Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலங்குடி » வானிலை

ஆலங்குடி வானிலை

ஆலங்குடிக்கு வருகை தர சிறந்த பருவம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலானது. இந்த காலம்  பக்தர்கள் புனிதக் கோயில்களுக்கு வருகை தர உகந்த காலமாகும்.குறுகிய காலப் பயணமாக ஆலங்குடி வர விரும்பும் பயணிகள் ஜூனிலிருந்து செப்டம்பருக்கு உட்பட்ட காலத்தில் வரலாம். இந்த சமயத்தில் இங்கே பருவமானது சிறிது ஈரப்பதத்துடன் அனுபவிக்கும் வகையில் இருக்கும்.

கோடைகாலம்

ஆலங்குடியில் கோடை காலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிகிறது. கோடை பொதுவாக மிகவும் வெப்பமாக இருக்கும். அப்போது இங்கு சீதோஷ்ண நிலை 28 டிகிரி செல்சியசில் இருந்து 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பொதுவாக பயணிகள் கோடை காலமான ஏப்ரல் மே மாதங்களில் இங்கு வருவதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

இங்கே மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டெம்பர் இறுதியில் முடிகிறது. இந்த சமயத்தில் இங்கு பெய்யும் மழையின் அளவு குறைவானதாகவே இருக்கின்றது. மழைக்காலத்தில் ஆலங்குடி மிக அழகாகக் காட்சியளிக்கிறது. மக்களும்  கோடையின் கொடூர வெப்பத்தில் இருந்து விடுபெறுகின்றனர்.

குளிர்காலம்

ஆலங்குடியில் டிசம்பருக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலம் குளிர்காலம்.குளிர்காலம் மிக இனிமையனதகவும் 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான மிதமான குளிருடனும் காணப்படுகிறது.