Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் நீங்க கண்டிப்பாக போகவேண்டிய கடற்கரைகள்

இந்தியாவில் நீங்க கண்டிப்பாக போகவேண்டிய கடற்கரைகள்

என்னதான் நிறைய பணமும், நேரமும் செலவழித்து சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்தாலும் அங்கெல்லாம் கிடைக்காத ஒரு நிம்மதியை கடற்கரைகளில் காலாற நடக்கும் கணங்களில் நாம் பெற முடியும். நீலக்கடலுக்கு பின்னிருந்து சூரியன் உதயமாகும் காட்சியும், அஸ்தமிக்கும் காட்சியும் மனதை துள்ள வைக்கும் புத்துணர்வை தந்திடும்.

வாருங்கள், இந்திய நகரங்களில் இருக்கும் மிக சுத்தமான, சுற்றிப்பார்க்க சிறந்த கடற்கரைகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்க இந்தியாவில் இருக்கும் சிறந்த இடம் என இதை சொல்லலாம். இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியா குமரியில் அமைந்திருக்கும் இந்த கடற்கரையானது 'கேப் கொமேரின்' என்ற பெயரில் விளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடற்கரை முழுக்க பாறைகள் நிறைந்திருப்பதால் கடலில் கால் நனைப்பது, விளையாடுவது போன்றவற்றை இங்கு செய்ய முடியாது.

Photo:Magda Wojtyra

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை விடவும் இங்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு விஷமென்றால் அது பௌர்ணமி நாளில் அந்தி மாலை நேரத்தில் தோன்றும் முழு நிலவு தான். விவரிக்க முடியாத அழகுடையதாக இருக்கும் அந்த காட்சியை நிச்சயம் ஒரு முறையாவது நேரில் சென்று பார்த்திடுங்கள்.

Photo:Thejas Panarkandy

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

மேலும் கடற்கரையில் இருந்து 500.மீ தொலைவில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்திருக்கின்றன. இவற்றுக்கு செல்ல கரையில் இருந்து படகுகள் இயக்கப்படுகின்றன. கன்னியா குமரியை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Premnath Thirumalaisamy

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பின்னணியில் வர்ணஜாலம் நிகழ்த்தும் சூரியன்.

Photo:Mehul Antani

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

தமிழரின் நவீன கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை.

Photo:Premnath Thirumalaisamy

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியாகுமரி கடற்கரை :

கன்னியா குமரி நகரை எப்படி அடைவது? அங்கிருக்கும் ஹோட்டல்கள் என்னென்ன என்பதை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:ganuullu

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகளுக்கும், படகு வீடுகளுக்கும் பெயர் போன கேரளத்தின் பசுமையான நகரங்களில் ஒன்றான ஆலப்புழாவில் அற்புதமான கடற்கரையும் இருக்கிறது. அதிக பரபரப்பில்லாத, மாசுபடாத கடற்கரையாகவும் இது இருக்கிறது.

Photo:Babitha George

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

இந்த கடற்கரையை ஒட்டியே ஒரு கலங்கரை விளக்கமும் அமைந்திருக்கிறது. வார இறுதி நாட்களில் மதியம் 3 மணியில் இருந்து 4:30 மணி வரை திறந்திருக்கும் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் நின்று ஆலப்புழாவின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

Photo: Flickr

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா கடற்கரையின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:Sumeet Jain

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா கடற்கரையின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:NIKHANJ KS

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா கடற்கரையின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:Julia Maudlin

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா பீச் :

ஆலப்புழா கடற்கரையின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:Anne Roberts

பகா பீச், கோவா :

பகா பீச், கோவா :

கடற்கரைகளை பற்றி குறிப்பிடும் போது கோவாவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?. வெளிநாட்டவர்களால் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் கோவாவில் இருக்கும் ஒரு பிரபலமான கடற்கரை தான் பகா பீச் ஆகும்.

Photo:ruben alexander

பகா பீச், கோவா :

பகா பீச், கோவா :

நார்த் கோவாவில் இருக்கும் இந்த கடற்கரையில் நீர் விளையாட்டுகளான பாராசெயிளிங், பனானா ரைட் போன்றவை சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பீச் அமைந்திருக்கும் கடல் பகுதியில் டால்பின் மீன்களை பார்க்க முடியும்.

Photo:Lech Linkel

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X