Search
  • Follow NativePlanet
Share
» »எயில் நாடு என்றழைக்கப்பட்ட கிருஷ்ணகிரியின் அழகிய சுற்றுலாத் தளங்கள்

எயில் நாடு என்றழைக்கப்பட்ட கிருஷ்ணகிரியின் அழகிய சுற்றுலாத் தளங்கள்

கிருஷ்ணகிரி சுற்றுலாத் தளங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

தமிழ் நாட்டின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி எண்ணற்ற கருப்பு கிரானைட் மலைகளையுடைய நிலப்பகுதிகளுக்கு சொந்தமான நகரமாகும். 5143 சகிமீ பரப்பளவுடைய இந்த புதிய மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு பார்வையிடங்களை தன்னகத்தே கொண்டுள்ள இடமாகும். KRP அணைக்கட்டினை முதன்மையான பார்வையிடமாக கொண்டிருக்கும் கிருஷ்ணகிரியில் மேலும் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோவில்கள், பூங்காக்கள், கோட்டைகள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவை திணறடிக்கும் இயற்கைச் சூழலில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.வாருங்கள் கிருஷ்ணகிரிக்கு சுற்றுலா செல்வோம்

முக்கிய ஆன்மீகத் தளங்கள்

முக்கிய ஆன்மீகத் தளங்கள்

தளி வேணுகோபால சுவாமி கோவில்


தளியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் தென்னிந்தியாவின் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும். கிருஷ்ண பகவானின் அவதாரமாக கருதப்படும் வேணு கோபால சுவாமிகளின் சிலை இந்த அழகிய, கண்கவரும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும்

இயற்கை சூழலில் இருக்கும் இந்த கோவிலின் தரைதளம் சத்தத்தை எதிரொலிக்கும் தன்மையுடையது. இந்த கோவில் இயற்கையின் பாதையில் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயற்கையின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் காலத்தால் அழகுற பராமரிக்கப்பட்டு, தளியின் அழிக்க முடியாத பகுதியாகவும் மற்றும் இந்த தளிக்கு வரும் பார்வையாளர்களின் இதயத்தை கவரும் இடமாகவும் உள்ளது.

எப்போது செல்வது

தேர்த்திருவிழா நடப்பதால் வேணுகோபால சுவாமி கோவில் மே மாதங்களில் களைகட்டி நிற்கும். நீங்கள் அமைதி மற்றும் சாந்தத்தை தேடுபவராக இருந்தால், தேர்த் திருவிழா நடைபெறும் மே மாதத்தில் தளிக்கு வாருங்கள்.

Ashwin Kumar

அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில்

* ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் NH-7-ல் மலைக்குன்றுகளின் மீது அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் யாராலும் சென்று அறியப்படாதவையாகும்.

* சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலில் எழுப்பப்பட்டுள்ள வானியல் கவனிப்பு மையம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை வழிபாடு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஒசூர் வழியாக வேறு இடங்களுக்கு செல்பவர்களாக இருப்பார்கள்.

* சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் அமைவிடமும், அருகிலுள்ள எழில் கொஞ்சும் பூங்காவும் இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளை நிறுத்திச் செல்ல ஏற்ற தாக்கத்தை தருகின்றன.

kamal chid

கெலவாரபள்ளி நீர்த்தேக்கம்

கெலவாரபள்ளி நீர்த்தேக்கம்

*சென்னகேசவ மலைகளின் கிழக்குப் பகுதிகளில் ஊற்றெடுக்கும் பெண்ணையாற்றின் குறுக்கே கெலவாரபள்ளி நீர்த்தேக்க திட்டம் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

*கெலவாரபள்ளி அணைக்கட்டு அருகிலுள்ள விளை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியையும் மற்றும் ஒசூரின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் இடமாகவும் உள்ளது.

*331 கிமீ நீளமுடைய பெண்ணையாறு அதன் வழியில் உள்ள நகரங்களின் தண்ணீர் தேவைகள், விளைநிலங்களுக்கான நீர்ப்பாசனம், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நீராதாரம் ஆகியவற்றை வழங்கும் புண்ணிய நதியாக விளங்குகிறது.

