Search
  • Follow NativePlanet
Share
» »தசரதன் 60000 பேரை திருமணம் செய்தது எந்த இடத்தில் தெரியுமா?

தசரதன் 60000 பேரை திருமணம் செய்தது எந்த இடத்தில் தெரியுமா?

நம் இதிகாச புராண கதைகள் எல்லாம் வெறுமனே படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. ஒழுங்கு நெறிகள் நிறைந்த அவற்றின் குறியீடுகள் நமக்கு நல் ஒழுக்கத்தையும், வாழ்வின் சிறப்பையும் உணர்த்துவதாகவே அமையும். அப்பட

By Udhaya

நம் இதிகாச புராண கதைகள் எல்லாம் வெறுமனே படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. ஒழுங்கு நெறிகள் நிறைந்த அவற்றின் குறியீடுகள் நமக்கு நல் ஒழுக்கத்தையும், வாழ்வின் சிறப்பையும் உணர்த்துவதாகவே அமையும். அப்படி இந்தியாவில் நிறைய புராணக் கதைகள் உள்ளன. ராமனைப் போல கணவன் வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கிறது. அப்படி ராமனின் குண நலன்களாக சிலவற்றை புராணங்கள் கூறும். அப்படி ராமனின் தந்தை தசரதனைப் பற்றிய குண நலன்கள் பற்றி தெரியப்படுத்தும்போது அவருக்கு அறுபது ஆயிரம் மனைவிகள் என்று கூறுவதுண்டு. புராணத்தை விடுவோம். தசரசன் அப்படி 60 ஆயிரம் மனைவிகளை திருமணம் செய்து கொண்ட இடத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா. அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். அதுக்கு முன்னாடி இது போன்ற கட்டுரைகள தினமும் படிக்க மறக்காம மேல இருக்குற பெல் பட்டன தட்டி, ஒரு சப்ஸ்கிரைப்ப போட்டு விடுங்க. அப்படியே பேஸ்புக்லயும் பாலோ பண்ணுங்க. சரி வாங்க 60 ஆயிரம் மனைவிகளுடன் தசரதன் வாழ்ந்த இடத்தைப் பற்றிய பத்து விசயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

 எங்குள்ளது

எங்குள்ளது


அறுபது ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக கூறப்படும் தசரதன் ஆட்சி செய்த நாடு கோசல நாடு எனும் புராதான தேசம் ஆகும். இது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த பகுதியாகும். இந்த பகுதி தற்போது உத்திரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அவாத் எனும் பிரதேசத்தில் இருக்கிறது.

இது கலாச்சாரம் மற்றும் அரசியல் காரணமாக மாபெரும் சக்தி படைத்த நாடாக இருந்துள்ளது.

Planemad

 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்த மாளிகை

60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்த மாளிகை

இது கதையாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை பெரும்பாலானோர் மத்தியில் இருக்கிறது. ஆம். தசரத மன்னர் தனது அறுபதாயிரம் மனைவியர்களுடன் இங்குதான் வாழ்ந்தாராம். அந்த அரண்மனையில் தற்போது ஒரு சிறு பகுதிதான் மிஞ்சியிருக்கிறது. அது ராமர், லட்சுமணன் குழந்தை பருவத்தை கழித்த தசரத் பவன் என்றழைக்கப்படும் தசரதர் மாளிகை.

mys

 எவ்வளவு பெரியது தெரியுமா

எவ்வளவு பெரியது தெரியுமா


சிலர் தசரதருக்கு 60 ஆயிரம் மனைவிகள் இருப்பதை ஏற்பதில்லை. அவர்கள் தசரதருக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக நம்புகின்றனர். ஆனால் பரசுராமரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக அறுபதாயிரம் மனைவியர்களைத் திருமணம் செய்தார் என்று நம்புவோரும் உண்டு. எல்லாம் சரி 60 ஆயிரம் பேருடன் அவர்களது குழந்தைகளையும் வைத்து வாழ்வதற்கு எவ்வளவு பெரிய அரண்மனை கட்டப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமால்ல.. எவ்ளோ பெருசு....

