Search
  • Follow NativePlanet
Share
» »சிவகாசி ஒன்னும் குறஞ்சது இல்ல... இங்கயும் நிறைய சுற்றுலாத்தலங்கள் இருக்கு தெரியுமா?

சிவகாசி ஒன்னும் குறஞ்சது இல்ல... இங்கயும் நிறைய சுற்றுலாத்தலங்கள் இருக்கு தெரியுமா?

சிவகாசி ஒன்னும் குறஞ்சது இல்ல... இங்கயும் நிறைய சுற்றுலாத்தலங்கள் இருக்கு தெரியுமா?

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிவகாசி நகரம் ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் இங்கு ஏராளமான ஆலயங்களும் அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய இடங்களும் முக்கிய சுற்றுலாத் தளங்களாக உள்ளன. வாருங்கள் சிவகாசிக்கு பயணிக்கலாம்.

பத்ரகாளியம்மன் ஆலயம்

பத்ரகாளியம்மன் ஆலயம்


சிவகாசியில் அமைந்திருக்கும் பத்ரகாளியம்மன் ஆலயம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய காளி ஆலயம் ஆகும். பத்ரகாளியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட காளியம்மன் பரவசமாக காட்சி அளிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் ஒரு பெரிய கோபுரமும் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன், சிவகாசியை காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் ராஜகோபுரம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காளியம்மன் கோயில்களில் இருக்கும் மற்ற கோபுரங்களைவிட இந்த கோபுரம் மிக உயரமாக உள்ளது.

Ssriram mt

தங்கல்

தங்கல்

விருதுநகர் மற்றும் சிவகாசி சாலையில் திருத்தங்கல் என்ற ஒரு சிறிய நகரம் அமைந்திருக்கிறது. இந்த திருத்தங்கல், இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் 108 புனிதத் தலங்களில் ஒரு முக்கியத் தலமாக விளங்குகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த திருத்தங்கல் ஒரு நெடுங்கால வரலாற்றை கொண்டிருக்கிறது. சங்க கால புலவர்களான முதகொரனர், பொற்கொல்லன் வென்னனார், மற்றும் ஆதிரேயன் சென்கனார் போன்றோர் திருத்தங்கலில் வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு. திருத்தங்கலின் பழைய பெயர் தங்கல் ஆகும்.

Srithern

காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை வாங்கி வந்து அந்த லிங்கத்தை சிவகாசியில் நிறுவினார். பின் 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிற்கால பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயர்கர் போன்றோர் இதை ஒரு மிகப் பெரிய ஆலயமாகக் கட்டி அதற்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்ற பெயரையும் சூட்டினர்.

Ssriram mt

அய்யனார் நீழ்வீழ்ச்சி

அய்யனார் நீழ்வீழ்ச்சி

அய்யனார் நீழ்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து விழுகிறது. சிவகாசிக்கு அருகில் இருக்கும் இராஜபாளையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது. இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். மலையிலிருக்கும் காடுகள் வழியாக வந்து 15 அடி உயரத்திலிருந்து இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி விழுகிறது. அதுபோல் இங்கிருக்கும் காடுகளின் இயற்கை காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

Ramesh39ch

 நென்மேனி கிராமம்

நென்மேனி கிராமம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு 9 கிமீ தொலைவில் நென்மேனி கிராமம் அமைந்துள்ளது. வைப்பாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்திருப்பது இந்த நென்மேனி கிராமத்தின் சிறப்பாகும். ஒரு காலத்தில் இந்த பகுதியில் நெல் அமோகமாக விளைந்ததால் இந்த பகுதி முதலில் நெல்மணி என்று அழைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் மருவி இப்போது நென்மேனி என்று அழைக்கப்படுகிறது.

Jaseem Hamza

    Read more about: sivakasi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X