Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம ஊரு செட்டிநாடு! கேரளான்னா தலச்சேரி ஒரு புடி புடிக்கலாம் வாங்க

நம்ம ஊரு செட்டிநாடு! கேரளான்னா தலச்சேரி ஒரு புடி புடிக்கலாம் வாங்க

கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம

By Udhaya

கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களை கொண்டுள்ள இந்த நகரம் 'மலபார் கடற்கரைப்பகுதி'யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம். இந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக இந்த நகாம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. சரி இந்த இடத்தில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது. எங்கெங்கு செல்லலாம். எப்படி பொழுதை கழிக்கலாம். எப்படி மகிழ்ந்திருக்கலாம் என்று பல்வேறு தகவல்களையும் ஒருங்கே தாங்கி வருகிறது இந்த கட்டுரை. மறக்காம இது போன்ற கட்டுரைகள எளிமையாக பெற மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க... வாங்க தலச்சேரிக்கு ஒரு பயணம் போலாம்.

 வணிக நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் வருகை

வணிக நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் வருகை

வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஆங்கிலேயர் இந்த தலச்சேரிக்கு 1682ம் ஆண்டு வருகை தந்துள்ளனர். கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருந்ததால் இது ஒரு வணிகக்கேந்திரமாக மாறியுள்ளது. பலவிதமான அரசியல் மற்றும் இலக்கிய செயல்பாடுகள் இங்கு உருவாகியிருப்பதால் இது மலபார் பகுதியின் கலாச்சார தலைநகரமாகவும் அறியப்படுகிறது.

Vinayaraj

முதல் மலையாள பத்திரிகை

முதல் மலையாள பத்திரிகை

ஹெர்மன் குண்டட் என்பவரால் தொடங்கப்பட்ட ராஜ்யசமாச்சாரம் எனும் பத்திரிகைதான் உலகின் முதல் மலையாள செய்தி தாள் ஆகும். முதல் மலையாள தினசரிப்பத்திரிகையும் நாவலும் இங்கு அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vinayaraj

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

வரலாற்றின் அதிர்வுகளைக்கொண்ட நகரம் இங்கிலிஷ் சர்ச், மீனவர் கோயில் , ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி, தலச்சேரி கோட்டை மற்றும் ஜும்மா மஸ்ஜித் போன்றவை தலச்சேரி சுற்றுலாத்தலத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

வரலாற்றுப்பிரியர்களுக்கு இங்குள்ள குண்டர்ட் பங்களா எனும் பாரம்பரிய நினைவுச்சின்னம் வெகு பிடித்தமானதாக இருக்கும். முதல் மலையாள - ஆங்கில அகராதியை தொகுத்த ஜெர்மானிய அறிஞரான குண்டர்ட் வாழ்ந்த மாளிகையே இது.

ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி எனும் இந்த கட்டமைப்பு பாதியில் நின்று தோல்வியாக கருதப்பட்ட ஒரு வரலாற்றுகால திட்டத்தின் மிச்சமாகும்.

ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஸ்தலமான இது தலச்சேரி நீதிமன்றம் மற்றும் முனிசிபல் மைதானத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

மிக வித்தியாசமான கடல் காட்சி தளம் என்று இதனை சொல்லலாம். ஒரு பூங்காவின் மீதிருந்து கடலை மிக அருகில் பார்த்து ரசிக்கக்கூடிய காட்சித்தள அமைப்பான இது ஒரு உன்னதமான ரசனைப்படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கு காஃபி ஷாப் ஓன்றும் பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ளது. மிகுந்த மனநிறைவைத் தரும் ஒரு வித்தியாசமான பூங்கா இது என்பதால் தலச்சேரிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த ‘ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி' க்கு விஜயம் செய்வது நல்லது. சப் கலெக்டர் பங்களாவுக்கு அருகில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

ShajiA

 மாஹே எனும் மாய உலகம்

மாஹே எனும் மாய உலகம்


இந்தியாவில் மிக முக்கியமான ஃப்ரெஞ்சு காலனியாக விளங்கிய ‘மாஹே' நகரம் தலச்சேரியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த நகரத்துக்கும் ஒரு முறை விஜயம் செய்வது சிறந்தது.

வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த நகரத்திலுள்ள வெஸ்லி'ஸ் பங்களா, ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட், கத்தோலிக் ரோசரி சர்ச், வாமில் கோயில், தாகூர் பூங்கா, உதயா களரி சங்கம், கவர்ன்மென்ட் ஹவுஸ் மற்றும் ஒடத்தில் பள்ளி போன்ற சுற்றுலா அம்சங்கள் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.

Prabhupuducherry

 ஆசியாவின் நீளமான டிரைவ் இன் பீச்

ஆசியாவின் நீளமான டிரைவ் இன் பீச்

தலச்சேரியிலிருந்து 9 கி.மீ தூரத்தில் முழப்பிளாங்காட் பீச் எனும் ‘டிரைவ் இன் பீச்' அமைந்துள்ளது. கேரளாவிலேயே இதுபோன்ற ஒரே கடற்கரை இதுதான் என்னும்படியான புகழை இந்த கடற்கரை பெற்றுள்ளது.

கேக் தயாரிப்பு மற்றும் பேக்கரி தொழில் போன்றவை உருவான பிரதேசம் என்பதோடு செழுமையான உணவுப் பாரம்பரியத்தையும் இது கொண்டுள்ளது.

Vinayaraj

 உணவும் போக்குவரத்தும்

உணவும் போக்குவரத்தும்

பொதுவாக இனிமையான சுற்றுப்புற சூழலுடன் காட்சியளிக்கும் தலச்சேரி நகரம் ரயில் வசதி மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளுக்கு எந்த குறையுமில்லாமல் காணப்படுகிறது. பாரம்பரிய அம்சங்கள், இயற்கை, உணவு ருசி மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவை நிரம்பிய ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலத்தை தேடும் பயணிகளுக்கு தலச்சேரி சரியான தேர்வு ஆகும்.

Shagil Kannur

தலச்சேரி கோட்டை | நேரம் | கட்டணம்

தலச்சேரி கோட்டை | நேரம் | கட்டணம்

தலச்சேரி கோட்டை அல்லது தெலிசேரி கோட்டை என்றழைக்கப்படும் இந்த வரலாற்று சின்னம் 1708ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டுள்ளது. காலனிய ஆட்சிக்காலத்தின்போது வணிக நிர்வாகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றில் இந்த கோட்டை முக்கிய பங்காற்றியுள்ளது. முழப்பிளாங்காட் கடற்கரையை ஒட்டி ஒரு குன்றின்மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கோட்டை காலனிய கால வரலாறு மற்றும் மைசூர் ஊடுறுவல் போன்ற சுவாரசியமாண கதைகளை தன் பின்னணியில் கொண்டுள்ளது. பிரம்மாண்டமாக உயர்ந்து காட்சியளிக்கும் சுற்றுச்சுவரையும் நுணுக்கமான குடைவு வேலைகளைக் கொண்டுள்ள மரக்கதவுகளையும் இக்கோட்டை கொண்டுள்ளது. அரபிக்கடலை நோக்கி ரகசிய சுரங்கப்பாதைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டை பற்றிய விபரங்கள் அடங்கிய காட்சி மாடம் ஒன்றையும் இதன் உள்ளே காணலாம். சமாதி ஸ்தல புகைப்படங்கள், சின்னங்கள் குறித்த தகவல்கள், ஓவியங்களின் புகைப்படங்கள் போன்றவை இதில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம்: ஏதுமில்லை

Abbas.hr

Read more about: thalassery travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X