Search
  • Follow NativePlanet
Share
» »சாமியே சரணம் ஐயப்பா: கோயம்பத்தூர் - சபரிமலை

சாமியே சரணம் ஐயப்பா: கோயம்பத்தூர் - சபரிமலை

'சாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் முழங்க கருப்பு அல்லது நீல ஆடை உடுத்தி முகம் நிறைய திருநீறு பூசி , அசைவம், மது, புகை உள்ளிட்டவைகளை தவிர்த்து விரதம் முடித்து நிறைந்த மனதுடன் சிவ பெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் மகனாய் அவதரித்த சுவாமி ஐயப்பனை சபரிமலைக்கு தரிசனம் செய்யச்செல்லும் கார்த்திகை மாதம் வந்துவிட்டது.

இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று 18 தங்க படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வதென்பது மனதுக்கு ஒரு நம்பிக்கையையும், அமைதியையும் தரவல்லது. சபரி மலையிலும், சபரி மலைக்கு செல்லும் வழியிலும் நாம் சென்று தரிசிக்க ஏராளமான கோயில்கள் உள்ளன. வாருங்கள் கோயம்பத்தூரில் இருந்து கிளம்பி பாலக்காடு வழியாக சபரி மலைக்கு ஆனந்தம் நல்கும் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்வோம்.

 கோயம்பத்தூர் டு சபரிமலை:

கோயம்பத்தூர் டு சபரிமலை:

கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு வழியாக சாலக்குடியை அடைந்து அங்கிருந்து எர்ணாகுளம், கோட்டயம் வழியாக பம்பை நதிக்கரையை அடையலாம். வழியில் எங்கும் நிற்காமல் சென்றால் இந்த 350கி.மீ தூர பயணத்தை முடிக்க குறைந்தது ஏழு மணி நேரமாவது ஆகும்.

நாம் இந்த வழியில் இருக்கும் கேரளாவின் புகழ்பெற்ற சில கோயில்களுக்கும் சென்றுவிட்டு செல்லலாம்.

Photo:Rsrikanth05

கோயம்பத்தூர் - குருவாயூர்:

கோயம்பத்தூர் - குருவாயூர்:

கோயம்பத்தூரில் இருந்து சபரிமலை செல்லும் அனைவரும் தவறாமல் செல்லும் கோயில் என்றால் அது குழந்தை கிருஷ்ணனின் கோயிலான குருவாயூர் தான். கோயம்பத்தூரில் இருந்து இரவு சித்தாபுதூர் கோயிலில் இருமுடி கட்டி கிளம்பினால் மூன்று மணிநேரத்தில் சரியாக அதிகாலை தரிசனத்திற்கு குருவாயூர் கோயிலை அடையலாம்.

கோயம்பத்தூரில் இருந்து கிளம்பி மதுக்கரை, வாளையார் வழியாக பாலக்காட்டை அடைந்து அங்கிருந்து வடக்கஞ்சேரி வழியாக குருவாயுரை அடையலாம்.

Photo: www.mytemplesindia.com

குருவாயூர் டு கொடுங்களூர்:

குருவாயூர் டு கொடுங்களூர்:

குருவாயூர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பினால் அடுத்ததாக நாம் செல்லகூடிய கோயில் மதுரையை எரித்த கண்ணகி மோட்சம் அடைந்ததாக சொல்லப்படும் கொடுங்களூர் அம்மன் கோயிலாகும். குருவாயூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோயிலை ஒரு மணி நேர பயணத்தில் அடையலாம்.

எட்டு கைகளுடன் பத்திரகாளியாய் உக்கிரமாக காட்சியளிக்கிறார் இந்த கொடுங்களூர் பகவதி அம்மன். அதிகாலையில் மூன்று மணியில் இருந்தே பக்த்தர்களுகாக நடை திறக்கப்படுகியது. இங்கு சபரி மலையில் இருப்பது போன்றே வெடி வழிபாடு பழக்கத்தில் உள்ளது.

Photo:Sujithvv

கொடுங்களூர் டு சோட்டானிக்கரை :

கொடுங்களூர் டு சோட்டானிக்கரை :

கேரளாவில் இருக்கும் புகழ் பெற்ற கோயில்களுள் ஒன்று எர்ணாகுளத்தில் இருக்கும் சோட்டனிக்கரை பகவதி அம்மன் கோயிலாகும். மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்தால் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

இக்கோயிலில் சோட்டனிக்கரை தேவி பகவதி அம்மன் காலையில் வெண் பட்டு உடுத்திய சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு நிற பட்டுடுத்திய லக்ஷ்மி தேவியாகவும், மாலையில் நீல நிற பட்டுடன் துர்க்கை அம்மனாகவும் காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பாகும்.

கொடுங்களூரில் இருந்து 45கி.மீ தொலைவில் இருக்கும் சோட்டனிக்கரை அம்மன் கோயிலை ஒன்றரை மணி நேர பயணத்தில் அடையலாம்.

Photo:Roney Maxwell

 வைக்கம்:

வைக்கம்:

சோட்டனிக்கரையில் இருந்து அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் கோயில் வைக்கம் மகாதேவர் கோயிலாகும். த்ரேதா யுகத்தில் இருந்து இக்கோயில் இருப்பதாக நம்பப்படுவதால் கேரளாவின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இக்கோயில் கட்டப்பட்டதில் இருந்து இன்றுவரை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக பூஜை எந்த தடையும் இல்லாமல் நடந்து வருகிறதாம். இதே கோயிலில் தான் கீழ் சாதியினர் நுழைய தடை இருந்த போது பெரியார் போராட்டம் நடத்தி கீழ்சாதி மக்களுக்கு கோயிலுக்குள் நுழையும் உரிமையை பெற்றுத்தந்ததினாலேயே அவருக்கு வைக்கம் வீரர் என்ற புனைப்பெயரும் கிடைத்துள்ளது.

