Search
  • Follow NativePlanet
Share
» »கடலூர் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டிய இடங்கள் மற்றும் எப்படி அடைவது

கடலூர் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டிய இடங்கள் மற்றும் எப்படி அடைவது

கடலூர் சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது

கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு டவுன்) மற்றும் புதிய கடலூர் (நியூ டவுன்) என்று இரண்டு வகை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.திருப்பாதிரிப்புலியூர் என்ற புதிய கடலூர் நகரத்தை கெடிலாம் நதி பாய்ந்து தனியாக பிரிக்கிறது. புதுச்சேரிக்கு மிக அருகில் இருக்கும் இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களைப் பற்றி காணலாம் வாருங்கள்.

 ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா

கடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன.

Ssriram mt

 கடற்கரை சுற்றுலா

கடற்கரை சுற்றுலா

கடலூரில் இருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது, செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.

Shankaran Murugan

 சதுப்பு நிலக் காடுகளும் தீவுகளும்

சதுப்பு நிலக் காடுகளும் தீவுகளும்

சதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.

கடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.

Shankaran Murugan

 பிற சுற்றுலாத் தலங்கள்

பிற சுற்றுலாத் தலங்கள்

கடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன. 26 டிசம்பர் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளில் கடுமையான தாக்குதலுக்குள்ளான பின்னரும் கடலூர் சாகாவரம் பெற்ற நகரமாக மீண்டும் உயிர்த்தெழுந்து வளர்ந்து வந்திருக்கிறது.

Shankaran Murugan

 எப்போது எப்படி அடைவது

எப்போது எப்படி அடைவது

மித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கடலூரில் பருவநிலையும் மிதமானதாக இருக்கும். குளிர்காலம் நிலவும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் கடலூருக்கு வருவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த நேரத்தில் வெப்பநிலை மிகவும் ரம்மியமானதாக இருப்பதால் பயணிகள் நல்ல சூழலை எதிர் கொள்ள முடியும்.

இந்நகரம் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையம் கடலூருக்கு மிக அருகில் இருக்கிறது, சென்னை விமான நிலையம் மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகவும் இருக்கிறது.

கடலூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள் இந்நகரை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. தேசிய நெடுங்சாலை 45A-ல் அமைந்துள்ள கடலூர் சாலைவழியே மிகச்சிறந்த இணைப்பை பெற்றுள்ள நகரமாகும்.

Glasreifen

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X