Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்போலி » வானிலை

அம்போலி வானிலை

கோடைகாலம்

கோடைக்காலம் மார்ச்சிலிருந்து மே மாதம் வரை நிலவுகிறது. இப்பருவத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 22°C யிலிருந்து 40°C ஆக காணப்படும். பகல் பொழுது  வெப்பமாகவே காணப்படுகிறது.  மே மாதம் மிக உஷ்ணத்துடன் உள்ளதால் அம்மாதத்தில் இங்கு பயணம் செய்யாமலிருப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரி அம்போலி பகுதியில் மழைக்காலமாகும். இக்காலத்தில் வெப்பநிலை இதமான இனிமையான 20°C ஆக காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் இப்பகுதி வசீகரமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாய் உருவாற்றமடைந்து பொங்கி வழியும் அருவிகளுடன் காட்சியளிக்கிறது. எனவே இயற்கை எழில் மற்றும் அருவிகளை ரசிக்க இது மிகவும் ஏற்ற பருவமாகும்.

குளிர்காலம்

டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரையில் அம்போலியில் குளிர் காலம் நிலவுகிறது. இப்பருவத்தில் குளுமையான 10°C யிலிருந்து அதிகபட்சம் 30°C வரை வெப்பநிலை காணப்படுகிறது. எனவே குளிர்காலமே இந்த அம்போலி மலைநகரத்தைச்  சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற பருவமாகும்.