சின்ன செலவில் பெரிய பெரிய சுற்றுலாவிற்கு இதை டிரை பண்ணி பாருங்க..!


சுற்றுலா என்பது அனைவருக்குமே விருப்பமான ஒன்றாக இருந்தாலும் அதற்கான செலவுகள் என்பது எளிதானதாக இருப்பதில்லை. இதனாலேயே ஏதேனும் ஒரு பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர், குறிப்பாக நடுத்தர மக்கள் மனதில் என்னதான் ஆசைகள் நிறைந்திருந்தாலும் அதை அப்படியே புதைத்துவிட்டு தொடர் நெருக்கடிப் பணிகளை மேற்கொள்கின்றனர். அல்லது, எதிர்பார்த்த தலத்தை விட்டுவிட்டு பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலா மையங்களை தேர்வு செய்கின்றனர். இனி, உங்களது ஆசையை புதைக்க வேண்டாம், இந்த வழிமுறைகளை பின்பற்றி ஜோராக சுற்றுலா செல்லுங்கள்.

எப்போது செல்லலாம் ?


சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முன் அங்கே சீசன் இல்லாத போது செல்வது சிறந்ததாக இருக்கும். சீசன் காலங்களிலேயே அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆதலால் அதற்கு ஏற்றவாறு செல்லலாம். குறிப்பாக, சீசன் அற்ற காலங்களில் செல்வதன் மூலம் அதிகப்படியான கூட்ட நெரிசலில் இருந்தும் தப்பிக்கலாம்.

பயணச் சீட்டு


குறிப்பிட்ட சில சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர விமான சேவைகளில் சலுகைகள் வழங்குவது வழக்கம். அதனை கவணித்து பயணச்சீட்டை பதிவு செய்வதன் மூலம் உங்களது சுற்றுலாவிற்கான தொகையில் ஒரு பங்கை மிச்சம் செய்யலாம்.

தொலைத்தொடர்பு


வெளியூர் பயணத்திற்கு முன்பாகவே தொலைபேசிக்கான அழைப்புச் சலுகை, அதாவது ரோமிங் போன்ற அழைப்பு வசதிக்குறிய கட்டணத்தை இடுவதன் மூலம் இதற்காக சில ரூபாய் குறையும் வாய்ப்புள்ளது.

தங்கும் விடுதி


பொதுவாகவே தற்போதைய சூழ்நிலையில் இணையத்தில் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. சலுகையில் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வதன் மூலம் சேவைக் கட்டணமாக சில தொகை தேவையின்றி செலவிட வேண்டியிருக்கும். அதற்கு மாறாக நேரிலே சென்று தங்கும் விடுதியில் அரை எடுப்பதன் மூலம் கட்டணமும் சற்று குறைவாக இருக்கும். உங்களுக்கான தங்கும் அரையின் வசதிகளை நேரில் பார்த்த திருப்தியும் இருக்கும்.

பயண வசதிகள்


சுற்றுலாவிற்கு சென்ற இடத்தில் டேக்சி அல்லது தனியாக கார் பதிவு செய்த செல்வது கூடுதலான தொகையை செலவழிக்கும். அதற்குப் பதிலாக உள்ளூர் பேருந்து, மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை பயண்படுத்துவதன் மூலம் பயணத்திற்கான ரூபாயைக் குறைக்கலாம்.

கூப்பன்கள்

ஒரு சில பிரசித்தமான சுற்றுலாத் தலங்களில் அவ்வப்போது சலுகைக் கூப்பன்கள் வழங்கப்படுவதும் வழக்கம். அதனை சரியாகப் பின் தொடர்ந்து கூப்பனைப் பெற்றால் இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ மேலும் சில சுற்றுலா அம்சங்களை காண வாய்ப்புகள் கிடைக்கும்.

நினைவுப் பொருட்கள்


சுற்றுலா செல்வபர்கள் அங்குள்ள புகர்பெற்ற சில பொருட்களை நினைவாக வாங்கி வருவது வழக்கம். அவ்வாறு நீங்கள் சுற்றுலா செல்லும் இடத்திலும் பிரசித்தமான பொருட்கள் இருந்தால் அவற்றை சரியாக தேர்வு செய்து அனைத்தையும் வாங்காமல் குறிப்பிட்டவற்றை மட்டும் வாங்களாம்.

Os Rúpias

நினைவில் இருக்கட்டும்


இதுபோன்ற சில வழிமுறைகளின் மூலம் உங்களது பயணமும் வெற்றிகரமாக அமையும். செலவும் குறையும். அடுத்த முறை சுற்றுலா செல்வதற்கு முன் இத்திட்டத்தை பின்பற்றி பயணடையுங்கள்.

Read More About: ooty kerala tamilnadu coorg

Have a great day!
Read more...

English Summary

8 Tips for a Tighter Travel Budget