Search
  • Follow NativePlanet
Share
» »சூரஜ் வாட்டர் பார்க்கில் சூப்பரான சுற்றுலா போலாமா?

சூரஜ் வாட்டர் பார்க்கில் சூப்பரான சுற்றுலா போலாமா?

சூரஜ் வாட்டர் பார்க்கில் சூப்பரான சுற்றுலா போலாமா?

தானேயில் சூரஜ் வாட்டர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக சூரஜ் நோக்கி செல்லலாம். பிரமாண்டமாக 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீம் பார்க் தானேயிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு நீர் விளையாட்டு ஸ்தலமாகும்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான பல்விதமான சாகச நீர் விளையாட்டு அமைப்புகள் இங்கு உள்ளன. லபக்-ஸபக்-மடக், சிங்-எ-சாங், ரெயின்போ டவர், டிங்-டாங் ஸ்லைட்'ஸ் மற்றும் தட்கன் போன்ற சுவாரசியமான நீர்ச்சறுக்கு விளையாட்டு அமைப்புகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

சூரஜ் வாட்டர் பார்க்கில் சூப்பரான சுற்றுலா போலாமா?

Official insta page

கட்டணம்

பெரியவர்களுக்கு 800 ரூபாய்
குழந்தைகளுக்கு ரூ 650
3 அடி 5 அங்குலத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு இலவசம்

நீர் நடனத்துக்காக ரிம்-ஜிம் ஹால் எனப்படும் இடமும் உள்ளது. வேவ்-பூல், தி லேஸி' ரிவர் போன்ற புதுமை அம்சங்களுடன் 30 வகையான நீரூற்றுகளைக்கொண்ட நீரூற்றுப்புங்கா ஒன்றும் காணப்படுகிறது.

இங்குள்ள முக்கியமான சிறப்பம்சம் ஃபைபர்'மூலம் அமைக்கப்பட்ட ஒரு சிவன் குகையும் ஹர்-ஹர்-கங்கே நீர்வீழ்ச்சியும் ஆகும். இதற்காக சூரஜ் வாட்டர் பார்க் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' இல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அருகிலேயே ஒரு புராதன மியூசியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சூரஜ் வாட்டர் பார்க்கில் சூப்பரான சுற்றுலா போலாமா?

Official FB page

இதில் பலவகையான பூட்டு சாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பார்க் எல்லா நாட்களிலும் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்துள்ளது. சாதாரண கட்டணமாக 4 அடி உயரத்துக்கு குறைவான குழந்தைகளுக்கு 250 ரூபாயும் பெரியவர்களுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் முழுக்க கிடைக்கும் உல்லாச பொழுதுபோக்கிற்கு இந்த கட்டணம் மிகக்குறைவே.

தானே பகுதியில் உள்ள 23 ஏரிகளில் இந்த உப்வண் ஏரி இயற்கை ரசிகர்கள் மற்றும் தனிமையில் பொழுது போக்க விரும்பும் காதலர்கள் விரும்பும் இடமாக உள்ளது. இளைஞர்கள் தம் நண்பர்களுடன் பொழுது போக்குவதையும் இங்கு அதிகமாக காணலாம். சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை வசதியாக அமர்ந்து ரசிப்பதற்கேற்ற இருக்கைகள் இங்கு அதிக அளவில் உள்ளன. தானே மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிதாக இந்த உப்வண் ஏரி கருதப்படுகிறது.

Read more about: travel thane
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X