Shalini Tomar

அமைப்பு

அமைப்பு

இந்த மாளிகையின் முன் புறத்தில் தோட்டம் போன்ற ஒரு பெரிய அமைப்பு இருந்துள்ளது. அதில்தான் ராமர் தனது குழந்தை பருவ சுட்டித்தனங்களை நிகழ்த்தியுள்ளார். அவர் தனது சகோதரர்களுடன் விளையாடிய பகுதிகள் இன்று பல கட்டிடங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்களின் அரண்மனைக்கு முன்பு ஒரு கோயிலும் இருந்திருக்கின்றது. அது மிகப் பெரிய நுழைவு வாயில் கொண்டதாக இருந்திருக்கிறது. அதைத்தான் தற்போது ராமர், லட்சுமணன், சீதா ஆகியோரது சிலைகளைக் கொண்ட நவீன கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக நம்புகின்றனர் ராம பக்தர்கள்.

Bhelki

 இப்போதே செல்லுங்கள்

இப்போதே செல்லுங்கள்


நவீன தசரத் பவனுக்கு இப்போதே செல்லுங்கள். அங்கு மூவர் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் நீங்கள் நிச்சயம் ஈர்க்கப்படுவீர்கள். சாதுக்களும் சன்யாசிகளும் அங்கு நிறைய பேர் வருகிறார்கள்.

இங்கு ராமாயண சொற்பொழிவுகளும் கவிதைகளும் அடிக்கடி நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதில் நீங்கள் நிச்சயம் கவர்ந்து இழுக்கப்படுவீர்கள். தற்போது நீங்கள் பார்க்கும் இந்த இடத்தை விட நூறு மடங்கு பெரியதாக இருக்குமாம் அந்த காலத்தில் இருந்த தசரத மன்னரின் அரண்மனை.

Vaibhavsoni1

 தசரத நாடு தற்போது எப்படி இருக்கு தெரியுமா

தசரத நாடு தற்போது எப்படி இருக்கு தெரியுமா

அப்போது தசரத மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அந்த நாடு இப்போது எப்படி இருக்கிறது என்பதை காண நிச்சயம் நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய கான்பூர் பகுதி தசரதர் ஆட்சி செய்த நாட்டின் எல்லையாக இருந்திருக்கிறது. இந்நாட்டில் அலகாபாத், வாரணாசி, ஜான்பூர், கோரக்பூர், லக்னோ, ரேபரேலி, கோண்டா, சுல்தான்பூர், பட்லாபூர் உள்ளிட்ட பகுதிகளும், தற்போதைய நேபாளத்தின் சிறு சிறு பகுதிகளும் இருந்துள்ளன.

आशीष भटनागर

 சுற்றுலா செல்வோமா?

சுற்றுலா செல்வோமா?

அயோத்யா நகரம் இந்துக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலமாகும். ஆன்மீகவாதிகளுக்கு அயோத்யா பல சுற்றுலா ஈர்ப்புகளை அளிக்கின்றன. நாகேஷ்வர்நாத் கோவில் மற்றும் சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் இங்குள்ள கோவில்களில் மிக முக்கியமானதாகும்.
ராமயணத்தை மீண்டும் எழுதிய துளசிதாஸ் என்பவரின் நினைவாக இந்திய அரசாங்கம் துளசி ஸ்மாரக் பவன் என்ற நினைவகத்தை எழுப்பியுள்ளது.

1992-ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராம் ஜன்ம பூமி உள்ளது என பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது. கனக பவன் என்ற இடத்தில் ராம பிரான் மற்றும் சீதா பிராட்டி தங்க கிரீடம் அணிவித்த ஓவியங்களை காணலாம்.

ஹனுமான் கர்ஹி என்ற கோவில் பெரிய கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நாலாப் பக்கமும் வட்ட வடிவத்தில் கோட்டையின் முன் தள்ளிக் கொண்டிருக்கும் முகப்புகளை காணலாம்.

