Search
  • Follow NativePlanet
Share
» »துரோகிகளை தண்டிக்கும் மாசாணி அம்மன்!

துரோகிகளை தண்டிக்கும் மாசாணி அம்மன்!

By Staff

தமிழ்நாடு, இயற்கை வளங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள், உலக பாரம்பரியச் சின்னங்கள் என பலவித வளங்களுக்குப் பெயர் போன மாநிலம். ஆனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா ? எத்தனையோ சிறு கோவில்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் அதிகம் அறியப்பட்டிருக்கிறது. அவைகளும் ஒரு அடையாளச் சின்னங்கள்தானே. அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோவிலைப் பார்ப்போம்.

கோவை மாநிலத்தில், பொள்ளாச்சி அருகே 14 கி.மீ தொலைவில் ஆனைமலை எனும் ஊரில் இருக்கிறது மாசாணி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் விஷேஷம், பக்தர்கள் வேண்டுவதை, அம்மன், மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றிவிடுவாள் என்ற ஆழமான நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இந்த மாசாணி அம்மனை, நீதியின் பெண் கடவுள் என்றும் அழைக்கிறார்கள்.

Masani

Photo Courtesy : Official Website

பழங்காலத்தில் ஆனைமலை நன்னூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.இந்த ஊரை ஆட்சி செய்த அரசன், தனக்கு சொந்தமான மாந்தோப்பில், மாம்பழங்களைப் பறிக்கும் எவருக்கும் கடுமையான தண்டனைகளை கொடுத்து வந்தான். துரதிருஷ்டவசமாக, ஒரு பெண் மாம்பழத்தைப் பறித்து சாப்பிட்டும் விட்டாள். அரசன், அவளுக்கு மரண தண்டனை விதித்து விட்டான். பொதுமக்கள் எத்தனை மன்றாடிக் கேட்டும் அரசன் இறங்கி வரவில்லை. கடைசியில் அந்தப் பெண் கொல்லப்பட்டாள்.

சில காலம் கழித்து அரசன், கிராமவாசிகளால் விஜயமங்கலம் அருகே கொல்லப்பட்டான். அதன்பின், அந்தப் பெண்ணுக்காக ஒரு கோவிலை எழுப்பினார்கள். தெய்வத்தின் பெயரை ஷ்மஸாணி என்று வைத்தார்கள். ஷ்மஸாணி என்றால் சமஸ்கிருதத்தில் மயானம் என்று பொருள். இதுவே மாசாணி என்று பின்னாளில் ஆனது.

மாசாணி அம்மனின் சிலை, நான்கு கைகளில், 15அடி நீளத்தில் படுக்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கை, பாம்பையும், ஒரு கை மண்டைஓட்டையும், ஒரு கை திரிசூலத்தையும், ஒரு கை உடுக்கையும் வைத்திருக்கிறது.

Masani

Photo Courtesy : Official Website

பக்தர்கள், தாங்கள் எதேனும் பொருட்களை தொலைத்திருந்தால் அல்லது துரோகிகளால் வியாபாரத்தில் ஏமாற்றப் பட்டிருந்தால் நீதி கேட்க இங்கு வருவார்கள். சிவப்பு மிளகாயை அரைத்து, கல்லில் பூசி, வேண்டினால் நல்லது நடக்கும் என்று ஐதீகம்.

பொள்ளாச்சியிலிருந்து அரைமணி நேரப் பயணத்தில் இந்த கோவிலை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X