அஸ்ஸாமில் இப்படியும் ஒரு நகரம்... போய் பார்த்தா வாயை பிளந்துடுவீங்க!


சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். சிப்சாகர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம். கிட்டதட்ட100 ஆண்டுகளுக்கு சிப்சாகர் நகரம், அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியிருக்கிறது. இதன் வரலாறு பற்றியும், சுற்றுலாத் தளங்கள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

சிப்சாகர் தொட்டி

இந்த ஊரில் 129 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு செயற்கையான நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இதற்கு சிப்சாகர் தொட்டி என்று பெயர். இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி தான் சிப்சாகர் நகரம் அமையப்பெற்றுள்ளது. சிப்சாகர் நகரில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அஹோம் சாம்ராஜய காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த நினைவுச் சின்னங்கள் சிப்சாகர் நகரின் பெருமிதமாக விளங்குகின்றன.

anas shaikh

வரலாற்று சிறப்பும் வளமான நகரமும்


வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக இருந்த சிப்சாகர், இப்பொழுது எண்ணெய் வளம் தேயிலை வளம் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல தலங்கள் இங்கு உள்ளன. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக, அஹோம் சாம்ராஜ்யத்தினர், அசாமை ஆட்சி புரிந்திருக்கின்றனர். பிறகு, 1817-ஆம் ஆண்டு பர்மா நாட்டவர்களால் அஹோம் சாம்ரஜ்யம் வீழ்ந்தது. அதன் பிறகு, சிப்சாகர் பிரிட்டிஷ் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், நிர்வாக சீரமைப்பிற்காக, சிப்சாகர் மூன்று துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

Dhrubazaanphotography

சுற்றுலாத் தளங்கள்


சிப்சாகரை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் சிப்சாகர் நகரம், வெகுகாலமாக அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்ததால், அஹோம் தொடர்பான நினைவுச் சின்னங்களை இங்கு அதிகமாக காண முடிகிறது. மிக பிரம்மாண்டமான சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டி சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் இடமாகும். சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தத் நீர்தேக்கத் தொட்டி, நகரின் உயரத்தைவிட அதிகமாக இருக்கிறது.

Gitartha Bordoloi

கோவில்களும் அரண்மனைகளும்


மேலும், சிவ டால், விஷ்ணு டால் மற்றும் தேவி டால் என்ற மூன்று முக்கிய கோவில்கள் இங்கு உள்ளன. 1734-ஆம் ஆண்டு ராணி மாதாம்பிகா, இந்த மூன்று கோவில்களையும் கட்டினார். சிப்சாகரை சுற்றிப் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தளதாள் கர், கரேங் கர் மற்றும் கர்காவோன் அரண்மனை போன்றவை சிப்சாகர் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகளாகும். 7 மாடிகளைக் கொண்ட அரண்மனையின் கீழ்தளத்தை தளாதள் கர் என்பர். இங்கு இரண்டு ரகசிய சுரங்கப்பாதைகள் உள்ளன. அதற்கு மேலே உள்ள மாடிகளை கரேங் கர் என்பர். சிப்சாகர் நகரில், ரங் கர் எனும் பெரிய அரங்கம் உள்ளது. இதன் மேற்கூரை, தலைகீழாக இருக்கும் படகினைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Dkonwar

சிப்சாகர் நகரை எப்படி அடைவது ? எப்போது செல்வது?


சிப்சாகர் செல்லும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. சிப்சாகர் செல்ல சாலை வசதி சிறப்பாக உள்ளதால், பேருந்து அல்லது கார் மூலம் எளிதில் செல்ல முடியும். சிப்சாகரில் இருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிமால்குரி ரயில் நிலையம். சிப்சாகரில் விமான நிலையம் இல்லை. ஆனால், 55 கிமீ தொலைவில் இருக்கும் ஜோர்ஹாட்டில் விமான நிலையம் உள்ளது.
சிப்சாகரின் வானிலை சிப்சாகர் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்திலும் செல்லலாம். மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம் சிப்சாகர். இங்கு வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியசும் இருக்கும்.

Achintadu

Read More About: travel temple

Have a great day!
Read more...

English Summary

Places to Visit in Sivasagar, Attractions and Things to do