Search
  • Follow NativePlanet
Share
» »மங்களூர் - தேவதைகளின் நகரம்

மங்களூர் - தேவதைகளின் நகரம்

ஒருபக்கம் அரபிக்கடலும் மறுபக்கம் மேற்கு தொடர்ச்சி மலையும் சூழ்ந்திருக்க இந்தியாவின் மிக அழகான மற்றும் சுத்தமான நகரமாக திகழும் மங்களூர் நாம் கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். அருள்மிகுந்த ஆன்மீக ஸ்தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்கள், எங்கும் கிடைக்கும் சுவையான உணவுகள் என இங்கு எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.

மங்களா தேவி கோயில் :

மங்களூர் - தேவதைகளின் நகரம்

Photo: Crazysoul

மங்களுருக்கு அப்பெயர் வர காரணமாக இருக்கும் கோயில் தான் போலாரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது மங்களா தேவி கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் துளு நாட்டு மன்னன் குந்தவர்மனால் கட்டப்பட்ட இக்கோயில் மங்களூரில் மிகப்பிரபலமான இடமாகும். இக்கோயிலில் நவராத்திரி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்பண்டிகையின் ஏழாம் நாள் சண்டிகாவாகவும், எட்டாம் நாள் மகா சரஸ்வதியாகவும், இறுதிநாளான மகா நவமியன்று வாக் தேவியாகவும் காட்சி தருகிறார்.

கத்ரி மஞ்சுநாத் கோயில் :

மங்களூர் - தேவதைகளின் நகரம்

Photo: Raghavendra Nayak Muddur

மங்களுருவில் இருக்கும் மற்றுமொரு புகழ்பெற்ற கோயில் ஹிந்து மற்றும் புத்த மதங்களின் கலவையாக இருக்கும் கத்ரி மஞ்சுநாத் கோயிலாகும். 10ஆம் நூற்றாண்டு வரை புத்த கோயிலாக இருந்த இவ்விடம் பின்னர் புத்த மதத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இது சிவன் கோயிலாக மாறியிருக்கிறது. 11ஆம் நூற்றாண்டில் இருந்து சிவன் கோயிலாகவே இது வழிபடப்பட்டு வருகிறது.

மங்களுருவின் கலாச்சாரம் :

மங்களூர் - தேவதைகளின் நகரம்

Photo: Hegades

மங்களூர் கர்னாடக மாநிலத்தின் கலாச்சார கேந்திரங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு பட்ட நாட்டுப்புற கலைகளில் மக்கள் ஈடுபடுவதை இங்கு கண்கூடாக நாம் காணலாம். தசரா, கிருஷ்ண ஜெயந்தி போன்ற திருவிழா காலங்களில் நம்ம ஊர் தெருக்கூத்துக்கு இணையான 'யக்ஷகானா' என்ற கதைசொல்லி நாடகம் நடக்கிறது. புராண கால கதைகள் இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படுகிறது. அதே போன்று மங்களுருவில் வசிக்கும் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் 'மொண்டி' என்ற விழாவையும், துளுவ இனத்தவர்களால் 'பூத கோல' என்ற விலக்கலும் கொண்டாடப்படுகிறது.

மங்களூர் - தேவதைகளின் நகரம்

Photo: dhyanji

மங்களுருக்கு ஒரு முறை வந்த பாரத பிரதமர் "இந்தியாவில் நான் பார்த்ததிலேயே மிக அழகான பெண்கள் வாழும் நகரம் இது தான்" என குறிப்பிட்டுள்ளார். உண்மையும் அது தான். நீங்களும் தேவதைகளின் நகருக்கு கட்டாயம் சென்று வாருங்கள்.

Read more about: mangalore temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X