சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..! நெருங்கினால் என்னவாகும் தெரியுமா ?


ஒவ்வொரு கோவிலுக்கும், கோவிலில் உள்ள திருவுருவச் சிலைக்கும், அல்லது அத்தலம் அமைந்துள்ள ஊரில் ஏதாவது தனிச் சிறப்பு இருக்கும். உதாரணம், பழனி நவபாஷாண சிலையைக் கூறலாம். சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை விஷக்கூற்றுகளால் செய்யப்பட்ட மருத்துவத் தன்மை கொண்டதாக இருக்கிறதல்லவா. அதுபோல தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில இன்னும் பல கோவில்கள் பல பெருமைகளை தன்னுள் கொண்டுள்ளது. இதேப் போல மகத்துவத்தைக் கொண்ட சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் எங்னே உள்ளது ? கிட்ட நெருங்கினால் என்னவாகும் என தெரியுமா ?.

எங்கே உள்ளது ?


விழுப்புரத்தில் இருந்து சுமார் 96 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளக்குறிச்சி அடுத்து தென்பொன்பரப்பியில் அமைந்துள்ளது அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையை அடைந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும். தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, இந்திலி, சின்னசேலத்தைக் கடந்தால் வாசுதேவனூருக்கு முன்னதாக உள்ள இக்கோவிலை அடைந்து விடலாம்.

russavia

சிறப்பு


நவபாஷாணத்திற்கு ஈடான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் இத்திருத்தலத்தில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. பால், சந்தனம், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யும்போது லிங்கம் இளம் நீலநிறமாக மாறுவதைக் காணலாம். ஆவணி மற்றும் பங்குனி மாத உத்திரத்தில் காலை 6 முதல் 7 மணி வரை சூரிய கதிர் ஒளிகள் பாலநந்தியின் கொம்புகளின் இடையே நுழைந்து கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படர்வதைக் காணலாம். மேலும், இத்திருத்தலத்தில் பீடங்கள் மீது சுமார் 5.5 அடி உயரத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு அருள்பாலிக்கின்றனர்.

Pavan santhosh.s

திருவிழா


சிவபெருமானுக்கு உகந்த நாட்களான ஆவணி, பவுர்ணமி, பங்குனி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அழங்காரத்துடன் பிராத்தனை செய்யப்படுகிறது.

BotMultichillT

நடைதிறப்பு


பிற சைவ வழிபாட்டுத் தலங்களில் காலை மாலை என இரு வேலைகளில் நடை திறக்கப்படும். உச்சி பகல் பொழுதில் கர்ப்பகிரகத்தின் நடை மூடப்படும். ஆனால், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவிலின் நடை காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

Vinayaraj

தலஅமைப்பு


கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகத்துடன் காட்சியளிக்கும் முருகன், 12 கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். குருபகவான் மற்றும் துர்க்கைக்கு தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன. சன்னதி வாசலில் பிற கோவில்களில் காணப்படுவதைப் போல் துவாரபாலகர்களுக்கு பதிலாக இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்றுச்சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

G41rn8

வழிபாடு

கடல் தொல்லை நீங்க, உடல் ஆரோக்கியம் பெற, தோஷங்கள் விலகி திருமணம் நடைபெற இத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. தவிற, ராகு, கேது உள்ளவர்கள், கால சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

Bijay chaurasia

நேர்த்திக்கடன்


பொள்ளாச்சி மாசானியம்மன் கோவிலில் உள்ள கல்லில் மிளகாய் அரைத்து பூசி வேண்டுவதைக் கேள்விப்பட்டிருப்போம். அதேப் போல சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பாணலிங்கத்திற்கு பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபட்டால் கல்வி சிறந்து வரும் என்பது தொன்நம்பிக்கை. வேண்டியவை நிறைவேறியதும், சிவனுக்கு தேனில் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

Nsmohan

புராணக் கதை


இக்கோவிலானது பஞ்சபூத தலத்திற்கு இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக் கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையின் மையத்தில் அமைந்திருக்கும் தீபம் இன்றும்கூட துடிப்புடன் இருப்பதைக் காணலாம். சித்தர்களின் குருவாக கருதப்படும் காகபுஜண்டர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருந்து அத்தவத்தின் பயணாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்கத்தை பெற்றார். அதுவே இத்தலத்தில் உள்ள லிங்கமாகும்.

Nataraja

எப்படிச் செல்வது ?


விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வழியாக 96 கிலோ மீட்டர் பயணித்தாலும், திருக்கோவிலூர் வழியாக 103 கிலோ மீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது தென்பொன்பரப்பி சிவன் கோவில். விழுப்புரம் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இருந்து இப்பகுதியை அடைய பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

Read More About: villupuram temple tamilnadu travel

Have a great day!
Read more...

English Summary

Swarnaburishwarar Temple : Visit This Temple Near Villupuram