Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்ச்சி » வானிலை

அல்ச்சி வானிலை

ஜூன் முதல் செப்டம்பர் வரை அல்ச்சி வருவதே மிகவும் சரியான நேரம். அதிகப்பட்ச வானிலை 25 டிகிரி செல்சியசாகவும் குறைந்தப்பட்ச வானிலை 12 டிகிரி செல்சியசாகவும் இருப்பதால் வானிலை நமக்கு இனிமையாக இருக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம்  என்பதால் அல்ச்சியை வந்தடைய இதுவும் சரியான நேரமே. இந்நேரம் இங்கு வருபவர்கள் மழைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன்): கோடைக்காலத்தில் அல்ச்சியின் தட்பவெப்ப நிலை சற்று இனிமையாகவே இருக்கும். இந்த காலத்தில் வெப்ப நிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளது. அதே போல் குறைந்தபட்சமாக இரவின் போது 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பொதுவாக இரவை விட பகல் தான் இக்காலத்தில் அதிகமாக இருக்கும். இக்காலத்தில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர்): அல்ச்சியின் மழைக் காலங்களில் தேவையான அளவு மழை பெய்யும். அதிகப்பட்சமான மமழைப் பொழிவை ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்க்கலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி): இக்காலம் அல்ச்சியில் கடுங்குளிரோடு இருக்கும். -20 டிகிரி செல்சியசாக, உறையும் புள்ளிக்கு கீழேயும் வானிலை செல்லும். அதிகப்பட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இந்த கடுங்குளிரை மனதில் வைத்துக் கொண்டு பொதுவாக இக்காலத்தில் சுற்றாலப் பயணிகள் இங்கு வர விரும்புவதில்லை.