Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றிலும் நீரால் சூழ பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சை மாளிகை இப்போது எப்படி இருக்கு? #NPH 11

சுற்றிலும் நீரால் சூழ பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சை மாளிகை இப்போது எப்படி இருக்கு? #NPH 11

சுற்றிலும் நீரால் சூழப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சை மாளிகை இப்போது எப்படி இருக்கு தெரியுமா?

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தஞ்சை மாநகரம் 36 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இங்கு வரலாற்று மற்றும் சுற்றுலாத் தளங்கள் எண்ணிலடங்காதவை. ஒரு நாளில் முழுவதுமாக சுற்றிப் பார்க்க இயலாது என்பது இதன் பெருமைகளில் ஒன்றாகும். இன்று நாம் தஞ்சாவூரின் மராத்தா மஹால் பற்றி பார்க்கலாம். இதன் வரலாறு, எப்போது, எப்படி செல்வது உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இதே கட்டுரையில் காண்போம்.

நுழைவுக் கட்டணம் - 100 ரூபாய்
புகைப்பட கருவி - கூடுதல் 50 ரூபாய்
செல்லும் நேரம் - காலை 9 முதல் மாலை 6 வரை

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது


தஞ்சாவூர் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது இந்த தஞ்சை மாளிகை. இது தஞ்சை மராத்தா மாளிகை என்றும், தஞ்சாவூர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

சோழர்கள் தஞ்சை மாநகரத்தில் இன்னும் பல அரண்மனைகள் கட்டியிருந்தாலும், இதுவே சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

கட்டியது யார்

கட்டியது யார்

தஞ்சாவூர் என்றவுடன் நமக்கு சோழர்களைத் தான் நினைவுக்கு வரும். அப்படியானால் இது சோழர் குல மன்னர்கள் யாரும் கட்டியிருப்பார்களோ என தோன்ற வாய்ப்பிருக்கிறது எனினும் இதைக் கட்டியவர்கள் சோழர்கள் இல்லை. அப்போது யார்?

தஞ்சாவூர் மாளிகை முதலில் தஞ்சை நாயக்கர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இடையில் ஒரு 200 வருடங்கள் மராத்திய அரசின் கீழ் இருந்தது.

Melanie M

 அரண்மனை வளாகம்

அரண்மனை வளாகம்

இந்த அரண்மனை வளாகம் மிகப் பெரியது. 110 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்தது. இந்த வளாகத்தினுள் பல அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இங்குதான் சரஸ்வதி மஹால் நூலகமும், தஞ்சைக் கலைக் கூடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் மிக மிக பழமையானவை.

அதிலும் தஞ்சை நூலகம்தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது. அதுமட்மில்லாமல், உலகில் இரண்டாவது பழமையானது. மேலும் இங்கு தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்ற இடங்களும் இருக்கின்றன.

Drkris21

 தஞ்சாவூர் மராத்தா மாளிகையின் வரலாறு

தஞ்சாவூர் மராத்தா மாளிகையின் வரலாறு

இந்த அரண்மனையை கட்டியவர்கள் புணரமைத்தவர்கள் ஓரிருவர் அல்லர். ஆரம்பத்தில் செவ்வப்ப நாயக்கர் எனும் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அரண்மனையின் கட்டுமானம், பின் விஜயராக நாயக்கரால் முடிக்கப்பட்டது. பின் மராட்டிய மன்னர்களின் காலத்தில் இந்த அரண்மனை மாற்றம் கண்டது. அதில் மராத்திய கட்டிடக் கலைப் புகுத்தப்பட்டு மிகவும் அழகிய வண்ணக் கட்டிடமாக ஜொலித்தது என வரலாறு தெரிவிக்கிறது.

Jacintha

 ஆங்கிலேயர் ஆட்சியில்

ஆங்கிலேயர் ஆட்சியில்

சொல்லப்போனால் அப்போது வரை இந்த அரண்மனைக்கு உலகப் புகழ் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பிறகுதான் இதுபோன்ற ஒரு அரண்மனையின் பெருமை உலகுக்கு உணர்த்தப்பட்டது. பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டிடக் கலைகளின் தொழில் நுட்பங்களை இணைத்து மிகவும் அருமையான வடிவத்தில் இந்த அரண்மனை மாற்றப்பட்டது.

Nittavinoda

 மணி மண்டபம்

மணி மண்டபம்

தலைவர்களின் நினைவாக மணிமண்டபம் கட்டுவது மன்னர்கள் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பழக்கமாகும். அப்போது மன்னர்களின் முன்னோர்களுக்காக மணிமண்டபம் கட்டிக் கொண்டனர். அந்த வகையில் இவர்கள் இந்த வளாகத்துக்குள் கட்டிய மணி மண்டபம் 11 மாடிகள் கொண்டதாக இருந்துள்ளது. இப்போது 8 மாடிகள் மட்டும் இருக்கின்றன.

இது கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது அனுமானம். மேலும் இதை மக்கள் தொள்ளகாது மண்டபம் என்றும் அழைக்கின்றனர்.

Kalanidhi

 தர்பார் மண்டபம்

தர்பார் மண்டபம்

நமக்கு எப்படி சட்டமன்றம் இருக்கிறதோ அதுபோல் அன்றைய அமைச்சர்கள், மன்னர்கள், மக்களுக்கான நலன்களை விவாதிக்கும், நாட்டை ஆட்சி செய்யும் மன்றமாக இந்த தர்பார் இருந்துள்ளது. இங்குள்ள ஓவியங்கள் காண்போர் கண்களை வியக்கச்செய்யும். இமைகளை மூடவிடாமல் அழகில் ஆழ்த்தும் அற்புத படைப்புகள் இவை.

Srithern

 ஆயுத கிடங்கும் நீதி மன்றமும்

ஆயுத கிடங்கும் நீதி மன்றமும்

அடுத்த இரு கட்டிடங்கள் இவைதான். ஒன்று ஆயுத கிடங்கு. இங்கு அவ்வளவு எளிதில் சென்றுவிடமுடியாது. மிகவும் சிக்கலான படிக் கட்டுகளைக் கொண்டவை இவை.

ஜார்ஜவா மாளிகை எனும் 7 மாடிகள் கொண்ட கட்டிடமும் அருகில் இருந்தது. தற்போது அது 5 மாடிகளில் மட்டுமே இருக்கிறது.

Nittavinoda

Read more about: travel thanjavur history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X