ராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா ?


மஹாபாரதப் போர் முடிவடைந்த நிலையில், கௌரவர்களின் தாயாராகிய ராஜமாதா காந்தாரி, வனப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருக்கையில் பேரி மரத்தை கடந்த போது அங்கே தெய்வீக அம்சத்தை உணர்ந்த ராஜமாதா அங்கேயே ஒரு கோவிலையும் கட்டினார். நாட்டில் உள்ள ஆன்மீகத் திருத்தலங்களில் பேரி ஆலயம் உலகப் புகழ்பெற்றதாக உள்ளது. வாருங்கள், இக்கோவிலின் சுவாரசியம் குறித்து அறிந்து கொள்வோம்.

எங்கே உள்ளது ?

ஹரியானா மாநிலத்தில் உள்ள 21 மாவட்டங்களில் ஜஜ்ஜாரும் ஒன்று. ஜார்நகர் என்னும் இயற்கை நீரூற்றினை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதி இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. இப்பகுதியின் மேற்பரப்பு வடிமானம் நகரெங்கிலும் பல மைல் தூரம் ஓடி ஒரு நீர்த்தொட்டியில் சென்று வடிவது போல் இருப்பதால், தண்ணீர் பாத்திரம் என்ற அர்த்தத்தை கொள்கிறது.

Steven dosRemedios

ஜஜ்ஜார் திருத்தலம்

ஆன்மீக பக்தர்களைம், இயற்கை ஆர்வலர்களை வியப்பில் வீழ்த்தக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது ஜஜ்ஜார் மாவட்டம். இப்பகுதிக்கு பயணிப்போர் யாவரும் ராஜமாதாவின் கோவிலையும், பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயத்தையும் தவராமல் சுற்றி ரசித்திட வேண்டும்.

Francisco Anzola

பேரி மந்திர்

ஜஜ்ஜார் மாவட்டத்தின் பேரி நகரில் அமைந்துள்ள ஆன்மீகத் தலம் பேரி மந்திர். பீமேஷ்வரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இத்தலம் புராணங்களின் படி, கிருஷ்ண பகவான் பீமனை அழைத்து, போரில் வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களின் குலதெய்வமாகிய குல்தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்று, அதற்காக குருக்ஷேத்திரா போர்க்களத்துக்கு தேவியைக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டதால் அவருக்காக இத்தலம்

அமைக்கப்பட்டதாக வரலாறு.

anna_oj000

போர் சென்ற தேவி

தேவியின் உறைவிடமான கிங்லே மலையை அடைந்து போருக்கு தனக்கு துணையாக வரும்படி வேண்டினான் பீமன். தேவியும் அவரது வேண்டுகோளை ஏற்று தன்னை கீழே தவற விட்டு விடாது, அவனது மடியில் அமர்த்தி கூட்டிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு உடன் வர சம்மதித்தார். பீமனும் அவ்வாறே தேவியை மடியில் ஏந்தி கூட்டிச் சென்றார். அப்போது வழியில் ஒரு பேரி மரத்தின் கீழ் இருக்கி விட அங்கேயே அமர்ந்தார் தேவி.

Nicolas Vollmer

ராஜமாதா கோவில்

மஹாபாரதப் போர் முடிவடைந்த போது, கௌரவர்களின் தாயாகிய ராஜமாதா காந்தாரி, இந்த பேரி மரத்தை கடந்து சென்ற போது, இங்கு ஓர் கோவிலைக் கட்டியுள்ளார். இத்தலம் பேரி மந்திர் என்று அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

anna_oj000

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்

அருங்காட்சியகம்

ஜஜ்ஜாரில் உள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்று குருகுல் தொல்பொருளியல் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், அலஹாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் நாணயங்களைக் காணலாம்.

jhajjar museum

மஹாபாரத காட்சிப்பொருட்கள்

இந்த அருங்காட்சியகத்தில் மஹாபாரத காலத்தை சித்தரிக்கும் பல்வேறு காட்சிப்பொருள்களையும் இங்கு காணலாம். அபிமன்யூ மாட்டிக்கொண்டு, உயிரிழந்ததாகக் கூறப்படும் சக்கரவியூகத்தின் ஓவியம், சதுரங்கப் பலகையின் ஓவியம் உள்ளிட்டவை உள்ளன.

jhajjar museum

பறவைகள் சரணாலயம்

ஜஜ்ஜார் நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பான வளமை பொங்கும் ஏரி, உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 250 இனங்களை உள்ளடக்கிய, சுமார் 35,000 வகை புலம்பெயர் நீர் பறவைகளை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

Priyambada Nath

Read More About: haryana temple india travel

Have a great day!
Read more...

English Summary

Beri devi mandir, History, Timings and how to reach