Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவின் மிக முக்கிய சிலைகளுள் ஒன்றாக இது எப்படி வந்தது?

இந்தியாவின் மிக முக்கிய சிலைகளுள் ஒன்றாக இது எப்படி வந்தது?

கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த பசுமையான

By Udhaya

கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த பசுமையான தோட்டங்களின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த சிலையை காண்பதற்காகவே மலம்புழா கார்டனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். கேரளாவின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான கானை குஞ்சிராமன், 1969-ஆம் ஆண்டு புராணக் கதாபாத்திரமான யக்ஷிக்கு சிலை வடிவம் கொடுத்தார். இந்த மாபெரும் சிலை ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும் பாங்கும், சிற்பியின் கற்பனை திறனும் காண்போரை மயக்கம் கொள்ள செய்து விடும்.

வரலாறு

வரலாறு

50 வருடங்களுக்கு முன்னால், பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சந்திப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் யக்ஷி சிலையை மலம்புழா பூங்கா பகுதியில் அமைக்க ஆலோசனை நடைபெற்றது. ஆனால் அந்த திட்டத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அதாவது, இந்த சிலை இங்கு அமைக்கப்படக்கூடாது என்று போராட்டமே நடைபெற்றது. அப்படி போராடுவதற்கு காரணம் என்ன தெரியுமா. இந்த சிலை நிர்வாணமாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு உடை அணுவிக்கவேண்டும் அல்லது இந்த சிலை அமைக்கப்படவே கூடாது என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பின்னர் ஆடை சுற்றிய சிலை மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

இதில் பாராட்டப்படவேண்டியது சிலையை செதுக்கிய சிற்பியின் திறமை. ஏனெனில் நிர்வாண சிலையை கணக்கச்சிதமாக செதுக்கியவர், அதன் மேல் சேலை சுற்றியபிறகும் அதன் அழகு குறையாமல் பார்த்துக்கொண்டார்.

வருடத்திற்கு பத்து லட்சம் பேர் பார்வையிடுகிறார்களாம் இந்த சிலையை. கடைசியாக 2017ம் ஆண்டு பதினொரு லட்சத்து சொட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

உயரம் என்ன தெரியுமா

உயரம் என்ன தெரியுமா


இந்த சிலையை 50 அடி உயரம் கொண்டதாக செய்ய முதலில் இதன் சிற்பி திட்டமிட்டிருந்தாராம். ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையும், அரசின் ஒத்துழைப்பு இல்லாததாலும் 30 அடியில் சிலையை வடித்துள்ளார். மலம்புழாவின் எல்லா இடங்களிலிருந்தும் இந்த சிலை பார்க்க ஏதுவாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

MANOJTV

 அருகில் காணவேண்டிய தளங்கள்

அருகில் காணவேண்டிய தளங்கள்

பாலக்காடு கோட்டை, பூதுன்டி நீர்த்தேக்கம், மலம்புழா அணை, பாம்பு பூங்கா, மலம்புழா பூங்கா என அருகில் காணவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.

Pramyabala

தென்குருசி

தென்குருசி

பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாரம்பரிய பெருமை வாய்ந்த அழகிய குக்கிராமமான தென்குருசி அமைந்திருக்கிறது. இந்த கிராமத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் நெல்லியம்பதி எனும் அழகிய சிற்றூர் உள்ளது. தென்குருசி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களாக தாயான்காவு கோயிலும், எலமன்னம் சங்கரநாராயணன் கோயிலும் அறியப்படுகின்றன.இவைதவிர தென்குருசியின் சிவாலயம் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் ஐயப்பன் விளக்கு, சிவராத்திரி, திருவாதிரை, உத்திராடம், திருவோணம் போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

 மலம்புழா தோட்டம்

மலம்புழா தோட்டம்

கேரளாவின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் மலம்புழா கார்டனுக்கு நீங்கள் வரும் போது இயற்கையின் அற்புதமும், மனிதனின் படைப்பாற்றலும் கைகோர்த்து காட்சியளிக்கும் புதுமையின் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம். இங்கு உள்ள ஆடம்பரமான புல்வெளிகள், கவின் கொஞ்சும் மலர்ப்படுக்கைகள், அற்புத நீரூற்றுகள், கண்கவர் குளங்கள் என்று ஒவ்வொன்றும் உங்கள் மனதை மயக்கும் ஓவியங்களாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இவைதவிர இதன் வளாகத்தில் அமைந்திருக்கும் குழந்தைகள் பூங்காவில் உங்களுடைய செல்லக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பொழுதை கழிக்கலாம்.

