Search
  • Follow NativePlanet
Share

அம்பாஜி - அன்னை சக்தியின் உறைவிடம்!

18

அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம் காபார் மலை உச்சியில் அமைந்திருக்கிறது.

இந்த காபார் மலைத் தொடர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கன்தா மாவட்டத்தில் அமைந்துள்ள தான்டா தாலுகாவில் உள்ளது.  இங்கு பத்ராவி பூர்ணிமா மற்றும் தீபாவளி தருணங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்த இடத்தை ஆரவல்லி மலையின் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இவ்விடத்தின் இயற்கை அழகு மற்றும் அமைதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நிறைவான ஆன்மீக அனுபவத்தை தருகிறது.

காபார் மலை

காபார் மலை மிகப் புகழ்பெற்ற வேத கால நதியான சரஸ்வதி நதியின் ஆரம்பப் புள்ளி அருகே அமைந்துள்ளது. அரசுர் மலைத்தொடர்களில் அமைந்துள்ள இது ஆரவல்லி மலைகளின் தென் மேற்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 அடி உயரத்தில் இருக்கிறது.

காபார் மலை செங்குத்தாக உள்ளதால் பக்தர்கள் மலை ஏறுவது மிகவும் கடினம் ஆகும். பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து 300 கல் படிகள் உள்ள ஒரு குறுகிய ஆபத்தான பாதையில்  ஏறி காபார் மலையை அடைய  வேண்டும். இந்த பாதையே கோவிலை அடைவதற்கான மிக முக்கியமான பாதையாகும்.

மத முக்கியத்துவம்

அம்பாஜி கோயில் இந்தியாவின் மிக முக்கியமான  சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து மத புராணத்தின் படி, தேவி சதியின்  உடலில் உள்ள இதயப் பகுதி காபார் மலையின் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது.

இந்த அரசூர் மலையின் மீது அமைந்துள்ள சக்தி பீடமான அன்னை அரசூரி அம்பாஜியின் கோவில் அன்னைக்கு சிலைகள் இல்லை.  "ஸ்ரீ விசா இயந்திரம்" முக்கிய விக்ரஹமாக வணங்கப்படுகிறது.

இயந்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. இந்த விசா ஸ்ரீ யந்திரத்திற்கு  வழிபாடு செய்வதானல், ஒருவர் தன்னுடைய  கண்களை கட்டிக் கொண்டு வழிபாடு செய்யவேண்டும். 

இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும் பத்ராவி பூர்ணிமா மிகவும் புகழ்பெற்ற திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின் போது உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

மேலும் தீபாவளியின் போது, இந்த அம்பாஜி கோவில் முழுவதும்  விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.  மகாபாரதத்தில் அம்பாஜி பற்றி ஒரு சிறு குறிப்பு உள்ளது. அதில் பாண்டவர்க்ள் தங்களுடைய வனவாசத்தின் பொழுது அம்பாஜி அம்மனை வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவியல்

அம்பாஜி  குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள கடியத்ராவிலிருந்து சுமார் 72 கீ.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து மவுண்ட் அபு சுமார் 45 கீ.மீ தொலைவிலும், பாலன்பூர் சுமார் 72 கீ.மீ தொலைவிலும் அமைந்திருக்கின்றன.

முக்கியமன சுற்றுலா இடங்கள்

கப்பார் மலையில், கைலாஷ் மலையில் உள்ளது போன்று சன்செட் பாயிண்ட்கள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து கண்ணுக்கினிய சூரிய அஸ்த்தமனத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல் இழுவை வண்டி சவாரி போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

கப்பார் மலையில் பல்வேறு ஆன்மீக இடங்கள் உள்ளன.  முக்கிய கோவில் பின்புறம் மானசரோவர் என்கிற குளம் காணப்படுகிறது. அந்த குளத்தின் இரு புறங்களிலும்  இரண்டு கோயில்கள் உள்ளன். ஒன்று மகாதேவர் கோயில், மற்றொன்று அம்பாஜி தேவியின் சகோதரியான அஜய் தேவி கோவிலாகும்.

புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் 8 கீ.மீ தொலைவில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு மிக அருகில் உள்ளது.  இது சரஸ்வதி நதி மற்றும் காமுக்கில் உள்ள ஒரு புனித குந்த்திற்கு தொடர்பில் இருக்கிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றான அம்பாஜிக்கு ஆண்டு தோறும் கணக்கில் அடங்கா எண்ணிக்கையிலான பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அம்பாஜி சிறப்பு

அம்பாஜி வானிலை

சிறந்த காலநிலை அம்பாஜி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அம்பாஜி

  • சாலை வழியாக
    அம்பாஜி, அகமதாபாத் (180km), அபு சாலை நிலையம் (20km), மவுண்ட் அபு (45km), தில்லி (785km), பாலன்பூர் (65km) மற்றும் ஹிம்மட் நகர் (102km) போன்ற நகரங்களுடன் நன்கு சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான பஸ்கள் இந்த நகரங்களில் இருந்து அம்பாஜிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அம்பாஜிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் அபு சாலை நிலையம் ஆகும். இது அம்பாஜியில் இருந்து சுமார் 20 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தில்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி சேவைகள் உள்ளன. அவற்றிற்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அம்பாஜிக்கு அருகிலுள்ள விமான நிலையம், அம்பாஜியில் இருந்து சுமார் 180 கி.மீ தொலைவில், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி கட்டணம் ரூ 2500 ஐ சுற்றி இருக்கும். இந்த விமான நிலையம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் சில சர்வதேச நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu