Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா?

திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத்

By Udhaya

திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. குமரி மாவட்டத்தில் ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும், திருவட்டாறு ஏன் அவ்ளோ சிறப்பு என்பதை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன. இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. ‘திரு' என்றால் புனிதம், ‘வட்டம்' என்றால் சுற்றியிருப்பது, ‘ஆறு' என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள்.

Thirumurugan

சுற்றுலா

சுற்றுலா

புனிதமான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும். மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும்.

Abdulhaimba

செல்லும் வழிகள்

செல்லும் வழிகள்

இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.

Shankaran Murugan

 எப்படி செல்வது

எப்படி செல்வது

குளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.

rajaraman sundaram

 மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம்

கண்ணோட்டம் படங்கள் ஈர்க்கும் இடங்கள் மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள். திருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு.

Infocaster

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்

திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.

கோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.

Infocaster

திற்பரப்பு

திற்பரப்பு

திற்பரப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு இருக்கும் நீர்வீழ்ச்சி புகழ்வாய்ந்தது. திருவட்டாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சி, சுற்றுப்புறத்தை கண்கொள்ளா காட்சியாக மாற்றியமைக்கின்றது.

கோதை ஆற்றில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி உருவாகின்றது. 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, இசையருவியாக 300 அடி நீளத்திற்கு செல்கின்றது. வருடத்தில் நான்கு மாதங்கள் தவிற பிற மாதங்களில் இந்த அருவி வழிந்து ஓடுகின்றது.
en.wikipedia.org

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X