடு ஒன்றி ரஹ்மானின் இசை இருந்ததே அவருக்கு ஆஸ்கரை பெற்றுத்தந்தது.

மும்பைக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாம வந்துடாதீங்க பாஸ் ...

பிறந்த நாள் வாழ்ந்துக்கள் ரஹ்மான் !!

பிறந்த நாள் வாழ்ந்துக்கள் ரஹ்மான் !!

உலகின் புகழ் உச்சி மேடையிலும் தமிழை மறவாத தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X