*13.5 மீட்டர்கள் உயரமாக இருக்கும் கெலவாரபள்ளி அணையைச் சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அமைதியும், இயற்கையும் குடி கொண்டிருப்பதற்காக மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவைகளின் சரணாலயமாகவும் இந்த அணைக்கட்டு விளங்குகிறது.

*பெருமளவிலான இடம் பெயரும் பறவைகளுக்கு கெலவாரபள்ளி அணைக்கட்டும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் தான் வசிப்பிடம்.

*பல்வேறு வகையான உள்ளூர் பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகளை உடைய கெலவாரபள்ளி நீர்த்தேக்கம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாகும்.

*பறவைகளை கவனிப்பவர்களுக்கு கெலவாரபள்ளி நீர்த்தேக்கத்தைப் போன்ற அருமையான இடமோ, அங்கு எழும் பறவைகளின் சத்தங்களைப் போன்றோ சிறந்த அமைவிடம் எதுவும் இல்லை.

* குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவுரும் அனுபவிக்க வேண்டிய அருமையான இடம் கெலவாரபள்ளி அணைக்கட்டாகும்.
கெலவாரபள்ளி அணையிலிருக்கும் அனைத்து விளையாட்டு வசதிகளுடனான பூங்கா குழந்தைகளை இயற்கையின் மடியில் மகிழ்விக்கும் கலையை இன்றும் செய்து வருகின்றது.

Vijay S

மல்லாசந்த்ரம்

மல்லாசந்த்ரம்

*உலகப் புகழ் பெற்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை (Dolmen) புதைபொருள் படிவுகளாக கொண்டிருக்கும் மல்லாசந்த்ரம் என்ற இடம் தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

*Dolmen- பழங்கால கல்லறைகளை கட்டுவதற்காக வைக்கப்படும் பெரிய பாறையாகும். இந்த வார்த்தையின் அர்த்தம் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தூண் போன்ற கற்கள் பாறையால் மேல் மூடிவைக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கிறது.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்குங்கள்

Gandhirajan-KT

 கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம்

*கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கவரும் இடமாக உள்ளது.

*1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் எண்ணற்ற கலைச் சின்னங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

*கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் பாரம்பரியத்துடன் உறவையும், கலை மற்றும் கட்டிடக்கலைகள், கலாச்சாரம் மற்றும் தமிழக வரலாற்றையும் ஒருங்கே கொண்டிருக்கும் அமைவிடமாகும்.

*கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் பொழுதுபோக்கிற்கான இடமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த கல்விக்கூடமாகவும் விளங்குகிறது.

Thamizhpparithi Maari

ராயக்கோட்டை

ராயக்கோட்டை


*ராயக்கோட்டை என்று அழைக்கப்படும் ராயக்கோட்டாவில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமான ராயக்கோட்டா கோட்டை அமைந்துள்ளது.

*பாலக்காட்டு பீடபூமியின் எல்லையை வரையறுக்கும் இடமாக ராயக்கோட்டா மலை உள்ளது. பழமையான கோட்டையாக அறியப்படும் இது, பல்வேறு யுத்தங்களை சந்தித்துவிட்டு, அழிவுகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

*சாலை வழியாக செல்ல முடியாத இந்த கோட்டைக்கு செல்ல இரண்டு மணி நேரம் மலைகளில் ஏற வேண்டும். இந்த மலையேற்றம் சுற்றுலா வருபவர்களின் சந்தடி மிகுந்த நகர வாழ்க்கைக்கு பெரும் நிவாரணமாக திகழ்ந்து வருகிறது.

Venkasub

தளி

தளி

*அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து' என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத் தலமாகும்.

*எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைத் தரும் சுற்றுலாத்தலமாகும்.

*ஒசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தளி கிராமத்திற்கு தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் சென்று வர முடியும்.

*மலையேற்றம் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை கொண்டுள்ள இடமாக தளி புகழ் பெற்றிருக்கிறது.

Vijay S

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X