Search
  • Follow NativePlanet
Share
» »மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மாணவர்களுக்காக 6000 அடி உயரத்திற்கு சென்ற கலாம் !!

மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மாணவர்களுக்காக 6000 அடி உயரத்திற்கு சென்ற கலாம் !!

By Super Admin

இந்தியாவில் இருக்கும் மிகவும் சுத்தமான சுற்றுலாத்தலங்கள்இந்தியாவில் இருக்கும் மிகவும் சுத்தமான சுற்றுலாத்தலங்கள்

எந்த செயலை தன் வாழ்நாள் கடமையாக கொண்டு ஒருவர் செய்துவந்தாரோ அதை செய்யும் போதே உயிர் பிரிவது தன் நாட்டை காக்க வீரத்துடன் போர் புரிந்து போர்க்களத்தில் இறப்பதற்கு சமமானது. அப்படி தன் வாழ்நாள் முழுவதும் முதுமையையும் பொருட்படுத்தாமல் கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி கனவுகளை விதைத்தவரான இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான திரு. அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய 84 வயதில் ஷில்லாங் என்ற இடத்தில் இந்திய மேலாண்மையியல் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாற்றும் போது காலமானார்.

மகாத்மா காந்திக்கு பிறகு இந்திய தேசமே ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவது மக்களின் தலைவராக திகழ்ந்த திரு.அப்துல் கலாம் அவர்களுக்குத்தான். வாருங்கள் அவர் கடைசியாக மாணவர்களுடன் உரையாற்றிய ஷில்லாங் என்ற இடத்தை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

 கலாமின் கடைசி உரை :

கலாமின் கடைசி உரை :

திரு. கலாம் அவர்கள் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் ஆகும்.

மலை பிரதேசமான இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து 6,449 உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள இந்திய மேலாண்மையியல் கல்லூரியான ஐ.ஐ.எம்மில் உரையாற்றும் போது தான் மாரடைப்பினால் கலாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார்.

 கலாமின் கடைசி உரை :

கலாமின் கடைசி உரை :

கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் இதனால் சுவாச பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அப்துல் கலாமை எச்சரித்துள்ளனர்.

இருந்தும் மாணவர்கள் தன்னுடைய வருகையை எதிர்பார்த்திருப்பார்கள், அவர்களை தான் ஏமாற்ற விரும்பவில்லை என கூறி மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி இந்த விழாவில் கலாம் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

கலாமின் கடைசி உரை :

கலாமின் கடைசி உரை :

இப்படி தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மாணவர்களுடன் உரையாற்றுவதை, அவர்களை ஊக்கப்படுத்துவதை தன் வாழ்நாள் கடமையாக கொண்டு செயல்பட்ட திரு கலாம் அவர்களின் உயிர் பிரிந்த ஷில்லாங் என்ற இடத்தை பற்றிய சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஷில்லாங் :

ஷில்லாங் :

இந்தியாவில் காலனி ஆட்சி காலத்தில் கோடை கால உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க ஷில்லாங் நகருக்கு வந்து குடியேறியுள்ளனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். அவர்களுக்கு சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நகரம் ஸ்காட்லாந்தை நினைவுபடுத்தவே 'கிழக்கின் ஸ்காட்லாந்து' என்ற புனைப்பெயர் கொண்டு அழைத்து வந்துள்ளனர்.

ஷில்லாங் :

ஷில்லாங் :

இந்தியாவில் இருக்கும் சிறிய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகராக இருக்கும் செயல்படும் இந்த ஷில்லாங் நகரமானது , ஷில்லாங் பள்ளத்தாக்கின் நடுவே லும் சொபெட்ப்நெங், லும் டீங்கிஜி, லும் ஷில்லாங் என்ற மூன்று மலைகள் சூழ அமைந்திருக்கிறது.

போட்டோ:Soubhagya S Behera

ஷில்லாங் :

ஷில்லாங் :

மலைகள் சூழ குளுகுளு சீதோஷன நிலை இங்கே நிலவுவதால் அருமையான சுற்றுலாத்தலமாகவும் ஷில்லாங் திகழ்கிறது. இந்த நகரில் இருந்து 34 கி.மீ தொலைவில் தான் உலகின் அதிக மழைப்பொழிவு நிலவும் இடமான 'மவ்சய்ந்ராம்' அமைந்திருக்கிறது.

