மாதவிடாய் சிக்கல் தீர்க்கும் அதிசய பெண் விநாயகர் - எங்கே தெரியுமா?


பெண் தெய்வங்கள் பலரை நாம் வணங்கி வருகிறோம். எல்லாம் சக்தியின் ரூபங்களாக அருள்பாலிக்கும் தெய்வங்கள் ஆவர். இடத்துக்கு தகுந்தார்போல பெயர்களைக் கொண்டு அருள்பாலிக்கும் பெண் தெய்வங்கள் மிகுந்த சக்திவாய்ந்தவர்களாகவும் அதிக புகழ் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் ஆண் தெய்வமே பெண்ணாக உருமாறி அதை வணங்கியிருக்கிறோமா.. அப்படி ஒரு தெய்வம்தான் கணேசி, விநாயகி என்று பெண் பெயரில் அழைக்கப்படும் விநாயகர். இந்த விநாயகர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயில் ஒன்றில் அமர்ந்து அருள் புரிகிறார். வாருங்கள் அந்த கோயிலுக்கு சென்று வருவோம்.

எங்கேயுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில், கன்னியாகுமரியிலிருந்து அம்மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயில் செல்லும் வழியில் நாகர்கோயிலுக்கு சற்று முன் அமைந்திருக்கும் சுசீந்திரம் எனும் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் தாணுமாலயன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

Vinayaraj

திருவாங்கூர் சமஸ்தான கோட்டை

தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலமாக விளங்கக் காரணம், இங்கு அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் ஆகும். இந்நகரமே பழங்கால திருவாங்கூர் சமஸ்தான கோட்டையாக விளங்கியது.
.
Ssriram mt -

திருவிழாக்கள்


இங்கு மார்கழித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து பலமக்கள் இவ்விழாக்களில் பங்கு கொள்கின்றனர். மார்கழித் திருவிழா டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளான ஒன்பதாவது நாளன்று, இந்து சமய கடவுளரின் சிலைகள் தேர்களில் ஏற்றப்பட்டு நகர் முழுதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

Ganesan

அருகாமையிலுள்ள இடங்கள்

மற்றொரு திருவிழாவான சித்திரைத்திருவிழா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாணுமாலயன் ஆலயம் மட்டுமின்றி துவாரகைக் கிருஷ்ணர் கோவில், முன்னூற்றிநங்கைக் கோவில், சாஸ்தா ஆசிரமக் கோவில், கருப்பசாமி கோவில், தம்புரான் தம்புராட்டி கோவில், அக்கரைக் கோவில், அனுசூயா ஆத்ரி முனிவர் ஹோமகுண்டம், முத்தாரம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், பேரம்பலம் நடராஜர் கோவில் போன்ற பல கோவில்கள் இந்நகரத்தில் உள்ளன.

Vishakrs

மும்மூர்த்திகள்

தாணுமாலயன் சுவாமி ஆலயத்தில், மூன்று இந்துக் கடவுள்கள்( சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன்), ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருக்கும் விஷேசத்தாலேயே புனித யாத்திரை மேற்கொள்வோரை வெகுவாகக் கவரக் கூடிய இடமாக இது உள்ளது. சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் மற்றும்
சுசீந்திரத்திற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற குளச்சல் என்ற நகரம் ஆகியவை மக்களைக் கவரக்கூடிய இடங்கள் ஆகும்.

Ssriram mt

எப்போது எப்படி செல்லலாம்?


சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ஆகும். தென்னிந்திய நகரங்களிலிருந்து நேரடியாக பேருந்து மூலமும் சுசீந்திரம் செல்லலாம்.

இந்நகரத்தில் கோடைகாலங்களில் மட்டும் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இதர காலங்களில் ஒரே மாதிரியான சீரான வெப்பநிலையே நிலவுகிறது.

Kkdrua

மாதவிலக்கு தீர்க்கும் பெண் விநாயகர்

இங்கு வந்து 8 வாரங்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால், பெண் விநாயகரின் அருளைப் பெறலாம். மேலும் அவரது கருணையினால் மாதவிடாய் சம்பந்தமான சிக்கல்கள் விரைவில் குணமடையும்.

இதே கோயிலில் 22 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

AswiniKP

Have a great day!
Read more...

English Summary

Vinayaga in Female version - A real lady ganesha in kanyakumari