Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த்நாக் » வானிலை

அனந்த்நாக் வானிலை

அனந்த்நாக் சுற்றுலா வருவதற்கு மே முதல் செப்டம்பர் வரையிலான காலங்கள் சிறந்தது.  இந்த காலகட்டத்தில் வெப்ப நிலை இனிமையாகவும் சுற்றிப் பார்க்க தோதாகவும் இருக்கும். இரவுகளில் குளிர் அதிகரிப்பதால் பயணிகள் லேசான கம்பளி ஆடைகளை கொண்டு வருவது நல்லது.

கோடைகாலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட்): கோடைக்காலம் ஜூன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகப்பட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 4 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். இந்த காலத்தில் நிலவும் வெப்ப நிலை அனந்த்நாக்கை சுற்றி பார்க்க மிகவும் பொருத்தமானது.

மழைக்காலம்

(செப்டம்பர் முதல் நவம்பர்): இலையுதிர் காலம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் இங்கு வருபவர்கள் குளிர்ச்சியான மற்றும் இனிமையான வெப்ப நிலையை அனுபவிக்கலாம். இக்காலத்தில் இங்கு வருபவர்கள் குளிருக்கு உண்டான உடைகளை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் இரவு நேரத்தில் உறைய வைக்கும் அளவு குளிர் இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி): குளிர்காலம் டிசம்பர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் வெப்ப நிலை 0 டிகிரி செல்சியசுக்கு கீழே போய் விடும். அப்போது பலமான பனிமழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாக இருக்கும்.