Search
  • Follow NativePlanet
Share
» »நிஜாம் பங்களாவில் பேய், அமானுஷ்யத்தால் அதிர்ந்த அரசு அதிகாரி..!

நிஜாம் பங்களாவில் பேய், அமானுஷ்யத்தால் அதிர்ந்த அரசு அதிகாரி..!

சுமார் 133 ஆண்டுகளைக் கடந்த நிஜாமின் பங்களா ஒன்றில் உள்ள பேய் அரசு அதிகாரிகளையே பயமுருத்தும் அமானுஷ்யம் உங்களுக்குத் தெரியுமா ?

இந்தியாவில் பேய்கள் குறித்த கதைகளுக்கு அளவே இல்லை. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் மனித சக்திக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து விசயங்களும் ஏதோ ஒரு அமானுஷ்யம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இது சில சமயங்களில் விஞ்ஞானத்தினாலும் கூட தெளிவுபடுத்த முடியாத மர்மங்களாகவே நீடிக்கிறது. பேய்கள், மர்மங்கள் குறித்த பல விசயங்களை நம் சுற்றுவட்டாரத்திலேயே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இவற்றுள் அதிகமாக பேய்கள் இருப்பதாக நாம் பார்ப்பதே பழைய பங்களாக்களாகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது பேய் நடமாட்டம் இருப்பதாக ஓர் அரசு அதிகாரியே கூறும் நிஜாமின் பங்களாவை நோக்கித் தான்.

நிஜாம் நகரம்

நிஜாம் நகரம்

நிஜாம் நகரம்

இந்தியாவில் நிஜாம்களின் நகரம் என்றால் இது தெலுங்கானாவிற்கு உட்பட்ட பகுதிகள் தான். இந்திய அரசாட்சிக்குட்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மிகவும் செழிப்பானதாகவும், பெரியதாகவும் உள்ளது இம்மாநிலமே. குறிப்பாக, நிஜாம் வம்சத்தினர் உலகளவில் பணக்காரர்களாகவும் இருந்து தங்களது நகரங்களை செல்வம் மிக்கதாக வைத்திருந்தனர் என்பது வரலாறு.

AnushaEadara

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானா

வாரங்கல், கம்மம், அதிலாபாத், நல்கொண்டா, நிஜாமாபாத், மேடக், பத்ராச்சலம், போச்சம்பல்லி, நாகர்ஜுனாசாகர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா மாநிலம். பின், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை வளர்ச்சி, பொருளாதார அடிப்படையில் ஹைதராபாத் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.

Srikar Kashyap

நிஜாம் கோட்டைகள்

நிஜாம் கோட்டைகள்

தெலங்கானாவிடல பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களும், பல வரலாற்று அம்சங்களும் நிறைந்தது நிஜாம் அரசால் கட்டப்பட்ட கோட்டைகளும், அரண்மனைகளுமே. ஹைதராபாத்தில் உள்ள சார்மினார், பிர்லா மந்திர், பலக்னுமா பேலஸ், கோல்கொண்டா கோட்டை உள்ளிட்டவை பிரபலமான சுற்றுலாத் தலங்கள். அதுமட்டுமின்றி தெலுங்கானாவிற்கு உட்பட்ட வாரங்கல்லில் அமைந்துள்ள கோட்டைகளும், அரண்மனைகளும் உலகளவில் பிரசிதிபெற்ற தலங்களாக உள்ளன.

Bernard Gagnon

வாரங்கல்

வாரங்கல்

வாரங்கல் நகரத்தில் பல அற்புதமான கட்டிடக்கலைகள் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் முக்கியமானது வாரங்கல் கோட்டை. புரோள ராஜ எனும் காகதீய வம்ச மன்னர் இந்த அழகான நகரத்தை நிர்மாணித்ததாக சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. வாரங்கள் நகரம் வரலாற்று முக்கியத்துவம், பலவகையான நினைவுச் சின்னங்கள், சரணாலயங்கள் உள்ளிட்டவற்றிற்காக சுற்றுலாப்பயணிகளால் ஈர்க்கப்படுகிறது.

JohnnyBlaze007

வாரங்கல் கோட்டை

வாரங்கல் கோட்டை

வாரங்கள் நகரின் முக்கிய அடையாளமாக வாரங்கல் கோட்டை அறியப்படுகிறது. தற்போது சிதிலங்களின் மிச்சமாக காட்சியளிக்கும் இக்கோட்டை வளாகத்தின் கம்பீரத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளை ஒருவித பிரம்மிப்பிப்பை உணரச் செய்கிறது. வரலாறு மற்றும் புராதனங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு பயணம் செய்வது வழக்கம்.

abhinaba

நிஜாமின் அரச பங்களா

நிஜாமின் அரச பங்களா


நிஜாமின் ஆட்சிக் காலத்தில் தெலுங்கானாவிற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு கோட்டைகளும், மகால்களையும் கட்டினார் என்பது நாம் அறிந்தது தான். அவற்றுள் ஒன்று வாரங்களில் உள்ள அரசு பங்களா. தற்போது, வாரங்கல் ஆட்சியரின் குடியிருப்பாக உள்ள இந்த பங்களா 1886-ஆம் ஆண்டு நிஜாம் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். அப்போது நிஜாம் ஆட்சி அலுவலகமாகவும் இந்த பங்களா இருந்தது.

ஆட்சியர் பங்களா

ஆட்சியர் பங்களா


1886-க்குப் பின் 1956 ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு பணிகளுக்காக பயண்படுத்தப்பட்டு வந்த இந்த நிஜாம் பங்களா தற்போது 133 ஆண்டுகளைக் கடந்த பழைமையான ஓர் கட்டிடமாக உள்ளது. இதனை வடிவமைத்துக் கட்டியவர் ஜார்ஜ் ஃபார்மர் என்னும் பிரபல பொறியாளர் என்பதற்கான ஆவணங்கள் உள்ளன.

ஆவியைக் கண்டு அஞ்சும் ஆட்சியர்

ஆவியைக் கண்டு அஞ்சும் ஆட்சியர்


தற்போது வாரங்கல்லின் ஆட்சியர் அமராபாலி கடா இந்த அரசு பங்களாவில் தான் வசித்து வருகிறார். பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஓர் அரையில் அமானுஷ்ய செயல்கள் இருப்பதை உணர்ந்த அவர், அந்த அரையை முழுவதுமாக சுத்தம் செய்தும் இன்னும் இரவு நேரங்களில் சில மர்மமான நிகழ்வுகள் அங்கே நிகழ்வதாக தெரிவித்துள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X