சாகா வரம் தரும் மூலிகைகள் கொண்ட காடு ! எங்க இருக்கு தெரியுமா?


சாகா வரும் தரும் மூலிகை என்ற ஒன்று இருக்கிறதா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால் இப்படியான சாகா வரும் தரும் மூலிகைகள் கொண்டு சித்தர்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துவருவதாக நிறைய பேர் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஒரு காட்டில் சாகா வரம் தரும் மூலிகை இருப்பதாக கூறப்படுகிறது. அனுமான் சஞ்சீவினி மலையை தூக்கிச் செல்லும்போது தவறி விழுந்த சில குன்றுகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் அதிக அளவு மூலிகைகளும், மரணத்தை வெல்லும் மருந்துகளும் இருப்பதாகவும் நம்பிக்கை உண்டு. ஆனால் இதை யாரும் அறிவியல் பூர்வமாக நிரூபித்தது இல்லை. என்றாலும் சாகாநிலை மூலிகை ஒருவரது எப்பேர்பட்ட நோயையும் குணப்படுத்திவிடும். அதன் உண்மையான குணத்தை அறிந்துதான் சித்தர்கள் எனப்படும் யோகிகள் நிறைய மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சரி. வாருங்கள் அந்த சாகா வரம் தரும் மூலிகை இருப்பதாக சொல்லப்படும் இடத்துக்கு போய் வரலாம்.

சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்கா

யமுனா நகரில் உள்ள ச்ஹுஹர்பூர் என்கிற கிராமத்தின் அருகே சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்படுகின்றன. மேலும் இது ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மூலிகைப் பூங்கா 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த சவுதாரி மூலிகை பூங்காவில் உலகின் பல பகுதிகளில் காணப்படும் மருத்துவ குணம் மிகுந்த தாவரங்கள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன.

wikipedia.org

எங்கே உள்ளது தெரியுமா

இந்த இயற்கை மூலிகைப் பூங்கா ஹரியானா மாநிலத்தில் இமயமலை அருகில் உள்ள ஷிவாலிக் மலைத்தொடர்களின் அருகே அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மருத்துவ மரங்கள், மூலிகைகள், புதர்கள், கொடிகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் போன்றவை வளர்க்கப்படுகின்றன. சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்கா சுமார் 184 ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகள்


உள்ளூர் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் மருத்துவ பயன்பாடுகளை மக்களுக்கு பரப்பும் நோக்கத்தில் இந்த இயற்கை மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு க்ஹைர், தேக்கு, ஸ்ஹிஸ்ஹம், மற்றும் ஸிம்பால் போன்ற மரம் மற்றும் செடிகளுடன், அஸ்வகந்தா, ஸஃபெட் முஸ்லி, சர்பகந்தா, வச்ஹ், பிராஹ்மி, சித்ராக், இஸப்கோல் போன்ற ஆயுர்வேத மருந்துகளும் காணப்படுகின்றன. மேலும் இங்கு துளசி, பிப்பலி, மகோய், பூமி அமலகி, பஹெரி, கெளர்பதா, ஹராட், அம்லா, பஎல், கலிஹரி, மஞ்சள், எலுமிச்சை புல், அதிமதுரம், சற்றுறோ மற்றும் பல்மரொஸ போன்ற இயற்கை மூலிகைகளும் காணப்படுகின்றன.

இந்த சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்காவில் பார்வையாளர்கள் மூலிகைகளைப் பற்றி எளிதாக தெரிந்து கொள்வதற்காக அறிவுப்புப் பலகைகள் அந்த மூலிகைகளுடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளை படித்து பார்க்கும் சுற்றுலா பயணிகள் மூலிகைகளைப் பற்றிய தங்களுடைய அடிப்படை அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள். கூடுதலாக, இந்த இயற்கை பூங்காவில் ஒரு தகவல் மையம், ஒரு சிறுவர் பூங்கா மற்றும் மூங்கில் குடிசை போன்றவைகள் உள்ளன.

Yathin S Krishnappa

வன விலங்கு சரணாலயம்


கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு தேசிய பூங்காவாக அறிவித்தது. அடிப்படையில் ஒரு சால் காடான இந்த தேசிய பூங்கா இமயமலை அடிவாரத்தில் உள்ள ஷிவாலிக் ஹில்ஸை சேர்ந்தது. சுமார் 11000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கலெஸர் தேசிய பூங்காவின் உயரம் 2000 அடியில் இருந்து 3,500 அடி வரை மாறுபடுகிறது.

N. A. Naseer

பறவை விலங்கினங்கள்


கலெஸர் தேசிய பூங்காவானது பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக உள்ளதால், இங்கு வரும் இயற்கை ஆர்வலர்களான சுற்றுலா பயணிகளூக்கு ஒரு உன்னத அனுபவத்தை வழங்குகிறது. இங்கு காட்டு பன்றிகள், சம்பார், முயல்கள், சிகப்பு காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, ச்ஹிதால் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன.

இங்கு வன விலங்குகளைத் தவிர க்ஹரி, சால், ஸ்ஹிஸ்ஹம், ஸைன், ஜ்ஹின்கான் போன்ற தாவரங்கள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன. இந்த தேசியப் பூங்கா சிந்தூர் மரங்களுக்கு மிகப் பிரபலமானது. இந்தப் பூங்காவானது அதன் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை தவிர்த்து, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கினிய இயற்கை காட்சிகளை விருந்தாக வழங்குகிறது.

இந்தப் பூங்கா வளாகத்தில் பிரிட்டிஷ் காலனி காலத்தை சேர்ந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான பங்களா ஒன்று உள்ளது. பார்வையாளர்கள் இந்த தேசிய பூங்காவில் உள்ள வன விருந்தினர் வீட்டில் இருந்து யமுனா நதியின் அழகிய பார்வையை பெற முடியும். இந்த பங்களா அழகான தோட்டங்கள் மத்தியில் உள்ளது. மேலும் இந்த பங்களாவானது உயர்ந்த கூரை, தேக்கு மரப் பலகைகளால் செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள், மற்றும் அழகு வேலைப்பாடு அமைந்த தரை விரிப்புகளையும் பெற்றுள்ளது.

இதைத் தவிர இங்கு ஒரு வசதியான நெருப்பிடம் மற்றும் பழங்கால மேஜை மற்றும் நாற்காலிகளையும் காணலாம். இந்த கலெஸர் தேசிய பூங்காவின் வெவ்வேறு பகுதிகளி எட்டு தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகள், இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறிவிடாமல் பாதுகாக்கிறது.

Srikaanth Sekar

Have a great day!
Read more...

English Summary

Chaudhary devi lal herbal nature park - Where & how to go?