Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள்

தென்னிந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள்

By Naveen

தெனிந்தியாவில் இருக்கும் நான்கு மாநிலங்களும் ஏராளமான அற்புதமான சுற்றுலாத்தளங்களை கொண்டிருப்பவை. தனெக்கென தனியொரு மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவு பழக்கவழக்கங்கள் என இவற்றுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் நம்மை ஏதோ வேறு நாட்டுக்கு வந்துவிட்டதை போல சில நேரங்களில் உணர வைக்கும்.

அதேபோல என்னதான் நாம் இந்த மாநிலங்களில் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தாலும் இம்மாநிலங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

வாருங்கள், கேரளா, கர்னாடக மற்றும் ஆந்திராவில் இருக்கும் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் பற்றிய பயனுள்ள பயண தகவல்களை தெரிந்துகொள்வோம்.

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலை - சூழல் சுற்றுலா:

கடவுளின் சொந்த தேசம் என்ற புனைபெயருடன் அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் புதிதாக சூழல் சுற்றுலா (Eco Tourism) தென்மலா என்ற இடத்தில் துவங்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இந்த தென்மலா கொல்லம் மாவட்டத்தில் புனலூர் என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் முதல் சூழல் சுற்றுலா மையம் என்ற பெருமையை இவ்விடம் பெற்றுள்ளது.

Akhil S Unnithan

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலை - சூழல் சுற்றுலா:

இயற்கைக்கு சீர்கேடு விளைவிக்காமல் ரசிக்கவும், அறிவியல் பூர்வமாக அவ்விடங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் விரும்புகிறவர்களுக்காகவே சுற்றுலா தான் சூழல் சுற்றுலா (Eco Tourism) எனப்படுகிறது.

Mohanraj Kolathapilly

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலாவில் இருக்கும் ஏரியில் நாம் படகு பயணம் செல்லலாம், கரடுமுராடான மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டலாம், ட்ரெக்கிங் பயணமும் மேற்கொள்ளலாம்.

தென்மலாவில் இடிமுலங்கான் பாரா, ராக் வூட், ரோஸ் மலா என ட்ரெக்கிங் செல்ல மூன்று அற்புதமான இடங்கள் இருக்கின்றன.ட்ரெக்கிங் செல்ல கட்டணமாக ஒருவருக்கு 2500-3000 வரை வசூலிக்கப்படுகிறது.

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலை - சூழல் சுற்றுலா:

தென்மலா பூங்கா வருடம் முழுக்கவே சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கிறது. என்றாலும் பருவமழை காலமான செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் இங்கே செல்வதை தவிர்ப்பது நல்லது.

நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் நிச்சயம் இந்த தென்மலாவிற்கு சென்று வாருங்கள். திருவனந்தபுரத்தில் இருந்து 72 கி.மீ தொலைவில் தென்மலா அமைந்திருக்கிறது.

பைலகுப்பே:

பைலகுப்பே:

இந்தியாவில் லடாகிற்கு அடுத்தபடியாக அதிகளவில் பௌத்தர்கள் வசிக்கும் இடம் தான் கர்னாடக மாநிலத்தில் மைசூருக்கு அருகில் இருக்கும்பைலகுப்பே ஆகும்.இங்கே மொத்தம் 70,000 பௌத்தர்கள் வசிக்கின்றனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமான நம்ட்ரோளிங் மடாலயம் இங்கே தான் அமைந்திருக்கிறது.

பைலகுப்பே:

பைலகுப்பே:

இந்த மடாலயத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 18மீ உயரமுள்ள தங்க தகடுகள் பதிக்கப்பட்ட புத்தர் சிலை தான்.

இந்த மடாலயத்திற்கு சிறப்பு நாட்களிலோ, பூஜை நேரங்களிலோ சென்றால் ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் ஒரே குரலில் புத்த மந்திரங்கள் சொல்வதையும், திபத்திய வாத்தியங்கள் இசைக்கப்படுவதையும் கேட்கலாம்.

