Search
  • Follow NativePlanet
Share
» »உடுப்பி அருகே பாஜக னு ஒரு ஊர் இருக்கு! அதோட சிறப்பு தெரியுமா?

உடுப்பி அருகே பாஜக னு ஒரு ஊர் இருக்கு! அதோட சிறப்பு தெரியுமா?

துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்துக்கு ஒரு சுற்

By Udhaya

துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா சென்று பார்க்கலாம். மேலும் அருகிலுள்ள உடுப்பி உள்ளிட்ட மற்ற பகுதிகளையும் ரசித்துவிட்டு வரலாமே. மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்ப நிச்சயமா நம்ம தளத்துல வர்ற பதிவுகள எளிமையான முறையில் நீங்களே பெறலாம். சரி வாங்க பாஜகவுக்கு போகலாம்.

மத சடங்குகள்

மத சடங்குகள்

மாதவ மந்திரா என்று அறியப்படும் மத சடங்குகள் நடைபெறும் இடமும் இங்கு முக்கியமான யாத்ரீக அம்சமாக விளங்குகிறது. இங்கு வேத பாடங்களும் சம்ஸ்கிருத வகுப்புகளும் நட த்தப்படுகின்றன.

Vaikoovery

 ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்


இது தவிர இந்த ஸ்தலத்தில் ஒரு பரசுராமர் கோயிலும் உள்ளது.இங்குள்ள ஒரு வளாகத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாபர் கோயில், ஸ்ரீ மத்வாச்சாரியார் வாழ்ந்த வீடு மற்றும் அவரது சிலை காணப்படும் ஒரு கோயில் போன்றவை காணப்படுகின்றன. இந்த சிலை ஸ்ரீ வாடிராஜாவால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Vaikoovery

 மத்வாச்சாரியாரின் தொடர்புகள்

மத்வாச்சாரியாரின் தொடர்புகள்


இங்குள்ள எல்லா அம்சங்களுமே ஷீ மத்வாச்சாரியார் சம்பந்தப்பட்டதாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக இங்குள்ள ஒரு பெரிய ஆலமரம் அவரால் நடப்பட்டதாகவும் மற்றும் இங்கு காணப்படும் நான்கு குளங்களில் அவர் நீர் எடுத்து பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Bgadicha

எப்படி செல்வது

எப்படி செல்வது

பாஜக க்ஷேத்திரம் உடுப்பியிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் உடுப்பி ஆகும். உடுப்பியிலிருந்து பாஜக க்ஷேத்திரத்துக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. உடுப்பியிலுள்ள ஏராளமான விடுதிகள், உணவகங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கலாம்

Nharipra

சந்திர மௌலேஸ்வரர் கோயில்

சந்திர மௌலேஸ்வரர் கோயில்

கர்நாடக மாநிலத்தின் ஹுப்பளியின் எல்லைப்பகுதியில் ‘உன்கல்' எனும் இட த்தில் இந்த சந்திர மௌலேஸ்வரர் கோயில் உள்ளது. இது 900 ஆண்டுகளுக்கு முன்னர் சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பம்சங்களாக நான்கு திசைகளிலும் அமைந்துள்ள கதவுகளும் இரண்டு சிவலிங்கங்களும் காணப்படுகின்றன.

இதர அம்சங்களாக சிற்பங்களுடன் கூடிய சுவர்களும் தூண்களும் கருப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. பக்தர்களுக்கான ஆன்மீக தரிசனத்துக்காக இங்கு நடனமாடும் கணேஷ கடவுள் மற்றும் ஜலந்தர கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் 11 மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தாக அறிவிக்கின்றன. திறமையான சிற்பிகளாலும், கலைஞர்களாலும், கொத்தர்களாலும் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் இது யாரால் கட்டுவிக்கப்பட்ட து என்ற வரலாறு தெரியவில்லை.

itslife

 அனந்தேஸ்வர் கோயில்

அனந்தேஸ்வர் கோயில்


உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள இன்னொரு முக்கியமான கோயில் இந்த அனந்தேஸ்வர் கோயில் ஆகும். இது கேரள மாநிலப்பகுதியில் அமைந்திருந்த போதிலும் கர்நாடக பக்தர்கள் மத்தியிலும் இது புகழ் பெற்றுள்ளது. பரவலாக இது மஞ்சுளா கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இதுவும் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை இது பெற்றுள்ளது. இந்த கோயில் மூன்று புறம் மலைகளாலும் ஒரு புறம் மஞ்சேஷ்வர் நதியாலும் சூழப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே ஷீ அனந்தா, ஷீ ஈஷ்வர் மற்றும் பத்ர நரசிம்மர் போன்ற மூன்று முக்கியமான விக்கிரகங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டிலிருந்து விஷ்ணுவை வழிபடும் பக்தர்களுக்கு இது முக்கிய யாத்ரீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இந்தக் கோயில் உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் மஞ்சேஷ்வர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. உடுப்பி மற்றும் மஞ்சேஷ்வர் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு பஸ் வசதிகள் உள்ளன. மஞ்சேஷ்வர் மற்றும் உடுப்பி இரண்டு ஊர்களிலும் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

itslife

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X