Photo:Georgekutty

 எட்டமனூர்:

எட்டமனூர்:


வைக்கம் கோயிலில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கும் எட்டமனூர் மகாதேவர் கோயிலும் வைக்கம் கோயிலை போன்றே பெரும் சிறப்பு வாய்ந்தது. விஸ்வகர்மா ஸ்தபதிகளின் கட்டிடக்கலை அறிவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த்தக்கோயிலின் நுழைவு வாயிலின் சுவற்றில் வரையப்பட்டுள்ள ப்ரஷோத நிரிதம் என்னும் சிவா பெருமானின் சுவரோவியம் இந்தியாவில் உள்ள சிறந்த சுவரோவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கும் கட்டாயம் வந்து செல்லுங்கள்.

Photo:Rklystron

எருமேலியில் பேட்டை துள்ளலாம் வாருங்கள்:

எருமேலியில் பேட்டை துள்ளலாம் வாருங்கள்:

சபரிமலை யாத்திரை எருமேலியில் இருந்து துவங்குகிறது. வண்ணப்பொடிகளை தூவியபடி, மரக்கத்திகளை பிடித்து நடனமாடி பேட்டைதுள்ளி எருமேலியில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் பக்த்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பின்னர் வாவர் சுவாமி என அழைப்படும் நைனார் மசூதியில் இருக்கும் மணிகண்டனின் நண்பராக கருதப்படும் பாபரின் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பம்பையை நோக்கி பயனப்படுகின்றனர்.

Photo:Rajesh Kunnath

பாபர் கோயில்:

பாபர் கோயில்:

எருமேலியில் இருக்கும் பாபர் கோயில்.

Photo:Avsnarayan

பம்பை நதியில் நீராடல்:

பம்பை நதியில் நீராடல்:

பேட்டைதுள்ளி வழிபாடு முடித்தபிறகு கடைசி கட்டமாக பம்பையை நோக்கி பயணத்தை துவங்கலாம். எருமேலியில் இருந்து 45கி.மீ தொலைவில் பம்பை நதி இருக்கிறது. கார்த்திகை மாத காலகட்டத்தில் பம்பை நதிக்கரையில் இருந்து 15 கி.மீ முன்பே வாகனங்கள் நிறுத்தபடுகின்றன.

பம்பை நதிக்கரையை அடைந்த்தபின்பு அங்கு நீராடிவிட்டு புதுவேட்டி உடுத்தி தர்ம சாஸ்தாவை காண மலையேறலாம்.

Photo:Sailesh

ஏற்றி விடப்பா! தூக்கி விடப்பா!:

ஏற்றி விடப்பா! தூக்கி விடப்பா!:

பம்பையில் இருந்து மலையேறும் முன் அங்கிருக்கும் பம்பை கணபதி கோயிலில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு செல்வது ஐதீகம். பம்பையில் இருந்து ஐயப்பன் கோயிலை அடைய எட்டு கி.மீ மலை ஏற வேண்டும். முதல் முறை மாலை போட்டு வரும் கன்னி சாமிகள் இந்த மலையேற்றத்தின் போது தங்கள் இருமுடியை தலையில் இருந்து எடுக்ககூடாது என்பது இங்கு கடைபிடிக்கப்படும் விதி.

மலையேற்றத்தின் போது தாகமேடுத்தாலோ வயிற்றில் வாயுக்கோளாறு ஏற்பட்டாலோ அதனை சமாளிக்க எலுமிச்சை சாறு கடைகள் மலைப்பாதையில் உள்ளன.

Photo:Avsnarayan

பதினெட்டு பொற்படிகள்:

பதினெட்டு பொற்படிகள்:

பம்பையில் இருந்து சபரி மலையை அடைந்த பிறகு தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட 18 படிகளில் ஏறி ஐயப்பன் மூலஸ்தானத்தை அடைவோம். அங்கு தங்கத்தினால் வேய்யப்பட்ட ஐயப்பன் சுவாமி மூலஸ்தான கூரையை காணலாம்.

Photo:Sailesh

ஹரிஹரசுதன் ஐயப்பன்:

ஹரிஹரசுதன் ஐயப்பன்:

மூலஸ்தானத்தில் சிறிய வடிவில் ஐம்பொன்னினால் செய்யப்பட்ட ஐயப்பன் சிலை உள்ளது. முதலில் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட கல்லால் ஆன சிலை இருந்ததாகவும் ஆனால் அது வெடிப்புற்றதால் 1940ஆம் ஆண்டு வாக்கில் தற்போதிருக்கும் சிலை செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கூட்டம் நெருக்கி தள்ளும் என்பதால் குழந்தைகளை தோளில் ஏற்றிக்கொள்வது சிறந்தது.

Photo:fgdfhdhgfj

தரிசனம் முடித்த பிறகு:

தரிசனம் முடித்த பிறகு:

தரிசனம் முடிந்த பிறகு சபரியில் அறை எடுத்து இரவு தங்கிவிட்டு அதிகாலை இருமுடி தேங்காயில் இருக்கும் நெய்யை கொடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து பெறலாம்.

பின்னர் ஐயப்பன் கோயிலுக்கு அருகில் இருக்கும் மஞ்சள் மாதா கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு சபரி மலையில் இருந்து கீழ் இறங்கலாம்.

வரும் போது அரவனைப்பிரசாதம் வாங்கி வர மறந்து விடாதீர்கள்.

Photo:Anoop Narayanan

தங்க கூரை:

தங்க கூரை:

தங்க கூரை

Photo:Sailesh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X