Search
  • Follow NativePlanet
Share
» »முருட் கடற்கரைக்கு ஒரு பயணம் செல்வோமா?

முருட் கடற்கரைக்கு ஒரு பயணம் செல்வோமா?

முருட் கடற்கரைக்கு ஒரு பயணம் செல்வோமா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் முருட் என்ற அழைக்கப்படும் கடற்கரை கிராமத்துக்கு அருகில் இந்த முருட்ஜஞ்சிரா எனும் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் சித்தி ராஜவம்சத்தினரின் ஆளுகையில் புகழ்பெற்று விளங்கியிருந்த இந்த கோட்டையானது மராத்தாக்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை போன்றோரின் தாக்குதல்களை சந்தித்து இன்னமும் சிதையாமல் காட்சியளிக்கின்றது.

ஜஞ்சிரா

ஜஞ்சிரா எனும் இந்த சொல் இந்திய மொழிகளிலிருந்து பிறந்ததல்ல. இது ஜசீரா எனும் அரபி சொல்லிலிருந்து பிறந்துள்ளது. தீவு எனும் பொருளை இந்தச்சொல் குறிப்பதாக கொள்ளலாம்.

முருட்ஜஞ்சிரா


முருட் எனும் சொல் மராத்தி மொழியில் அபீசீனியம் அல்லது அபிசீனிய எனும் பொருளைத்தரும் ஹப்சி, ஹப்சன் என்ற வார்த்தைகளுடனும் கூட தொடர்புபடுத்தப்படுகிறது. மேலும் கொங்கணி மொழியின் மொரோட் எனும் சொல்லுடனும் தொடர்புபடுத்தி இந்த முருட் எனும் பெயர் விளக்கப்படுகிறது. ஆகவே இந்த கோட்டை கொங்கணி மற்றும் அரபி மொழிகளிலிருந்து ‘மொரோட் மற்றும் ஜசிரா' என்ற சொற்களைக் கலந்து அழைக்கப்பட்டு தற்சமயம் ‘முருட்ஜஞ்சிரா'வாக அறியப்படுகிறது.

ஜல் ஜசீரா

சிலர் இதனை ஜல் ஜசீரா என்றும் அழைக்கின்றனர். அதாவது நாலாபுறமும் அரபிக்கடல் நீரால் சூழப்பட்டுள்ளதால் இந்த நினைவுச்சின்னம் அப்படி அழைக்கப்படுகிறது.

வரலாற்றுப்பின்னணி

12ம் நூற்றாண்டில் சித்தி வம்சத்தினரால் இந்த கோட்டை கட்டப்பட்டபோது முருட் நகரம் அவர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த கோட்டையை பிடிக்க முயன்று தோல்வியடைந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ராஜ வம்சங்களில் மராத்தா வம்சத்தின் தோல்வியையும் முக்கியமாக குறிப்பிடலாம்.

Read more about: travel mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X