Search
  • Follow NativePlanet
Share
» »கோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ?

கோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ?

மூணார் எப்போதும் கூடுதலான உச்சாகத்தை அளிக்கக்கூடியது. இப்பகுதிக்கு கோயம்புத்தூரில் இருந்து பயணித்தோம் என்றால் எந்தெந்த வழிகள் சிறப்பானதாக இருக்கும் என தெரியுமா ?

மேற்கு மலை தொடர்ச்சியின் சிதறிய ஒட்டுமொத்த அழகையும் சேர்த்து வைத்தாற் போல் காட்சியளிக்கும் ஓர் சொர்க்கம் மூணார் மலைப் பிரதேசம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிரம்மாண்ட இயற்கை அழகுடன் பசுமையான சுற்றுலா அம்சமாகும். மாறுபட்ட புவியியல் அமைப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும பசுமைக் காடுகளும், தேயிலைத் தோட்டங்களும் என எத்தனை முறை பயணித்தாலும், ஒவ்வொரு முறையும் மாறுபட்ட அனுபவத்தை தரக்கூடிய சிறப்புடையது இப்பகுதி. குறிப்பாக, தமிழகத்தில் பிரசிதிபெற்ற ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த சுற்றுலாத் தலங்களைக் காட்டிலும் இப்பகுதி கூடுதலாகவே பயணிகளுக்கு உச்சாகத்தை அளிக்கக்கூடியது. இப்பகுதிக்கு கோயம்புத்தூரில் இருந்து பயணித்தோம் என்றால் எந்தெந்த வழிகள் சிறப்பானதாக இருக்கும் என தெரியுமா ?

கோயம்புத்தூர் - பாலக்காடு

கோயம்புத்தூர் - பாலக்காடு


கோயம்புத்தூரில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கேரளாவின் எல்லை மாவட்டமான பாலக்காடு. பாலக்காட்டிற்கு முன்னதாக வரும் வாளையாறு ஏரி கோயம்புத்தூர் இளைஞர்கள் மத்தியில் விருப்பமான சுற்றுலாத் தலமாகும். ஏரியின் அருகேயே ரயில் நிறுத்தமும் உள்ளதால் எளிதில் வந்து செல்லக்கூடிய சுற்றுலாத் தலமாக இது உள்ளது.

பாலக்காடு - திரிசூர்

பாலக்காடு - திரிசூர்


பாலக்காட்டில் இருந்து திரிசூர் செல்ல சொரனூர், செல்லக்கரா, வடக்கஞ்சேரி என மூன்று சாலைகள் உள்ளன. ஆனால், இவற்றுள் வடக்கஞ்சேரி சாலையே தூரம் குறைவானதும், எளிதான சாலையும் ஆகும். பாலக்காட்டில் இருந்து ஆலத்தூர், வடக்கஞ்சேரி வழியாக திரிசூரை 70 கிலோ மீட்டர் பயணத்தில் அடைந்துவிடலாம்.

திரிசூர்

திரிசூர்

திரிசூர் நகரம் சுற்றுலா அம்சங்களுடுன் நம்மை வரவேற்கும் தன்மைகொண்டது. இங்கே பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணை என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இயற்கையின் மடியில் கொஞ்சி ரசித்திட விரும்புவோர் கட்டாயம் இப்பகுதிக்கு சுற்றுலாச் செல்லலாம். பரம்பிக்குளம் சரணாலயம், பீச்சி அணை, சிறு தொலைவில் உள்ள பய்யோலி கடந்கரை என நாள் முழுவதுமே இங்கே சுற்றி ரசித்திட சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

திரிசூர் - தலக்காடு

திரிசூர் - தலக்காடு


திரிசூரில் சற்று ஓய்வுக்குப் பின் பயணத்தை மேற்கொண்டால் அடுத்த 92 கிலோ மீட்டரில் தலக்காடு கிராமத்தை அடைந்து விடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மேகக் கூட்டங்களை கரைத்துக் கொண்டு வீசும் காற்றை இப்பகுதியில் இருந்தே அனுபவிக்க முடியும். இடையே திரிசூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலக்குடி என்னும் பிரபல இயற்கைச் சுற்றுலாத் தலமும் உள்ளது. தலக்காட்டில் ஒரு தேனீர் இடைவேலைக்குப் பிறகு அடுத்து நாம் பயணிக்கப் போகும் தூரம் முழுவதும் மலைப் பாதைகள் தான்.