மலம்புழா கார்டன் வளாகத்தில் காணக்கூடிய மற்ற பிற கவர்ச்சி அம்சங்களாக அக்குவாரியம், ஏரியல் ரோப்வே, யக்ஷி சிலை, ராக் கார்டன், ரோஸ் கார்டன், நீச்சல் குளம் போன்றவை அறியப்படுகின்றன. இந்த தோட்டத்தில் மனித உழைப்பினால் உருவான கால்வாயில் நீங்கள் படகுப் பயணம் செய்து பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு தோட்டத்தை சுற்றி அமைந்துள்ள விசாலமான நடைபாதயில் நீங்கள் ஒரு சிறு உலா சென்று தோட்டத்தில் கொட்டிக் கிடக்கும் பேரழகினை பரிபூரணமாக ரசிக்கலாம். மேலும் குடிதண்ணீர், உணவுக் குடில்கள், ஷாப்பிங் பகுதிகள், ஓய்வு அறைகள், கண்காணிப்பு மையங்கள் போன்ற கூடுதல் வசதிகளும் மலம்புழா தோட்டங்களில் பயணிகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மலம்புழா கார்டன் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மின்விளக்குகளால் தகதகவென்று ஒளிரும் எழில்மிகும் காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

malampuzhadam.com

 ஸ்நேக் பார்க்

ஸ்நேக் பார்க்

மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஊரவன் மீட்பு மையமாக செயல்பட்டு வரும் இந்த பூங்காவுக்கு காயம்பட்ட எத்தனையோ பாம்புகள் கொண்டுவரப்படுகின்றன.

1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாம்பு பூங்காவில் ராஜ நாகம், பழுப்பு வைன் பாம்பு, கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ஓநாய் பாம்பு உள்ளிட்ட பாம்பு இனங்களை நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். மேலும் இந்தப் பூங்காவில் தண்ணீர் பாம்புகள் மற்றும் முதலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

malampuzhadam.com

 ஃபேண்டஸி பார்க்

ஃபேண்டஸி பார்க்


கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஃபேண்டஸி பார்க்குக்கு, கேரள சுற்றுலாத் துறை 1998-ஆம் ஆண்டு 'பெஸ்ட் இன்னோவேட்டிவ் டூரிசம் புராடக்ட்' என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஃபேண்டஸி பார்க் 15 ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இந்த பூங்கா நியோ டெக் அம்யூஸ்மென்ட்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

ஃபேண்டஸி பார்க்கில் குழந்தைகளுக்காக பேட்டரி கார் ரைட், வாட்டர் கிட்டி ரைட், பேபி டிரெயின் ரைட், மினி டெலி காம்பாக்ட் போன்ற எண்ணற்ற விளையாட்டுகள் காத்துக்கிடக்கின்றன. அதோடு ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் டிரெயின், வாட்டர் மெர்ரி கோ ரவுண்ட், கோ கார்ட், பிரேட் போட், டிராகன் கோஸ்டர் உள்ளிட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

மேலும் இங்கு அழகிய தோட்டம், நீரூற்று, உணவுக் குடில்கள், ஓய்வறைகள் போன்ற வசதிகளும் பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்தப் பூங்காவில் திறக்கபட்ட டிஜிட்டல் ப்லேனிட்டோரியம் மற்றும் வெட் பார்க் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

malampuzhadam.com

ராக் கார்டன்

ராக் கார்டன்


மலம்புழா தோட்டம் மற்றும் அணைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ராக் கார்டன், இந்தியாவின் இரண்டாவது பாறைப் பூங்காவாகவும், கேரளாவில் அமையபெற்ற முதல் பாறைப் பூங்காவாகவும் கருதப்படுகிறது.

இந்த மனதை மயக்கும் கலைப்படைப்பு புகழ்பெற்ற சிற்பி பத்மஸ்ரீ லௌரேட் நெக் சாந்த் சைனி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சண்டிகரில் உள்ள இந்தியாவின் முதல் பாறைப் பூங்காவையும் நெக் சாந்ததான் உருவாக்கினார்.

1996-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ராக் கார்டன் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள கைவினை பொருட்கள் யாவும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த வளையல்கள், பவர் இன்சுலேட்டர்ஸ், மெலமைன் பாத்திரங்கள், உடைந்த ஓடுகள் போன்ற உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டவை.

malampuzhadam.com

Read more about: travel kerala palakkad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X