இளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா? என்ன காரணமா இருக்கும்!


வென்குர்லா. அழகிய அட்டகாசமான பயணம் பற்றி இந்த பதிவில் காண்போம். இதன் சிறப்பே கோவாவுக்கு பக்கத்தில் இது இருப்பதுதான். அடுத்தமுறை கோவா செல்லும்போது இங்கு சென்றுவிட்டு வாருங்களேன். திட்டமிட்டு பல நாட்கள் ஆகின்றன. இன்னும் கோவா சென்ற பாடில்லை என்று அலுத்துக்கொள்பவர்களும் சரி, புதிதாக திருமணமானவர்களும் சரி, இல்லை உங்கள் காதலியை முதன்முறையாக நீண்ட தூர சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்பவராக இருந்தாலும் சரி, நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான்.. அது வென்குர்லாவுக்கு கூட்டிச் செல்வது. அடடே அதுக்கு நாங்க கோவாவுக்கு கூட்டிட்டு போய்டுவோமே என்கிறீர்களா.. இதை முழுவதும் படித்து முடித்தால், கோவா வேண்டாம் வென்குர்லா போலாம் என்பீர்கள். சரி வாங்க திட்டம், வழிகாட்டி, செய்யவேண்டியவை, எப்படி செல்வது போன்ற தகவல்களுடன், வென்குர்லாவின் அழகினையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

எங்கே இருக்கிறது


இந்திய திருநாட்டின் மேற்கு கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது சிந்துதுர்க் எனும் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு இடம்தான் வென்குர்லா. இது கோவாவிலிருந்து சற்று தொலைவிலேயே அமைந்துள்ளது. இங்கு காண்பதற்கு நிறைய இடங்களும், மகிழ்வதற்கு நிறைய தருணங்களும் காத்திருக்கின்றன வாருங்கள் செல்வோம்.

Nilesh2 str

எப்படி செல்வது

பெங்களூருவில் இருந்து வென்குர்லா தூரம் - 631 கிமீ

சென்னையில் இருந்து வென்குர்லா தூரம் - 984 கிமீ

மும்பையில் இருந்து வென்குர்லா தூரம் - 547 கிமீ

ஹைதராபாத்தில் இருந்து வென்குர்லா தூரம் - 689 கிமீ

இப்படி தென்னிந்திய மாநிலங்களின் தலைநகரிலிருந்து குறிப்பிட்ட தூரங்களில் அமைந்துள்ளது இந்த இடம். கேரள மாநிலத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் மங்களூரு வழியாக செல்லுங்கள்.

மற்றபடி, நீங்கள் பெங்களூரு வழியாக செல்லவிரும்பினால் அதற்கான பயண வழிகாட்டி இங்கே தருகிறோம்.

Nilesh2 str

பயணவழிகாட்டி

11 மணி நேர பயணம்... 631 கிமீ ... பெங்களூரிலிருந்து அடிக்கடி பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன. இது கோவா செல்லும் வழியில் இல்லை. ஆனால் கோவாவிலிருந்து இங்கு செல்லமுடியும்.

சாலை மூலம் சுய வாகனத்தில் நீங்கள் செல்லவிரும்பினால்,

பெங்களூரிலிருந்து தும்கூர், சிரா, ஹிரியூர், சித்ரதுர்கா, தவாங்கரே, ஹப்பள்ளி, பெலகாம், சாந்த்கட் வழியாக வென்குர்லாவை அடையமுடியும்.

விமானம் மூலமாக

அருகாமையில் இருக்கும் விமான நிலையம்

இந்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையம் டபோலிம் ஆகும். இது கோவாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற விமான நிலையங்களில் ஒன்று.

தொலைவு

இது டபோலிம் விமான நிலையத்தி லிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Nilesh2 str

ரயில் மூலமாக


அருகிலுள்ள ரயில் நிலையம்

இந்த பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கொங்கன் ரயில்வே கூடல் ரயில் நிலையமாகும்.

தொலைவு

இந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் அமைந்துள்ள கூடல் பகுதி 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Nilesh2 str

வெண்குர்லா பற்றிய தகவல்கள்

சிந்துதுர்க் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் இந்த வென்குர்லா. இது கிராமம் என்றாலும் நகரத்தில் இல்லா இயற்கை பேரழகை இங்கு கொண்டுள்ளது. இது மிகவும் அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பல தருணங்களைச் சுமந்து கொண்டிருக்கும் கடற்கரை ஆகும்.

காற்றில் ஆடும் காதல் ஒலிகள் பல இங்கு வந்தவர்களின் சுவடுகளை நமக்குள்ளும் உணர்வுகள் மூலமாக ஊட்டும். உங்கள் காதலி காதலனுடன் செல்ல சிறந்த ஒரு இடம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

Nilesh2 str

என்னவெல்லாம் இருக்கு

இயற்கை அழகையும், கடற்கரையையும், அழகிய பல இடங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது இந்த இடம். அரை வட்ட வடிவிலான மலை ஒன்றால் சூழப்பட்டு, காண்பதற்கு பச்சை நிறத்தில் அமைந்திருக்கும் மலையும், நீல நிற கடலும் அழகியலுக்கு புதியதொரு வரையறை எழுதும் அளவுக்கு சிறந்திருக்கும்.

வடக்கு பகுதியில் டபோலி மலை, தெற்கு பகுதியில் மச்சோமெட் மலை, கிழக்கில் இருப்பது துலாஸ் மலை, மேற்கில் அரபிக் கடல் என இந்த இடத்தை அப்படியே சொர்க்கம் என்று பெயரிட்டு இந்திரனுக்கு எழுதிக் கொடுத்துவிடலாம். உண்மையில் நீங்கள் இங்கு சென்றால், ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி போட்டுவிடலாமா என்றே தோன்றும்.

Nilesh2 str

காணப்படும் இடங்கள்


இந்த இடத்தில் காணவேண்டிய சில இடங்களும் இருக்கின்றன. அவை சிரோடா, ரெடி மலை, ரெடி விநாயகர் கோவில், ஸ்ரீமவுலி கோவில், சுயம்புமகாதேவ கோவில், ரெடி கோட்டை என நிறைய இடங்கள் அருகிலேயே அமைந்துள்ளன.

Nilesh2 str

Read More About: travel goa

Have a great day!
Read more...

English Summary

Vengurla Travel Guide, Places to Visit, Sightseeing & How to reach