Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அமர்நாத் » ஈர்க்கும் இடங்கள் » அமர்நாத் குகை

அமர்நாத் குகை, அமர்நாத்

18

ஸ்ரீநகர் அருகே அமைந்திருக்கும் அமர்நாத் குகை சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள இந்த குகை 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

இந்த குகை 60 அடி நீளமும், 15 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்டது. இங்கு காணப்படும் பனிக்கட்டியாலான சிவலிங்கம் இயற்கையாக உருவானதாக நம்பப்படுவதால், சிவனருளை பெறுவதற்கும், இந்த அதிசய சிவலிங்கத்தை காண்பதற்கும் ஏராளமான பக்தர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

அமர்நாத் என்ற ஹிந்தி வார்த்தையின் பொருள் 'அமர்' (மரணமில்லாத) மற்றும் 'நாத்' (கடவுள்) ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து உருவானது.

ஒரு பிரபல நாட்டுப்புறக் கூற்றின் படி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி, தன்னிடம் வெகு காலமாக, சொல்லாமல் மறைத்து வரும் மரணமில்லாமையின் ரகசியத்தைக் கூறும்படி, சிவனிடம் மன்றாடியதாகவும், அவர் பார்வதியை இமய மலையில், ஒரு ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, யாரும் கேட்டு விடாதபடி அந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இவ்விடம், இந்திய ராணுவம், இந்திய பாராளுமன்றப் படைகள், மற்றும் சிஆர்பிஎஃப், ஆகியவற்றினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அமர்நாத் குகைக்கு வர விரும்புவோர், உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.

அமர்நாத் வருவதற்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிகவும் ஏற்ற மாதங்களாகும். அதுமட்டுமல்லாமல் மே முதல் செப்டம்பர் வரையிலான காலங்களிலும் அமர்நாத்துக்கு பயணிகள் சுற்றுலா வரலாம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City