Search
  • Follow NativePlanet
Share
» »இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..!

இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..!

கர்நாடகா வரும் பயணிகள் தவறாமல் சென்றுவர வேண்டிய அந்த பத்து தலங்கள் எதுவெல்லாம் என தெரிந்துகொள்வோம். இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்டாகிவிடும்.

கர்நாடகா என்றாலே அதன் தலைநகரம் பெங்களூருதான் பெஸ்ட். வருடந்தோறும் இப்பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. தொழில் ரீதியாக, கல்வி, ஐடி நிறுவனம் என பண்ணாட்டுத் தரத்தில் உயர்ந்து நிற்கும் இங்கே நம்மில் பலர் ஆண்டுக் கணக்கில் தங்கி இருப்பதும் உண்டு. சுற்றுலாவிற்காகவும் உள்நாடு, வெளிநாடு என பல்லாயிரக் கணக்கானோர் ஆண்டுதோறும் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் உள்ள இதர பகுதிகளுக்கு பயணம் செய்கிறார்கள். அப்படி கர்நாடகா வரும் பயணிகள் தவறாமல் சென்றுவர வேண்டிய அந்த பத்து தலங்கள் எதுவெல்லாம் என தெரிந்துகொள்வோம். இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்டாகிவிடும். சரி வாங்க, அந்த பகுதிகளை நோக்கி பயணிப்போம்.

கூர்க்

கூர்க்

கூர்க் ஒரு புராதனமான அழகை இங்குள்ள ஆரவாரமில்லாத அமைதியான நகரங்களில் பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எந்த விதமான சந்தடியுமற்ற மிதமான வேகத்தில் நகரும் ஒரு வாழ்க்கை சூழலை மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளின் இயற்கை காட்சிகளுடன் ரசித்து அனுபவிக்கலாம். இப்பகுதியில் பலவிதமான வரலாற்று சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், நீர்வீழ்ச்சிகளும் என எண்ணற்ற எழில் வாய்ந்த சுற்றுலாப் பகுதிகள் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பயணிகளால் விரும்பி பயணம் செய்யப்படுகிறது.

The MH15

ஹம்பி

ஹம்பி


ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது. ஹம்பியில் 500-க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும். விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Ms Sarah Welch

கபினி

கபினி


கபிலா என்ற பெயராலும் அறியப்படும் இந்த கபினி ஆறு 55 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியின் சூழலியல் சமநிலைக்கு உதவியாக உள்ளது. கபினி வனப்பகுதிக்குள் காணப்படும் பலவகையான காட்டுயிர்களை நேரில் பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஜங்கிள் சபாரி எனப்படும் காட்டுப்பயணத்தை மேற்கொள்ளலாம்.

Skpandroid

மங்களூர்

மங்களூர்


மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ அம்சங்களை தந்திருக்கிறது. நேத்ராவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது. அரபிக் கடலின் மாசற்ற பொன் நிற கடற்கரைகள் காற்றில் அசையும் பனை மரங்களோடு இங்கு காட்சியளிக்கிறது. அவற்றுக்கு பின்னே பசுமையான் மலைகளும் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட பாரம்பரிய வீடுகளும் அழகுற காட்சியளிக்கின்றன.

Nithin Bolar k

கோகர்னா

கோகர்னா

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடல்களின் அரசன் சுற்றுலாப் பயணிகளை கண்ணை மூடிக்கொண்டு தன்னை முதல் ஆளாக தேர்வு செய்யும் வளங்களை உள்ளடக்கியுள்ளது. கோகர்னா கடற்கரை இதுவரை பார்க்கவில்லை என்றால் இந்த விடுமுறைக்கு செல்ல திட்டமிடுங்கள். இங்கே பாரடைஸ், குட்லே மற்றும் ஹஃப் மூன் உள்ளிட்ட சுற்றியுள்ள இடங்களில் நேரத்தை கழிக்கலாம்.

Happyshopper

சிக்மகளூர்

சிக்மகளூர்


சிக்மகளூர் மிக பழமையான அழகுடன் விளங்கி இங்கு வருகை தரும் பயணிகளை சாந்தப்படுத்தும் இயல்புடன் விளங்கினாலும், அதைச்சூழ்ந்துள்ள பிரதேசம் பலதரப்பட்ட அம்சங்களுடன் கலந்து காணப்படுகிறது. சமவெளிப்பகுதி மற்றும் மலைகள் நிறைந்த மலநாட் பகுதி இவற்றுடன் எண்ணற்ற காபி தோட்டங்களும் நிறைந்துள்ளதால் இது கர்நாடகாவின் காபி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. சிக்மகளூர் நகரத்தில் முக்கிய சுற்றுலா அம்சமாக மஹாத்மா காந்தி பூங்காஅமைந்துள்ளது. பொதுவாக சுற்றுலா பயணிகள் தசரா திருவிழா மற்றும் அதையொட்டி வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் போது சிக்மகளூருக்கு வருகை தர விரும்புகின்றனர்.

Mallikarjuna Sarvala

பேலூர்

பேலூர்


கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்து 220 கிலோமீட்டர் பயண தூரத்திலேயே உள்ளது. அதிகமான கோவில்களைக் கொண்டுள்ளதால் இது தென்னிந்தியாவின் பெனாரஸ் அல்லது தக்ஷிண காசி என்று அறியப்படுகிறது.

PP Yoonus

ஷிமோகா

ஷிமோகா

கர்நாடகாவின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கிடையே அமைந்திருப்பதால் ஷிமோகா நகரத்தை கேந்திரமாக கொண்டு சுற்றுலாப்பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதிகள், புரண்டோடும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக்கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவற்றை இந்த காட்சித்தளத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

Nikhilb239

பந்திபூர்

பந்திபூர்


பந்திப்பூர் அமைந்துள்ள இந்த பந்திபூர் தேசிய வனவிலங்கு பூங்கா சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற தலமாகும். 800 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பந்திபூர் வனப்பகுதி செழிப்பான, அடர்த்தியான, நீண்ட காடுகளைக்கொண்டுள்ளது. நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உட்சென்று பார்த்து ரசிக்கலாம்.

Yathin S Krishnappa

மரவந்தே

மரவந்தே

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.

Bharath Badakere

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X