பஹல்கத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3658 அடி உயரத்தில் அமைந்துள்ள ஷேஷ்நாக் ஏரி, அமர்நாத்தின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.
ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ள இவ்வேரி, இந்து புராணங்களில் கூறப்படும், ஏழு தலை கொண்ட, சர்ப்ப ராஜாவான, ஷேஷ்நாக் -கின் பெயரிலிருந்தே அவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பஹல்கத்திலிருந்து இங்கு வருவதற்கு, சுமார் இரண்டு நாட்கள் மலை ஏற வேண்டி இருக்கும். இந்த ஏரி ஜூன் மாதம் வரை, குளிர்காலம் முழுக்கவே, உறைபனியால் மூடப்பட்டிருக்கும்.
இங்கு வழங்கப்படும் பிரபலமான நாட்டுப்புறக் கூற்றின் படி, ஷேஷ்நாக் ஏரியில் தான், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவன், அமர்நாத் குகைக்குச் செல்லும் வழியில், அவரது சக்தியின் சின்னமான தன்னுடைய சர்ப்பத்தை, விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
கோடையில், அமர்நாத் குகையைக் காண வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த ஏரிக்கும் வருகை தருகின்றனர். கூடாரங்கள் அமைத்துத் தங்கும் திட்டத்தோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஷேஷ்நாக் ஏரி ஒரு மிகச் சிறந்த தலமாகும்.



Click it and Unblock the Notifications