தலக்காடு - மூணார்

தலக்காடு - மூணார்


தலக்காட்டில் இருந்து முணார் செல்லவும் மூன்று மலைப் பாதைகள் உள்ளன. அவற்றுள் கொச்சி - மதுரை நெடுஞ்சாலை பாதை இருசக்கரம், நான்கு சரக்க வாகன ஓட்டிகளுக்கு ஏதுவான, அதே சமயம் ஜிலுஜிலுவென்றே பயணிக்கும் வாய்பையும் வாரி வழங்குகிறது. குறிப்பாக, தலக்காட்டில் இருந்து ஒரு சில கிலோ மீட்டரில் வலரா நீர்வீழ்ச்சி, சேய்பாரா நீர்வீழ்ச்சி, சித்ரபுரம் காட்சி முனை கிலோ மீட்டருக்கு ஒரு முறை நம்மை வியப்பில் ஆழ்ந்தும் வகையிலான இயற்கை அம்சங்களும் இங்கே உள்ளன.

கோவை - உடுமலை - மூணார்

கோவை - உடுமலை - மூணார்


பெரும்பாலும் பயணிக்கக் கூடிய கோயம்புத்தூர், பாலக்காடு, மூணார் வழித்தடத்தை பார்தோம். கோயம்புத்தூரில் இருந்து உடுமலை வழியாக மூணாருக்கு செல்லக்கூடிய வகையில் சூப்பரான ஓர் வழித்தடமும் உள்ளது. அதையும் ஒரு முறை டிரை பண்ணி பார்க்கலாமே. கோயம்புத்தூரில் இருந்து உடுமலை 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொள்ச்சி வழியாக உடுமலையை அடையலாம். அல்லது செஞ்சேரிமலை வழியாகவும் உடுமலையை வந்தடைய முடியும். ஆனால், இது சற்று தூரம் கூடுதலான பாதையாகும்.

உடுமலை - மூணார்

உடுமலை - மூணார்


உடுமலையில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணாரு மலைப் பிரதேசம். உடுமலையில் இருந்து மானுப்பட்டி கிராமம் வரையில் சமவெளிப் பாதையாக இருந்தாலும் அடுத்த 70 கிலோ மீட்டர் வரையிலான பயணம் முழுவதும் அடர்ந்த மலைக் காடுகளின் வழியாகத்தான் இருக்கும்.

தூவானம் நீர்வீழ்ச்சி

தூவானம் நீர்வீழ்ச்சி


இப்பயணத்தில் முதலில் நம்மை வரவேற்பது தூவானம் நீர்வீழ்ச்சி தான். சின்னார் பாலத்தைக் கடந்து அடுத்த ஒரு சில நிமிடங்களில் சாலையில் பயணித்தபடியே கொட்டும் இந்த அருவியை காண முடியும். தொடர்ந்து பயணிக்கையில் பாதையில் செல்ல செல்ல, வானுயர்ந்த காடுகளின் மரங்கள் மறைந்து தேயிலை தோட்டங்களும், அதன் நறுமனமும் நம்மை வரவேற்கும்.

உடுமலை - மூணார்

உடுமலை - மூணார்


மானுப்பட்டியில் இருந்து துவங்கிய மலையேற்றத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயம், சின்னார் காட்சி கோபுரம், சின்னார் வனவிலங்கு சரணாலயம், லக்கம் நீர்வீழ்ச்சி, தலையார் காட்சி முனை, கன்னிமலை பள்ளத்தாக்கு என பல சுற்றுலா அம்சங்களைக் கடந்து வெறும் 80 முதல் 95 கிலோ மீட்டர் தொலைவிலேயே மூணார் பிரதேசத்தை அடைந்து விடலாம்.

மூணார் சுற்றுலா அம்சங்கள்

மூணார் சுற்றுலா அம்சங்கள்


மூணாரில் நீங்கள் ஒரு வாரம் தங்கி ரசிக்கத் தகுந்த வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மாட்டுபட்டி அணை, இந்தியா - சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் மாட்டுப் பண்ணை, ஆட்டுக்கல் அருகே உள்ள நீர்வீழ்ச்சிகள், சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா என பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். அவற்றுள் உங்களது நேரத்திற்கு ஏற்றவாறும், பயணத் திட்டத்திற்கு ஏற்றவாறும் தேர்வு செய்து சுற்றி ரசிக்கலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X