தசரத் பவன் என்ற இடம் ராமரின் தந்தையான தசரத சக்ரவர்த்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும். ட்ரேடா-கே-தகூர் என்ற இடத்தில் தான் ராமபிரான் அஸ்வமேத யாகத்தை மேற்கொண்டார் என்று நம்பப்படுகிறது.

சீதா கி ரசோய் என்ற இடம் ராம் ஜன்ம பூமி கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் தான் சீதா தேவி திருமணத்திற்கு பிறகு ராம பிரானுக்கு முதன் முதலில் சமைத்தார் என்று நம்பப்படுகிறது.

Mukulfaiz

 ராமனின் மகனால் கட்டப்பட்ட கோயில்

ராமனின் மகனால் கட்டப்பட்ட கோயில்


அயோத்யாவில் உள்ள ராம் கி பைடியில் அமைந்துள்ளது நாகேஷ்வர்நாத் கோவில். இது நாகேஷ்வர்நாத் அல்லது சர்ப்பங்களின் கடவுள் என்றழைக்கப்படும் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலின் மூலக் கடவுளும் அவரே. பன்னிரண்டு ஜோதிலிங்கத்தில் ஒன்று இந்த கோவிலின் கருவறையில் உள்ளது.

சர்ப்பத்தின் மகளான நாக்-கன்யாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக குசா இந்தக் கோவிலை கட்டினார் என்று புராணம் சொல்கிறது.

uptourism.gov.in

 ராமர் பிறந்த இடம்

ராமர் பிறந்த இடம்

அயோத்யா என்பது ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், இந்த நகரத்தில் உள்ள ராம் கோட் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் அவர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தை தான் ராம் ஜன்ம பூமி என்று அழைக்கின்றனர். இந்த இடம் 15-ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் முதல் முகலாய பேரரசரான பாபரால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு இங்கு பாப்ரி மஸ்ஜித் என்ற புகழ் பெற்ற மசூதியையும் பாபர் கட்டினார்.

Ramnath Bhat

 சென்னையிலிருந்து செல்ல

சென்னையிலிருந்து செல்ல


சென்னையிலிருந்து அயோத்தி நகருக்கு செல்வது என்பது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் ஒருவேளை பயணிக்க விரும்பினால் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி பயணிக்க வேண்டியிருக்கும்.

சென்னையிலிருந்து ஹைதராபாத்

ஹைதராபாத்திலிருந்து நாக்பூர்

நாக்பூரிலிருந்து டெல்லி அல்லது லக்னோ

ஒரு வேளை நீங்கள் ரயிலில் செல்ல விரும்பினால்,

ரயில் 1

ஸ்ரத்தா சேது விரைவு வண்டி

சென்னையிலிருந்து திங்கள் கிழமை மதியம் 1 மணிக்கு செல்கிறது

அயோத்தியில் புதன்கிழமை காலை 8 மணிக்கெல்லாம் சென்று சேர்கிறது.

ரயில் 2

திருவனந்தபுரம் கோரக்பூர் அதிவிரைவு வண்டி

சென்னையிலிருந்து ஞாயிறு, செவ்வாய், புதன் கிழமைகளில் புறப்படுகிறது. கிட்டத்தட்ட 38 மணி நேர பயணத்தில் சென்றடைகிறது.

ரயில் 3

எர்ணாகுளம் - பரவுனி ராப்தி சாகர் அதிவிரைவு வண்டி

வெள்ளிக்கிழமை மட்டும் இயங்கும் இந்த வண்டி இரவு 11. 30க்கு புறப்பட்டு ஞாயிறு மதியம் 1 மணிக்கெல்லாம் மங்காப்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தை அடைகிறது.

மற்றபடி விமானத்தில் பயணிக்கவும், விமான, ரயில், கார்கள் கட்டணம் மற்றும் புக்கிங் செய்ய இதை சொடுக்கவும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X