Photo:Vanlal Tochhawng

ஷில்லாங் :

ஷில்லாங் :

கடுமையான குளிர் மற்றும் அதிக மழைப்பொழிவு இருப்பதால் அக்டோபர் - நவம்பர் மற்றும் மார்ச் - ஏப்ரல் ஆகிய மாதங்கள் இந்த ஷில்லாங் வர ஏற்ற மாதங்களாகும்.

Photo:Rahul Ganguly

ஷில்லாங் - எப்படி அடைவது ? :

ஷில்லாங் - எப்படி அடைவது ? :

மலைப்பிரதேசமாக இருப்பதால் ஷில்லாங்கிற்கு வர ரயில் மற்றும் விமான சேவைகள் இல்லை. ஆனால் சாலை மார்க்கமாக எளிதாக அடையலாம். இந்த ஷில்லாங் நாகரம் தேசிய நெடுஞ்சாலை 40 வழியாக அஸ்ஸாம் தலைநகர் கௌஹாத்தியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஷில்லாங் புறவழி சாலை மூலமாக மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஷில்லாங் சுற்றுலாத்தலங்கள் :

ஷில்லாங் சுற்றுலாத்தலங்கள் :

எலிபென்ட் அருவி :

ஷில்லாங்கில் இருந்து பன்னிரண்டு கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த எலிபென்ட் அருவி. இது மூன்று தனித்தனி பகுதிகளாக அமைந்திருக்கிறது. பசுமையான சூழலில் அமைந்திருக்கும் இந்த அருவியில் வருடம் முழுக்கவும் நீர் வரத்து இருக்கிறது. இந்த அருவியின் அருகே யானை வடிவில் ஒரு பாறை இருந்ததாகவும் அதனாலேயே 'எலிபென்ட் அருவி' என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சென்று குளித்து விளையாட அருமையான இடமாகும் இது.

Photo:ASIM CHAUDHURI

ஷில்லாங் சுற்றுலாத்தலங்கள் :

ஷில்லாங் சுற்றுலாத்தலங்கள் :

வார்ட்'ஸ் ஏரி :

ஷில்லாங்கில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த வார்ட்'ஸ் ஏரி சொல்லப்படுகிறது. 'நோன் போலாக்' என்ற பெயரிலும் விளிக்கப்படும் இந்த இடமானது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியாகும். இந்த ஏரியில் படகு சவாரி செய்யும் வசதியும், இதனை சுற்றி அருமையான தோட்டமும் இருக்கிறது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட அற்புதமான இடமாகும் இது.

Photo:Vanlal Tochhawng

கல்வி தலைநகரம் :

கல்வி தலைநகரம் :

சுற்றுலாத்தளங்களை தாண்டி ஷில்லாங் நகரமானது வட கிழக்கு மாநிலங்களின் கல்வி தலைநகராகவும் பார்க்கப்படுகிறது. இங்கே இந்திய மேலாண்மையியல் கல்லூரி (ஐ.ஐ.எம்), தேசிய தொழிநுட்ப கல்லூரி (என்.ஐ.டி) தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி, மார்டின் லூதர் கிங் கிறிஸ்டியன் பல்கலைக்கழகம் என பல துறைகளை சார்ந்த ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

ஷில்லாங் சுற்றுலா :

ஷில்லாங் சுற்றுலா :

அதி அற்புதமான இயற்கை அழகு நிரம்பிய இந்த ஷில்லாங் நகரை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஷில்லாங்கில்உங்கள் பணத்தை செமித்திட உதவிடும் ஹோட்டல் டீல்கள்

கடைசி உரை :

கடைசி உரை :

திரு.கலாம் அவர்கள் கடைசியாக உரையாற்றிய கல்லூரி இது தான்.

கடைசி மூச்சு :

கடைசி மூச்சு :

எப்போதாவது மேகாலயா செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததால் நிச்சயம் ஷில்லாங் சென்று வாருங்கள். சுற்றுலாத்தலம் என்பதை தாண்டி திரு.அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய கடைசி மூச்சை சுவாசித்த இடமாக இது என்றென்றைக்கும் நினைவு கொள்ளப்படும்.

Read more about: shillong north east megalaya
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X