Search
  • Follow NativePlanet
Share
» »சச்சினுக்கு மிகவும் விருப்பமான இந்திய சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

சச்சினுக்கு மிகவும் விருப்பமான இந்திய சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

சச்சின் டெண்டுல்கர், நூறு கோடி மக்களின் கனவுகளை தன் நெஞ்சில் சுமந்த வெற்றி நாயகன். இவர் அடிக்கும் ரன்கள் தான் இரண்டு தலைமுறை இந்தியர்களின் சந்தோசத்தை தீர்மானித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் இவர் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஆகச்சிறந்த வீரராக சொல்லப்படும் சச்சின் ஒரு கணவனாகவும், தந்தையாகவும் கூட பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

தன் சுயசரிதையிலும், எண்ணற்ற பேட்டிகளிகளிலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு சாதனைகளை செய்திருக்க முடியாது என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகரமானவராக திகழும் சச்சின் அடிக்கடி தன் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

லோனாவ்லா :

லோனாவ்லா :

சச்சினுக்கு மிகவும் விருப்பமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருப்பது சச்சினின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இருக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமான லோனாவ்லா என்ற இடம் தான். சர்வதேச கிரிக்கெட் வீரராக பரபரப்பாக இருந்த போது தனக்கு கிடைக்கும் சில நாட்கள் இடைவெளியில் குடும்பத்துடன் அடிக்கடி இங்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

லோனாவ்லா :

லோனாவ்லா :

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரில் இருந்து 96 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் பசுமையான சூழலில் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த புத்துணர்ச்சியளிக்கும்.

Photo:GeniusDevil

லோனாவ்லா :

லோனாவ்லா :

மும்பை - புனே விரைவு சாலை மற்றும் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு மிக முக்கியமான சாலைகள் லோனவ்ளாவின் ஊடாக செல்கின்றன. இதனால் மும்பை மற்றும் சென்னை நகரங்களில் இருந்து எளிதாக சாலை மார்கமாக இந்த இடத்தை சென்றடையலாம்.

Photo:Nagesh Kamath

லோனாவ்லா :

லோனாவ்லா :

ஷயாத்ரி மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த லோனவ்லாவிற்கு வர பருவமழை காலமே சிறந்த நேரமாகும். இங்கு நிலவும் மிதமான மழைப் பொழிவினால் மற்ற காலங்களில் இருப்பதை விடவும் பசுமை அதிகமாக இருக்கும்.

Photo: Flickr

லோனாவ்லா :

லோனாவ்லா :

பசுமையான காணிடங்களை தாண்டி செழுமையான வரலாற்று பின்னணியுடைய, மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கே ஆர்வலர்களை ஈர்க்கின்றன. நாம் நிச்சயம் காணவேண்டிய வரலாற்று புதையல்களான இங்கிருக்கும் குகைகளை பற்றி அறிந்து கொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo:Amitmahadik100

பஜா குகைகள் :

பஜா குகைகள் :

லோனவ்ளாவில் இருக்கும் 'பஜா' என்ற கிராமத்தில் இருக்கும் 22 பழங்கால குகைகளே பஜா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த குகைகளினுள்ளே கி.மு 2ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதனுள்ளே இருக்கும் சிற்பங்கள் மற்றும் ஸ்துபாக்கள் நமக்குள் இருக்கும் வரலாற்று ஆய்வாளரை நிச்சயம் வெளிக்கொண்டுவரும்.

Photo: amitmahadik100

கர்லா குகைகள் :

கர்லா குகைகள் :

கி.மு 2ஆம் நூற்றாண்டு - கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புத்த துறவிகள் வாழ்ந்த குகைகளே லோனவ்லாவிற்கு பக்கத்தில் இருக்கும் கர்லா குகைகள் ஆகும். மேலும் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை இணைக்கும் முக்கியமான வணிக பாதையாகவும் அக்காலத்தில் இந்த கர்லா குகைகள் இருந்திருக்கின்றன.