Praful Tripathy

பைலகுப்பே:

பைலகுப்பே:

எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த மடலாயத்தில் சென்று தியானத்தில் ஈடுபட எந்த தடையும் இல்லை. நமக்கு சற்று அந்நியமான பௌத்த மத கலாச்சாரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு வர வேண்டும்.

இங்கே வெளிநாட்டவர்கள் வர எந்த தடையும் இல்லை என்றாலும் இரவு இந்த மடாலயத்தில் தங்குவதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

லேபாக்ஷி:

லேபாக்ஷி:

இராமாயண காப்பியத்தில் தன் பேரன்புக்குரிய மனைவியை காணாது தவித்த ராமனிடம் சீதையை இலங்கைக்கு கவர்ந்து சென்றது ராவணன் தான் என கழுகளின் அரசனான ஜடாயு கூறி வீர மரணம் அடைந்த இடம் தான் லேபாக்ஷி ஆகும்.

Premnath Thirumalaisamy

லேபாக்ஷி:

லேபாக்ஷி:

இங்கிருக்கும் கோயிலானது விஜயநகர பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டதாகும். தஞ்சை பெரிய கோயில் எப்படி சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றோ அதுபோல லேபாக்ஷி விஜயநகர பேரரசின் பெருமைகளை உலகுக்கு சொல்லி நிற்கிறது.

இங்கிருக்கும் வீரபத்திரர் கோயிலில் நாகத்தின் கீழ் இருக்கும் சிவலிங்கத்தின் சிலை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

Premnath Thirumalaisam

லேபாக்ஷி:

லேபாக்ஷி:

லேபாக்ஷி வீரபத்திரர் கோயிலில் இன்னும் தீர்க்கமுடியாத புதிராக இருக்கிறது தொங்கும் தூண் ஒன்று. மேலே எந்தவிதமான ஆதரவுமின்றி தரையிலும் முட்டாமல் அந்தரத்தில் தொங்குவது போல இருக்கும் இந்த தூண் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகும்.

Nagesh Kamath

லேபாக்ஷி:

லேபாக்ஷி:

இங்கும் தஞ்சை பெரிய கோயிலில் இருப்பது போன்றே மிகப்பெரிய நந்தி ஒன்றும் இருக்கிறது.4.5மீ உயரமும்,8.23மீ அகலமும் கொண்டிருக்கும் இந்த நந்தியும் ஒரே கல்லில் குடையப்பட்டது ஆகும்.

இது நாகத்தின் உள்ளிருக்கும் சிவலிங்கத்தை நோக்கியபடி இருக்கிறது.

Kailas Shastry

லேபாக்ஷி:

லேபாக்ஷி:

பெங்களுருவில் இருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயில் நிச்சயம் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாகும். லேபாக்ஷியை பற்றிய மேலும் பல தகவல்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Premnath Thirumalaisamy

கவி:

கவி:

கேரளாவில் சமீபகாலமாக பிரபலமாகி வரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்று பந்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் கவி என்ற இடமாகும்.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடம் தேக்கடியில் இருந்து 28கி.மீ தொலைவிலும், வண்டிப்பெரியாரில் இருந்து 14கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

-Reji

கவி:

கவி:

பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக கவி இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இதனுள் நுழைய நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு ₹25, கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு அனுமதி கட்டணமாக ₹50, கேமராவிற்கு₹25, வீடியோ கேமராவிற்கு ₹100 வசூலிக்கப்படுகிறது.

-Reji

கவி:

கவி:

நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கே சுற்றுலாப்பயணிகள் இரவு கேம்ப் அமைத்து தங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கவி வனப்பகுதியில் புலிகள், யானைகள், சிறுத்தைகள், கரடிகள், சாம்பார் மான்கள், சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகளும், 250க்கும் மேற்ப்பட்ட வகையான பறவைகளும் வசிக்கின்றன.

மனிதனால் மாசுபடாத இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் வரவேண்டிய இடமாகும் கவி.

-Reji

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X