லிங்க வடிவ விநாயகர்..! விழுதில்லா ஆலமரம்..! அதிசயம் நிறைந்த ஆலயம் போலாமா ?


நம் நாட்டில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசயம் நிறைந்த நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலேயே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல் பூர்வமாக விஞ்ஞாணிகளால் கூட தீர்வுகிடைக்காத வகையில் இன்றளவும் ஓர் மர்மம் நிறைந்த அதிசயங்களாகவே உள்ளன. இதில், கடவுள்களின் திருவுருவங்களும், அச்சிலை அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிகழம் மர்ம சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், இங்கே ஓர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை லிங்க வடிவில் இருப்பதும், துதிக்கையற்ற அத்திருவுருவத்தைப் போலவே அருகில் உள்ள மூன்று ஆலமங்களிலும் விழுதுகள் இல்லாமல் இருப்பது பல மர்மங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. சரி வாருங்கள், அக்கோவில் எங்கே உள்ளது ? எப்படி உள்ளது என சுற்றிப்பார்ப்போம்.

எங்கே உள்ளது ?


விருப்புரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 41 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீவனூர் வட்டம். இப்பகுதியேலே இந்த அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த அருள்மிகு நெற்குத்தி விநாயகர் ஆலையம் அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 77-யில் சுமார் 11.7 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்திருத்தலத்தை சென்றடையலாம்.

IM3847

தல சிறப்பு


தமிழகம் மட்டும் இன்றி நாட்டில் வேறெங்கும் காணக்கிடைக்காத விநாயகர் திருவுருவம் இங்கே அமைந்துள்ளது. பிற பகுதிகளில் விநாயகர் யானை வடிவில் காணப்படுவார். ஆனால், இத்தலத்தில் விநாயகர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும், இக்கோவிலின் அருகே உள்ள மூன்று ஆலமரத்திலும் விழுதுகள் இல்லாமல் இருப்பது வியக்கத்தகுந்ததாகும்.

Magiceye

திருவிழா

விநாயகருக்கு உகந்த நாளான விநாயகர் சதுர்த்தியன்று இந்தக் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத் தவிர்த்து வருடத்தின் ஒரு முறை இருவார காலத்திற்கு ஊர்மக்களின் சார்பாக திருவிழா எழுப்பப்படுகிறது. இதில், உள்ளூர் மட்டும் இன்றி சுற்றுவட்டாரத்தில் இருந்தும் விநாயக பக்தர்கள் படையெடுத்து வருவது வழக்கம்.

பா.ஜம்புலிங்கம்

நடைதிறப்பு


அருள்மிகு நெக்குத்தி விநாயகர் திருக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.

பா.ஜம்புலிங்கம்

வழிபாடு


நீண்ட வருடங்கள் கடந்தும் திருமணம் நடைபெறாமல் ஏங்குவபர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து விநாயகருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து வேண்டிச் செல்ல விரைவில் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம், கல்வி மேன்மையடையவும் இவரை பிரார்த்திக்கலாம்.

Jayabharat

நேர்த்திக்கடன்


வேண்டியவை நிறைவேறியவுடன் லிங்க விநாயகருக்கு புது வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

Mahinthan So

பெயர்க் காரணம்


தீவனூரைக் சேர்ந்த சிறுவர்கள் சிலர் வயல்களில் பறிந்த நெற்களை உடைப்பதற்காக கல்லைத் தேடிக் கொண்டிருந்த போது காட்டுப்பகுதியில் ஒரு கல் தென்பட்டுள்ளது. ஆனால் அதைக் கொண்டு நெற்களை குத்த முடியவில்லை. அக்கல்லை வைத்துவிட்டு வேறு கல்லை எடுத்து வந்து பார்க்கையில் அரிசியும், உமியும் தனித்தணியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்த அச்சிறுவர்கள் அந்தக் கல்லை பத்திரப்படுத்தி வைத்தனர். அடுத்த நாள் அந்தக் கல்லை தேடிச் சென்ற நிலையில் அது காணவில்லை. பின் அருகில் இருந்த குளத்தில் இருந்த அந்தக் கல் சிறுவர்களால் மீட்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறந்த ஊர் மக்கள் அந்தக் கல்லில் விநாயகரின் தோற்றத்தைக் கண்டு அதனைக் கொண்டு கோவில் எழுப்பினர். இதனாலேயே அந்த விநாயகருக்குபிற்காலத்தில் நெற்குத்தி விநாயர் என பெயர்வைக்கப்பட்டது.

Chetuln

பொய்யாமொழி விநாயகர்


ஒரு நாள் மிளகு வியாபாரி ஒருவர் இக்கோவிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வந்த சிலர் விளக்கு ஏற்றுவதற்காக வியாபாரியிடம் மிளகு கேட்டனர். அப்போது அவர் இந்த மூட்டையில் மிளகு இல்லை என்றும், பருப்புதான் உள்ளது என்றும் கூறியுள்ளார். பின், சந்தைக்குச் சென்று மூட்டையைப் பார்த்த போது அதில் மிளகிற்கு பதிலாக பருப்பு இருந்துள்ளது. அதிர்ந்துபோன வியாபாரி விநாயகரிடம் தனது தவறை உணர்ந்து வேண்டிய பின் மீண்டும் மிளகாக மாறியது. இதன் பின் நெற்குத்தி விநாயகர் பொய்யாமொழி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்கள், ஏமாற்றுபவர்கள் இத்தலத்தில் வைத்து விநாயகர் மீது சத்தியம் செய்யக் கூறுவது இன்றளவும் இப்பகுதயில் நடைமுறையில் உள்ளது.

Harish Aluru

எப்படிச் செல்வது ?


விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலையில் பயணிக்க வேண்டும். விக்கிரவாண்டி, பேரணி, பெரமன்தூர் கடந்தால் ஆகூர் முன்னதாக உள்ள தீவனூரில் அமைந்துள்ள நெற்குத்தி விநாயகர் திருக் கோவிலை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 77யில் செஞ்சி சாலையில் சுமார் 11.7 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்லத்தை அடையலாம். இத்தலத்திற்கு அருகிலேயே ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம், ஸ்ரீ சிவ காலியம்மன் கோவில், வேம்பாத்தம்மன் கோவில், மகா விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ளன. நேரம் இருப்பின் இக்கோவிலுக்கும் சென்ற வழிபட்டு வரலாம்.

Read More About: villupuram tamilnadu temple travel

Have a great day!
Read more...

English Summary

Let's Go This Sri Poyyamozhi Vinayagar Near Villupuram