Photo:Sowpar

இதர இடங்கள் :

இதர இடங்கள் :

லோனவ்ளாவின் இயற்கை பேரழகை கண்குளிர காண விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ராஜமாச்சி பாயிண்ட், டியுக்'ஸ் நோஸ், லோனாவ்லா ஏரி, புஷி அணை மற்றும் லண்டனில் இருப்பது போன்றே இந்தியாவிலும் இருக்கும் ஒரே ஒரு மெழுகு அருங்காட்சியம் போன்ற இடங்களுக்கும் சென்று வாருங்கள்.

லோனவ்ளாவில் இருக்கும் புகழ் பெற்ற டைகர் அருவி.

Photo: Flickr

இதர இடங்கள் :

இதர இடங்கள் :

பசுமை ததும்பும் ராஜமாச்சி பாயிண்ட்.

Photo:Ravinder Singh Gill

இதர இடங்கள் :

இதர இடங்கள் :

லோனவ்ளாவில் இருக்கும் ட்ரெக்கிங் பாதை.

Photo:ptwo

இதர இடங்கள் :

இதர இடங்கள் :

லோனவ்ளாவில் இருக்கும் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ள சதாம் உசேனின் சிலை.

Photo:ddasedEn

இதர இடங்கள் :

இதர இடங்கள் :

லோனவ்லாவில் தயாரிக்கப்படும் 'சிக்கி' எனப்படும் கடலை மிட்டாய்கள் உலகப்பிரபலம். இங்கு விளையும் பிரத்யேகமான கடலையில் சிக்கிகள் தயாரிக்கப்படுவதால் அவை தனித்துவமான சுவை உடையவை. அவை தயாரிக்கப்படும் இடங்களில் இருந்தே வாங்கி சுவைத்து மகிழ தவறி விடாதீர்கள்.

Photo:MalayalaM

லோனவ்லா

லோனவ்லா

லோனவ்லாவை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

மசூரி :

மசூரி :

சச்சின் தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய சுற்றுலாத்தலமாக குறிப்பிடும் ஓரிடம் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் மசூரி ஆகும். உத்தரகண்டின் தலைநகரான டேஹராதூனுக்கு அருகில் இருக்கும் இந்த இடத்திற்கு சுற்றுலா வருவது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட இந்த இடத்தை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

மசூரி :

மசூரி :

இமய மலைத்தொடர்களில் ஒன்றான கர்வால் மலைத்தொடரில் இந்த மசூரி நகரம் அமைந்துள்ளது. இதன் தன்னிகரற்ற அழகின் காரணமாக 'மலைகளின் அரசி' என்று இது அழைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து 6,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் காதல் கதைகளில் வரும் கனவுலகம் போல இருக்கிறது.

Photo:RajatVash

மசூரி சுற்றுலாத்தலங்கள் :

மசூரி சுற்றுலாத்தலங்கள் :

முன்னரே சொன்னது போல கனவா நிஜமா என நம்மை பிரமிக்க வைக்கும் இடங்கள் இங்கே நிறைய உண்டு. அவற்றில் முக்கியமானது கெம்ப்டி அருவியாகும். மசூரியில் இருந்து 13 கி.மீ அமைந்திருக்கும் இந்த அருவில் இருந்து விழுகும் நீர் ஒருவிதமான வேறெங்கும் நாம் பார்க்க முடியாத நீல நிறத்தில் இருக்கிறது.

Photo: Wikipedia

மசூரி சுற்றுலாத்தலங்கள் :

மசூரி சுற்றுலாத்தலங்கள் :

மேலும் டிரெக்கிங் போக நல்லதொரு இடமான நஹதா எஸ்டேட், மிஸ்ட் ஏரி, மசூரி ஏரி, நாக தேவதை கோயில் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

மசூரியை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Paul Hamilton

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X